ஏப்ரல் 27, 2012

குறளின் குரல் - 21


April 27, 2012

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
                            (குறள் 9: கடவுள் வாழ்த்து அதிகாரம்)

Transliteration:
kOLil poRiyin guNamilavE eNgunathAn
thALai vaNangAth thalai

kOLil – purposeless, aimless
poRiyin – the senses (five senses)
guNamila – lacking in virtue (for which they are given to us)
vE eN gunathAn – Godhead with the desirable virtues
thALai  - the feet
vaNangAth – does not bow to the (feet)
thalai – head (implied if the thinking part has the humility, the rest of the body will function properly)

Our senses without the principle or understanding of the purpose, can not function properly for what they are ordained for. Same is true for the head that can not bow to the feet of God head with desirable virtues.

When I was trying to understand the meaning of this verse, felt a bit confused about the mention of eight virtues that the other commentaries have alluded to, which did not seem to add up in comparison to the previous verses of vaLLuvar.

The theological perspective always puts the Godhead as one without any attributes or simply beyond all attributes.  If the words are split at wrong places, then the meaning of what is written will also be accordingly interpreted, mostly wrongly. The same must be true of “vE eN” which is same as “vEN” meaning, desirable. Now the word means, ‘The Godhead with all desirable virtues’

Once again the verse of “thirunAvukkarasar” comes to mind. In one of his “thEvArams”, he lists the use of head, eyes, ears, nose, mouth, heart, hands, body and the legs in that order (“தலையே நீ வணங்காய் – thalaiyE nI vaNangAi, கண்காள் காண்மின்களோ – kangAL kANmingaLO, செவிகாள் கேண்மின்களோ – sevigAL kEnmingaLo, மூக்கே நீ முரலாய்- mUkkE nI muralAi, வாயே வாழ்த்து கண்டாய் – vAyE vAzhthukaNdAi, நெஞ்சே நீ நினையாய்- nenjE- nI nianaiyAi, கைகாள் கூப்பித்தொழீர் – kaigAL kUppithozhIr, ஆக்கையாற்பயனென் – AkkaiyAR payanen, கால்களாற் பயனென் – kAlgaLAl payanen )

Each of these eight external parts fullfil the needs of our five senses. All of them are directed by the head which thinks properly. So, the primary and first emphasis is given to head and he commands the head to bow to the knowledge supreme. If head is able to bowdown, the other parts will do their respective functions properly is what is inferred.

“The head that does not worship the God of desirable virtues
  Is as useless as our senses that function withour purpose”

தமிழிலே:

கோளில்  - கொள்கையும் கோட்பாடும் (நிலைப்பாடு இது இதற்காக என்கிற உறுதி)
பொறியின் – ஐம்புலன்களான கண், செவி, வாய், நாசி, மெய் இவற்றில்
குணமில  -  பயனொன்றும் இல்லை
வே எண்  - விரும்பத்தக்க, விழைதலுக்குரிய
குணத்தான் – குணநலன்களைக் கொண்ட இறைப்பொருள்
தாளை - அடிகளை
வணங்காத் தலை – வணங்காத சிரம். (தலையென்றது சிந்திக்கும் கருவி, அதில் இறையுண்மை அறிய பணிவும், வணக்கமும் உண்டாகும்

கோட்பாடு, கொள்கையில்லாத புலன்களின்கண் அவற்றுக்கான உரிய பயன்பாடு எதுவுமில்லை. அதேபோன்றதே விரும்பத்தக்க குணங்களை உடைய இறைப்பொருளின் சிறந்த அடிகளை வணங்காதார் தலையும்.

இக்குறளுக்கு பொருள் எழுதியவர்கள் எல்லோருமே எண்குணத்தான் என்று தவறாகப் பிரித்து பொருள் எழுதியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.. “வேண்” என்பது வெண்பா வாய்பாடமைதிக்காக “வே எண்” என்று எழுதப்பட்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.  “வேண்” என்பது விருப்பம், அவா என்று பொருள் தரும். இறைவன் “வேண் குணத்தான்” – விரும்பத்தக்க குணநலன்களைக் கொண்டவன்.

இது தமிழில் இருக்கக்கூடிய ஒரு கவிமுறைதான்.  இல்லையென்றால், முதல்பகுதியான “ கோளில் பொறியின் குணமில”-வோடு, “வே” என்ற விகுதி சேர்க்கை பொருள் பொதிந்ததாக இல்லை.  அதையும் பொருள் உள்ளதாக எண்ணினாலும், எண்ணற்ற குணமுடையவனாக இருக்கிற, அல்லது எந்தவித குணப் பாகுபாடும் இல்லாத இறைவனை எண்குணத்தான் என்று ஒரு எண்ணுக்குள் எண்ணுவது வள்ளுவரின் எண்ணத்தில் வந்திருக்கக்கூடியது அல்ல.

மீண்டும் திருநாவுக்கரசரின் “தலையே நீ வணங்காய்” என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது.
“தலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ, செவிகாள் கேண்மின்களோ, மூக்கே நீ முரலாய், வாயே வாழ்த்து கண்டாய், நெஞ்சே நீ நினையாய், கைகாள் கூப்பித்தொழீர், ஆக்கையாற்பயனென், கால்களாற் பயனென்” என்று ஒவ்வொரு பயனுடை புற கரணங்களையும் விளித்து அவைகளுக்குண்டான இறைப்பொருளைச் சார்ந்த கடைமைகளைக் கூறுகிறார்.

இவரும் முதன்மையாகத் தலையைத்தான் சொல்லுகிறார்.  தலையென்பது சிந்திக்கும் மூளையுளது, அதனுடைய ஆட்சியில்தான் மற்றவுறுப்புகள் இயங்குகின்றன. அது உண்மையான இறைப் பொருளை அறிந்து, பணிவுடன் இருந்துவிட்டால், மற்றவுறுப்புகள் தாமாக அவ்வவற்றுன் பயனைச் சரிவர செய்துவிடும்.

இன்றெனது குறள்(கள்):
நிறைகுணத்தான் நீள்தாளை நெஞ்சில் வணங்கார்
குறைகுணத்த ஐம்புலத்தார் போல்

இந்தகுறளினை எழுதிய பிறகு, புற கரணங்களுக்கு (ஐம்புலன்கள்), அக கரண (நெஞ்சம்)  உவமை சரிவரப் படவில்லையாதலால், சிறிது மாற்றி எழுதப்பட்ட குறள்.

நிறைகுணத்தான் நீள்தாள் வணங்கார் சிரம்வீண்
குறைகுணத்த ஐம்புலன்கள் போல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...