ஜனவரி 09, 2016

அனுமனைத் துதிப்போம்..

அனுமன் ஜெயந்தி:

அஞ்சனை மைந்தன் அனுமானே ஆற்றல் அளித்திடுவான்
அஞ்சுதல் போக்கி அகத்தை உறுதியாய் ஆக்கிடுவான்
அஞ்சுமாப் பூதத்தால் ஆய அவத்தை  அறுத்துலகில்
அஞ்சும டங்கிட ஆறளிப்  போன்தாள் அணிதலையே

añcaṉai maintaṉ aṉumāṉē āṟṟal aḷittiṭuvāṉ
añcutal pōkki akattai uṟutiyāy ākkiṭuvāṉ
añcumāp pūtattāl āya avattai  aṟuttulakil
añcuma ṭaṅkiṭa āṟaḷip  pōṉtāḷ aṇitalaiyē

ஜனவரி 07, 2016

கட்டளைக் கலித்துறை ஷோடஸ கணபதி (முழுவதும் + கவிப்பயனுடன்)

1. சுமுகன் (இன்முகன்)

ஆனந்த இன்முகம் அன்புடன் காட்டிடும் ஆனைமுகம்
வானவர் போற்றிடு வாரணம் பூரண வாழ்வருளும்
ஏனமும் ஊனமும் இன்றிட வேண்டுவோர் ஏற்றமுற
மோனத் தொடுஞானம் மொய்ம்புகழ் ஈயும் முழுமுதலே

ஏனம் - குற்றம்

āṉanta iṉmukam aṉpuṭaṉ kāṭṭiṭum āṉaimukam
vāṉavar pōṟṟiṭu vāraṇam pūraṇa vāḻvaruḷum
ēṉamum ūṉamum iṉṟiṭa vēṇṭuvōr ēṟṟamuṟa
mōṉat toṭuñāṉam moympukaḻ īyum muḻumutalē

2. ஏகதந்தர் (ஒற்றைத்தந்தன்/ஒற்றைக் கொம்பன்)

ஒடித்தொரு கொம்பால் உயர்காவி யங்கீறு உன்னதனை
வடிவைத் துறப்பினும் வாழ்வை பிறர்கீயும் வாரணனை
பிடிக்கப் பதந்தரும் பேறாம்மொற் றைத்தந்தப் பிள்ளையினை
விடிவைத் தருகின்ற வேழத்தை நாளும் விரைமனமே

கீறு - எழுது
     
oṭittoru kompāl uyarkāvi yaṅkīṟu uṉṉataṉai
vaṭivait tuṟappiṉum vāḻvai piṟarkīyum vāraṇaṉai
piṭikkap patantarum pēṟāmmoṟ ṟaittantap piḷḷaiyiṉai
viṭivait tarukiṉṟa vēḻattai nāḷum viraimaṉamē

3. கபிலன் (சிவந்த நிறத்தன்)

பொல்லாக் கஜமுகன் பொன்றச்செங் காட்டில் பெருங்குருதி
நில்லாமல் பாய்ந்துன் நிறமே சிவந்த நிறைபொருளோய்
நல்லவை தந்தெம்மை நாளும் புரப்பாய் நலமளிக்கும்
வல்லபை நாயகா வாழவை வாதாபி வாரணமே      

pollāk kajamukaṉ poṉṟacceṅ kāṭṭil peruṅkuruti
nillāmal pāyntuṉ niṟamē civanta niṟaiporuḷōy
nallavai tantemmai nāḷum purappāy nalamaḷikkum
vallapai nāyakā vāḻavai vātāpi vāraṇamē

4. கஜகர்ணகன் ( யானைக் காதன்)

மதநீர் மதுவிழை வண்டினம் வேண்டும் மலர்முகத்தோய்
இதமாய் விரட்ட இருசெவி யாட்டும் இபமுகத்தோய்
முதமே முருகோன் முதல்கஜ கர்ணா முழுமுதலோய்
நிதமும் துதிப்போம் நிலைபெறச் செய்திடு  நிர்மலனே

matanīr matuviḻai vaṇṭiṉam vēṇṭum malarmukattōy
itamāy viraṭṭa irucevi yāṭṭum ipamukattōy
mutamē murukōṉ mutalkaja karṇā muḻumutalōy
nitamum tutippōm nilaipeṟac ceytiṭu  nirmalaṉē

5. லம்போதரன் (தொந்தி/பானை வயிறன்)

பானை வயிறனே பார்வதி மைந்தனே பற்றருத்தே
மோனம் அளிக்கும் முழுமுதல் தேவனே மோதகனே
கோனாய் மனமெனும் கோவிலில் வீற்றே குணமருளி
வானவர் நாயக வாரண பூரண வாழ்வருளே

pāṉai vayiṟaṉē pārvati maintaṉē paṟṟaruttē
mōṉam aḷikkum muḻumutal tēvaṉē mōtakaṉē
kōṉāy maṉameṉum kōvilil vīṟṟē kuṇamaruḷi
vāṉavar nāyaka vāraṇa pūraṇa vāḻvaruḷē

6. விகடன் (வேடிக்கை விநோதன்)

விகடன் விளையாடும் வேடிக்கை எல்லாம் வினைத்திருவாம்
அகத்தி யரையேய்த்தோர் ஆற்றைப் பெருகக் அருளியவன்
செகத்தோர் நலமுற சேர்த்தான் அரங்கனின் செவ்வடியை
உகந்தே விகடத்தை ஊற்றாய் பொழிகின்ற ஒப்பிலானே

vikaṭaṉ viḷaiyāṭum vēṭikkai ellām viṉaittiruvām
akatti yaraiyēyttōr āṟṟaip perukak aruḷiyavaṉ
cekattōr nalamuṟa cērttāṉ araṅkaṉiṉ cevvaṭiyai
ukantē vikaṭattai ūṟṟāy poḻikiṉṟa oppilāṉ

7. விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)

தடைகளை நீக்கும் தயாளன் கணேசனைத் தஞ்சமென
மடையற்ற வெள்ளமாய் மாதங்கம் நல்கும் மயலறுத்து
கிடைக்கும் சிறப்புடன் கீழ்மையும் நீங்கியே கேண்மையுறும்
விடையேறி செல்வனார் விக்னரா சன்தாள் விரைபவர்க்கே

thadaika'lai :neekkum thayaa'lan ka'naesanaith thanjsamena
madaiya'r'ra ve'l'lamaay maathangkam :nalkum mayala'ruththu
kidaikkum si'rappudan keezhmaiyum :neengkiyae kae'nmaiyu'rum
vidaiyae'ri selvanaar viknaraa santhaa'l viraipavarkkae

8. விநாயகன் (மேலாம் தலைவனிலான்)

தம்மினும் மேலாம் தலைவனில் நாதனார் தண்ணளிக்கும்
பெம்மான் விநாயகர் பேறெனக் குன்றாப் பெருமையுடன்
இம்மையும் எப்போதும் ஈந்தே உளத்தில் இருந்திடுவான்
அம்மையும் அப்பனும் அண்ட மெனவோதும் ஆண்டவனே

tammiṉum mēlām talaivaṉil nātaṉār taṇṇaḷikkum
pemmāṉ vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum eppōtum īntē uḷattil iruntiṭuvāṉ
ammaiyum appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē

9. தூமகேது (புகைக்கொடியோன்)

தூம அசுரனாம் துட்டனைச் செற்றவர் தூமகேது
ஏமம் தருவார் இபமுகர் என்றும் இதமளிப்பார்
நேமத் தொடுநிதம் நெஞ்சில் இருத்தி நினைபவர்க்கு
தூமம் இலாமல் துலக்கியே தீபமாய் தூண்டுவனே

tammiṉum mēlām talaivaṉil nātaṉār taṇṇaḷikkum
pemmāṉ vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum eppōtum īntē uḷattil iruntiṭuvāṉ
ammaiyum appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē

10. பாலசந்திரன் (முன்கேசத்தில் சந்திரனைச் சூடியவன்)

சந்திரன் சூடும் சடையராம் ஈசனார் தம்மகனை
இந்தின் இளம்பிறை ஏறும் சிகையன் இபமுகனை
வந்தித் திருந்திட வாடியே உள்ளம் வதங்குவதில்
தந்திரம் ஈதவன் தாளை அணிவோம் தலையினிலே

cantiraṉ cūṭum caṭaiyarām īcaṉār tammakaṉai
intiṉ iḷampiṟai ēṟum cikaiyaṉ ipamukaṉai
vantit tiruntiṭa vāṭiyē uḷḷam vataṅkuvatil
tantiram ītavaṉ tāḷai aṇivōm talaiyiṉilē

11 - பாலசந்திரன் (முன்கேசத்தில் சந்திரனைச் சூடியவன்)

சந்திரன் சூடும் சடையராம் ஈசனார் தம்மகனை
இந்தின் இளம்பிறை ஏறும் சிகையன் இபமுகனை
வந்தித் திருந்திட வாடியே உள்ளம் வதங்குவதில்
தந்திரம் ஈதவன் தாளை அணிவோம் தலையினிலே

cantiraṉ cūṭum caṭaiyarām īcaṉār tammakaṉai
intiṉ iḷampiṟai ēṟum cikaiyaṉ ipamukaṉai
vantit tiruntiṭa vāṭiyē uḷḷam vataṅkuvatil
tantiram ītavaṉ tāḷai aṇivōm talaiyiṉilē

12 - கஜானனர் (கஜ ஆனன் - கரி முகன்)

தும்பிக்கை யானை துணையாம் கரிமுகத் தூமணியை
நம்புவோர்க் கில்லை நசிவென்றும் நாளும் நலந்தருமாம்
அம்பிகைக் கன்றை அழகனை ஆண்டருள் ஐங்கரனை
கொம்புடை யானையை கும்பிடக் கொள்வோம் குவலயமே

tumpikkai yāṉai tuṇaiyām karimukat tūmaṇiyai
nampuvōrk killai naciveṉṟum nāḷum nalantarumām
ampikaik kaṉṟai aḻakaṉai āṇṭaruḷ aiṅkaraṉai
kompuṭai yāṉaiyai kumpiṭak koḷvōm kuvalayamē

13. வக்ரதுண்டர் (வளைந்த துதிக்கையன்)

வளைந்த துதிக்கை வளையாமல் காக்கும் வனப்புடைத்தாம்
களைந்து குறைகள் கவலைகள் மாற்றும் கனிவுடைத்தாம்
திளைத்து அவனில் தினமும் துதித்தால் திசைதொறுமே
இளைக்கா புகழினை ஈட்டித் தருவான் இபமுகனே

vaḷainta tutikkai vaḷaiyāmal kākkum vaṉappuṭaittām
kaḷaintu kuṟaikaḷ kavalaikaḷ māṟṟum kaṉivuṭaittām
tiḷaittu avaṉil tiṉamum tutittāl ticaitoṟumē

iḷaikkā pukaḻiṉai īṭṭit taruvāṉ ipamukaṉē

14 - சூர்ப்பகர்ணர் (முறக்காதர்)

முறக்காதர் பக்தர் முறைபுடைத் தேற்பார் முனைப்புடனே
நிறைவேற்று வார்குறை நேர்மை யெனினுடன் நேர்ப்புடனே
இறையோன் இபமுகன் ஈடில்லா தேவன் இகந்தனிலே
நிறைவாய் மகிழ்வே நிமலன் தருவான் நிலைத்திடவே

புடைத்தல் - முறத்தால் புடைத்து உமி, கல் போன்றவற்றை நீக்கல்;    நேர்ப்பு - நேர்த்தி

muṟakkātar paktar muṟaipuṭait tēṟpār muṉaippuṭaṉē
niṟaivēṟṟu vārkuṟai nērmai yeṉiṉuṭaṉ nērppuṭaṉē
iṟaiyōṉ ipamukaṉ īṭillā tēvaṉ ikantaṉilē
niṟaivāi makiḻvē nimalaṉ taruvāṉ nilaittiṭavē

15 - ஹேரம்பர் (ஐம்முகர்)

அஞ்சுதல் போக்கிடும் ஐம்முக மூர்த்தியாய் ஆனவுரு
குஞ்சரக் கோவாம் குமரன் தமையனை கும்பிடவே
நெஞ்சம் கனிந்தே நிகளம் துகளாய் நெறிபடவும்
வஞ்ச மிலாமல் வளமிகு வாழ்வை வழங்குவனே      

añcutal pōkkiṭum aimmuka mūrttiyāy āṉavuru
kuñcarak kōvām kumaraṉ tamaiyaṉai kumpiṭavē
neñcam kaṉintē nikaḷam tukaḷāy neṟipaṭavum
vañca milāmal vaḷamiku vāḻvai vaḻaṅkuvaṉē

16 - ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு மூத்தோன்)

கந்தனின் மூத்தவன் காருண்ய மூர்த்தி கணபதியை
சொந்த முடனே தொழுவார் தமக்கில்லை சோர்வெதுவும்
தந்தி முகனவன் தாளினைப் பற்றினால் தாங்கிநமை
அந்த மிலாமல் அருள்புரிந் தாள்வான் அனுதினமே 

kantaṉiṉ mūttavaṉ kāruṇya mūrtti kaṇapatiyai
conta muṭaṉē toḻuvār tamakkillai cōrvetuvum
tanti mukaṉavaṉ tāḷiṉaip paṟṟiṉāl tāṅkinamai
anta milāmal aruḷpurin tāḷvāṉ aṉutiṉamē


கவிப்பயன்:
கட்டளை யொன்று கணபதி யிட்டான் கவியெழுத
கட்டளை யாமிக் கலித்துறை நாளும் கருத்துடனீர்
எட்டும் இனிதாய் இகத்தில் துதித்தால் இளகியுடன்
மட்டிலா மாண்பும் மகிழ்வும் தருவான் மறைமுதலே

kavippayaṉ:
kaṭṭaḷai yoṉṟu kaṇapati yiṭṭāṉ kaviyeḻuta
kaṭṭaḷai yāmik kalittuṟai nāḷum karuttuṭaṉīr
eṭṭum iṉitāy ikattil tutittāl iḷakiyuṭaṉ
maṭṭilā māṇpum makiḻvum taruvāṉ maṟaimutalē

ஜனவரி 06, 2016

ஷோடஸ கணபதி 16 - ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு மூத்தோன்)

ஸ்கந்த பூர்வஜர் பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறியதிலிருந்து…

கடைசிப் பேருக்கு வந்துவிட்டோம். 'ஸ்கந்த பூர்வஜர்' என்பது ஷோடச நாமாவில் கடைசி. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்குத் தமையனார் என்று அர்த்தம். முருகனுக்கு மூத்தவர். அதைவிட, 'முருகனுக்கு முன்னவர்'என்றால் அழகாக இருக்கிறது. 'பூர்வஜர்'என்றால் முன்னால் பிறந்தவர். 'அக்ரஜர்'என்றும் சொல்வதுண்டு.

'உடன்பிறப்பு'என்று தமிழில் சொல்வதுபோல் ஸம்ஸ்க்ருதத்தில் 'ஸஹோதரர்'. 'ஸஹ'என்றால் 'உடன்'.ஸஹோதரர் என்றோ உடன்பிறப்பு என்றோ சொன்னால் அண்ணாவா, தம்பியா என்று கண்டுபிடிக்க முடியாது. அண்ணா என்று குறிப்பிட்டுக் காட்டும் வார்த்தை 'பூர்வஜர்' இதேமாதிரி தம்பிக்கு 'அநுஜர்'. ராமாநுஜர் என்றால் ராமனுக்குத் தம்பியான லட்சுமணர். 'கஜமுகாநுஜர்' என்று ஸுப்ரம்மண்யருக்கு 'அமர'த்தில் ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. பிள்ளையாருக்குத் தம்பி என்றே முருகனுக்கு ஒரு பேர்;அவருக்கு அண்ணா என்றே இவருக்கும் ஒரு பேர்! அப்படிப்பட்ட ஸஹோதர பாந்தவ்யம்!

முருகனின் தமையர் என்பதன் சிறப்பு

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஷோடச நாமாக்களில் விக்நேச்வரர் சிவனுடைய புத்ரரென்றோ அம்பாளுடைய புத்ரரென்றோ காட்டப் பெயர் எதுவுமில்லை. அதாவது, இன்னாருக்குரப் பிள்ளை என்று பேரில்லை. இன்னாருக்கப் பதி என்றும் பேர் இல்லை. அவருக்கு பிரம்மச்சாரியாகப் பல உருவ பேதங்கள் இருக்கிற மாதிரியே பத்னி ஸமேதமாகவும் இருக்கின்றன. வல்லபை என்பவளோடு வல்லப கணபதியாக இருக்கிறார். ஸித்தி, புத்தி என்பவர்களுக்கு அவர் பதி என்றும் கேள்வி பட்டிருக்கலாம். ஸித்தி-புத்திகளிடம் அவருக்குப் பிறந்த புத்ரர்களும் உண்டு. அவர்களுக்குத் தகப்பனார் என்று தெரிவிப்பதாகவும் பேரைக் காணோம். ஆனால் பேர் வரிசையைப் பூர்த்தி பண்ணுமிடத்தில், மங்களமான ஸ்தானத்தில் 'ஸ்கந்தனுக்குத் தமையன்'என்று மட்டும் உறவு முறையைச் சொல்லும் ஒரு பெயர் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஏன் அப்படி?

பொதுவாக, சின்ன வயஸுக்காரரொருத்தரை அவரைவிட வயசில் பெரியவரைச் சொல்லி, அவருக்கு இவர் இன்ன உறவு- பிள்ளை, மருமான், மாப்பிள்ளை, தம்பி என்று ஏதோ ஒன்று சொல்கிறதுதான் முறை. இங்கேயோ வித்யாஸமாகத் தம்பி பேரைச் சொல்லி, அவருக்கு அண்ணா என்று இருக்கிறது. ஏன் இப்படி?

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் சரித்திரத்தோடு விக்நேச்வரருக்கு அவ்வளவு நெருங்கிய ஸம்பந்தம் இருப்பதால்தான்! தம்பியுடைய ஜனனம், விவாஹம், ஸந்நியாஸம் என்ற மூன்று ரொம்ப முக்யமான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அண்ணன்காரருக்கு முக்யமான பார்ட் இருக்கிறது. அதனால்தான்!

பலச்ருதியின் அனைத்துப் பயனும் பெற்ற முருகன்

ரஸமாக ஒன்று தோன்றுகிறது:இந்த ஷோடச நாமாக்களைச் சொல்கிறவருக்கு, 'வித்யாரம்பே' (கல்வி கற்கத் தொடங்கும்போது) , 'விவாஹே' (கல்யாணத்தின் போது) 'ப்ரவேசே' (ஒரிடத்திற்குள் செல்லும்போது) , 'நிர்கமே' (ஒரிடத்திலிருந்து புறப்படும்போது) , 'ஸங்க்ராமே' (சண்டை சச்சரவுகளில்) 'ஸர்வ கார்யேஷு (எல்லாக் கார்யங்களிலுமே) விக்கினம் உண்டாகாது என்று பலன் சொல்லியிருக்கிறது. இந்த ஒவ்வொன்றுக்குமே ஸ்கந்த சரித்திரத்தில் proof , சான்று, இருப்பதாகத் தெரிகிறது.

'வித்யாரம்பே:' பரமேச்வரனின் ஞான நேத்ர ஜ்யோதிஸிலிருந்து உண்டான ஸுப்ரம்மண்யருக்கு அக்ஷராப்யாஸம் என்ற அர்த்தத்தில் வித்யாரம்பம் அவசியமேயில்லை. அவரே 'ஒம் இத்யேகாக்ஷரம்' என்ற பிரணவத்திற்கு அர்த்தமாக இருந்து கொண்டு, அதைப் பிதாவுக்கு உபதேசம் பண்ணினவர். ஆனபடியால் அவர் விஷயத்தில் வித்யாரம்பம் என்பது ப்ரஹம் வித்யையை அநுபவமாக அநுஷ்டிக்கும் ஸந்நியாஸத்தை ஸ்வீகரிப்பதுதான். அப்படி அவர் ஸந்நியாஸி ஆனதற்கு விக்நேச்வரர் பழப் போட்டியில் ஜயித்ததுதான் காரணம்.

'விவாஹே':வள்ளி கல்யாண ஸமாசாரம். அதில் அண்ணாக்காரரின் முக்யமான பங்கை முன்னாலேயே பார்த்து விட்டோம்.

தம்பியின் இல்லறம், துறவறம் இரண்டிற்குமே அவர் தான் key கொடுத்திருக்கிறார். தம்பி குழந்தையாயிருந்த போது அவரை ஸந்நியாஸியாக்கி, அப்புறம் யௌவனத்தில் கிருஹஸ்தராக்கியிருக்கிறார்!தம்முடைய பரமபக்தையான ஒளவையையோ அவள் நல்ல யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய ஸமயத்தில் கிழவியாக்கி ஒரு ஸந்நியாஸினி மாதிரி செய்திருக்கிறார். பெரும்பாலும் பால ப்ரஹ்மசாரியாகவே நாம் பூஜிக்கும் ஸ்வாமியின் லீலை இப்படி வேடிக்கையாக இருக்கிறது!

'ப்ரவேச':இந்த லோகத்தில் இப்படி ஸுப்ரஹ்மண்யம் என்று ஒரு திவ்ய மங்கள் மூர்த்தி பிரவேசிப்பதற்கு- தோன்றுவதற்கு-காரணம் சூரபத்மாவின் நிபந்தனைப்படி விக்நேச்வரர் அவனுடைய ஸம்ஹாரத்திற்கு 'டிஸ்க்வாலிஃபை'ஆகியிருந்ததுதான். அதாவது, 'நெகட்டிவ்'ஆக ஸுப்ரஹ்மண்ய ப்ரவேசத்திற்குக் காரணம் அவர்தான்.

'நிர்கமே': 'ப்ரவேசம்'என்றால் ஒன்றில் புகுவது, 'நிர்கமம்'என்றால் ஒன்றைவிட்டுப் போய்விடுவது. வள்ளி கல்யாணம், பிள்ளையார் நடத்திக் கொடுத்து முடிந்தவுடன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாம் பிரவேசித்திருந்த இந்த உலகத்தை விட்டுவிட்டு ஸ்கந்த லோகம் என்கிற தம்முடைய நித்யவாஸ ஸ்தானத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இரண்டு பத்னிகளோடும் புறப்பட்டுப் போய் விட்டார். வள்ளி கதை வருவதற்கு முந்தியே தேவஸேனா கல்யாணமாகி இருந்தது. அவர் லோகத்தில் அவதாரம் பண்ணியதற்கு இரண்டு காரணம். சூரஸம்ஹாரம் ஒன்று. இன்னொன்று, அவருடைய மாமா மஹாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருத்தி தேவராஜன் பெண்ணாகவும், மற்றவள் வேடராஜன் பெண்ணாகவும் வளர்த்து வந்தவர்களை அவர் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது.

முதலில் திருச்செந்தூர் தாண்டி ஸமுத்ரத்தில் போய் அஸுரஸம்ஹாரம் முடித்தார். அப்புறம் திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங்கே அவளோடு இருந்து கொண்டிருக்கும்போது நாரதர் வந்து சித்தூரில் வள்ளி அவரே நினைவாக ப்ரேமையில் உருகிக் கொண்டிருப்பதை சொன்னார். ஆகையால் திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் வள்ளி-தேவஸேனா ஸமேதராக இல்லாமல், ஒரு பக்கம் தேவஸேனையும், மறுபக்கம் வள்ளிக்குப் பதில் அவளுக்காகத் தூது சொல்ல வந்த நாரதருமாகத்தான் இருக்கிறார். ஸத்குருவானவர் ஜீவாத்மாவிடம் பரமாத்மாவின் க்ருபையை திருப்பி விடுவதற்கு ரூபகமாக நாரதர் வள்ளியிடம் ஸுப்ரம்மண்யரைத் திருப்பிவிட்டார். அதனால் சிவனுக்கும் குருவான ஸ்வாமி, நாரத குருவுக்குத் தன்னுடைய ஸந்நிதியிலேயே ஒரு பக்கம் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

நாரதர் சொன்னதன் மேல் அவர் புறப்பட்டுப் போய் வேடன், விருத்தன், வேங்கைமரம் எல்லாமாக வேஷம் போட்டு அப்புறம் அண்ணாவின் அருளால் வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் புக்தி-முக்தி என்கிற இம்மை மறுமைத் தத்வங்கள் இரண்டோடும் சேர்ந்துள்ள தம்முடைய ஸாந்நித்யம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று இரண்டு பத்னிகளோடும் 'ஹனிமூன்'மாதிரிக் கொஞ்சநாள் திருத்தணியில் இருந்தார். பிற்பாடு ஸ்கந்தலோகம் போய்விட்டார். அது தான் நிர்கமம். அதற்குப் படி போட்டுக் கொடுத்தது வள்ளி கல்யாணம். அதோடு அவருடைய அவதாரத்தின் இரண்டாவது 'பர்ப'ஸும் நிறைவேறி விட்டது. வள்ளி கல்யாணத்திற்குப் படி போட்டுக் கொடுத்தவர் யானையாக வந்து அவளைத் துரத்திய பிள்ளையாரேயாகையால், ஸுப்ரஹ்மண்யர் நம் லோகத்திலிருந்து ஸ்கந்த லோகத்திற்கு 'நிர்கமம்'பண்ணவும் அவர்தான் உதவி இருக்கிறார்.

'ஸங்க்ராமே:'ஸங்க்ராமம் என்றால் சண்டை, யுத்தம். 'ஸங்க்ராம சிகாவல'என்று 'கந்தரநுபூதி'யில்கூட வருகிறது. யுத்தத்தில் மஹா பராக்ரமம் காட்டிய ஸுர ஸேநாதிபதி ஸுப்ரம்மண்யர். அப்படி யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு பண்ணித் தானிருப்பார். ஏனிப்படிச் சொல்கிறேனென்றால் விக்நேச்வர பூஜை செய்யாமல் த்ரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தகப்பனார், பண்டாஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தாயார் ஆகியவர்களுக்கும் விக்கினங்கள் ஏற்பட்டு, அவர்கள் அந்தப் பூஜை பண்ணிய பிறகுதான் விக்கினம் நிவிருத்தியாயிற்று என்பதால் தம்பிக்காரர் முதலிலேயே ஜாக்ரதையாக முழித்துக் கொண்டு பூஜை பண்ணித்தானே இருப்பார்?அது மாத்திரமில்லை. சூரஸம்ஹாரத்திற்கு இவர் புறப்படுவதற்கு முன்னாடி அவரோடு பழத்துக்குப் போட்டி போட்டு பந்தயம் வந்ததில் தோற்றே போயிருக்கிறார். அந்த விரக்தியில் ஆண்டியானார். அந்த ஆண்டி வாழ்க்கையிலாவது ஜயித்தாரா, அதாவது அது தக்கி நின்றதா என்றால் இல்லை. மாதா பிதாக்கள் வந்து கேட்டுக் கொண்டு, அஸுர ஸம்ஹாரத்திற்காகவே அவர் அவதரித்திருப்பதை ஞாபகப் படுத்தியவுடன், ஸந்நியாஸத்திற்கு முழுக்கு போட்டுவிட்டுச் சண்டைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. அதனால் அண்ணா அநுக்ரஹம் இருந்தால்தான் கார்யம் ஸித்தியாகும் என்று இப்போது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனபடியால் அவரைப் பூஜை பண்ணிவிட்டுதான் புறப்பட்டிருப்பார்.

'ஸர்வ கார்யேஷு':அண்ணாவுக்குப் போட்டியாகப் பழத்துக்குப் பந்தயம் புறப்பட்டது பலிக்கவில்லை. அவரைப் பிரார்த்திக்காமல் ஆண்டியானதும் நிற்கவில்லை என்பதால் யுத்தத்திற்குப் போகும் போது அவரைப் பூஜை பண்ணினாலும் பிற்பாடு வள்ளியை அடைவதற்காகப் போனபோது அவரை மறந்துவிட்டார். ஆசைவேகம் எத்தனை பொல்லாதது என்று லோகத்திற்குக் காட்டுவதற்காகவே இப்படி ஏற்பட்டது. விக்னமும் நிறைய வந்தது. அப்புறம் அவரை ப்ராத்தித்தே கார்யஸித்தி பெற்றார். அதனால் அதற்கப்புறம் 'ஸர்வ கார்யேஷு'என்றபடி எந்தக் கார்யமானாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் விக்நேச்வர பூஜை பண்ணித்தானிருப்பார். அதைப் பற்றி ஸந்தேஹமேயில்லை.

ஆகையாலேயே பிள்ளையாரின் ஷோடச நாமாக்களை முடிக்கிறபோது, அதற்குப் பலச்ருதியில் சொல்லப்படும் அத்தனை விதங்களிலும் விக்நேச்வரரின் அநுக்ரஹத்தைப் பெற்ற ஸ்கந்தரைக் குறிப்பிட்டு, அவருடைய பூர்வஜரென்று பூர்த்தி பண்ணியிருக்கிறது.

ஷோடஸ கணபதி 16 - ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு மூத்தோன்)

கந்தனின் மூத்தவன் காருண்ய மூர்த்தி கணபதியை
சொந்த முடனே தொழுவார் தமக்கில்லை சோர்வெதுவும்
தந்தி முகனவன் தாளினைப் பற்றினால் தாங்கிநமை
அந்த மிலாமல் அருள்புரிந் தாள்வான் அனுதினமே

kantaṉiṉ mūttavaṉ kāruṇya mūrtti kaṇapatiyai
conta muṭaṉē toḻuvār tamakkillai cōrvetuvum
tanti mukaṉavaṉ tāḷiṉaip paṟṟiṉāl tāṅkinamai
anta milāmal aruḷpurin tāḷvāṉ aṉutiṉamē

ஜனவரி 05, 2016

ஷோடஸ கணபதி 15 - ஹேரம்பர் (ஐம்முகர்)

15- நாமா ஹேரம்பரைப் பற்றி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கு:

ஹேரம்பர்:

'ஹேரம்பர்' என்பது அடுத்த பெயர். எனக்குத் தெரிந்தவரையில் அந்த வார்த்தைக்கு தாது பிரித்து யாரும் இதுவரை 'கன்வின்ஸிங்'காக அர்த்தம் சொல்லவில்லை. நான்தான் ஸரியாகத் தெரிந்து கொள்ளவில்லையோ என்னவோ? பாஸ்கர ராயர் என்று மஹான்கள் கோஷ்டியில் வைத்து மரியாதை செய்யவேண்டிய ஒரு மந்த்ர சாஸ்த்ர மஹாபண்டிதர். அவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் ரொம்பவும் ப்ரக்யாதி வாய்ந்தது. அப்படிப்பட்டவர் கணேச ஸஹஸ்ர நாமத்திற்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். அதில் ஹேரம்ப நாமத்திற்கு என்ன பாஷ்யம் செய்திருக்கிறாரென்று பார்த்தேன். 'ஹேரம்பர்'என்றால் சைவ தந்த்ர ப்ரவர்த்தகர் (சைவ ஆகமத்தைத் தோற்றுவித்தவர்) என்றும், அபரிதமான சௌர்யம் (சூரத்தன்மை) படைத்தவர். என்றும் அந்த பாஷ்யத்தில் அர்த்தம் பண்ணியிருக்கிறது. பாஷ்யகாரர் மஹா பெரியவர் தானென்றாலும், நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால், அதைப் படிப்பவருடைய குறையாலோ என்னவோ, அந்த இரண்டு அர்த்தமும் எப்படி அந்தப் பேருக்குக் கிடைக்கிறது என்று தெளிவுபடவில்லை!ஆராய்ச்சியாளர்களானால், தமிழ் 'எருமை'தான் 'ஹேரம்ப'ஆயிற்று என்கிறார்கள்!

ஸம்ஸ்க்ருதத்தின் பெருமை எல்லா வார்த்தைகளுக்கும், பெயர்களுக்கும் அவற்றின் அக்ஷரங்களை நன்றாக தாது பிரிந்து அர்த்தம் சொல்ல முடிவது தானென்றாலும் அப்படியில்லாத exception -களும் இருக்கின்றன. "இன்ன காரணத்தால் இப்படிப் பெயர்"என்று தாது பிரித்துச் சொல்ல முடிவதை 'யௌகிகம்'என்பார்கள்; Etymological -ஆக derive பண்ணக்கூடியது 'யௌகிகம்'.அப்படியில்லாமல், "என்ன காரணமோ தெரியாது, ஆனால் இந்த வார்த்தைக்கு இப்படித்தான் அர்த்தம்; இந்தப் பேர் இன்ன பேர்வழியைத்தான் குறிப்பிடுகிறது"என்று இருப்பவை 'ரூடி'. 'ஹேரம்ப'என்ற வார்த்தை இந்த 'ரூடி'யில் வருவதாகவே தோன்றுகிறது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாஸத்திற்கு முந்தி இந்த்ரப்ரஸ்தத்திலிருந்து ஆட்சி நடத்தினபோது தர்மபுத்ரர் ராஜஸ¨ய யாகம் பண்ண ஆசைப்பட்டு, அதற்கு முன்னால் நாலு திசை ராஜாக்களையும் ஜயித்துக் கொண்டு வருவதற்காகத் தம்பிகளை அனுப்பினார். அப்போது தக்ஷிணத்திற்குப் போய் அங்கே இருந்த ராஜ்யங்களை ஜயித்தவன் ஸஹாதேவன். அவன் ஜயித்த அந்த ராஜ்யங்களில் ஒன்றுக்கு ஹேரம்பம் என்று பாரதத்தில் பேர் கொடுத்திருக்கிறது. ஒருவேளை அதுதான் பிற்கால மைஸுரோ என்னவோ?மைஸூர் என்பது மஹிஷூர்- மஹிஷ ஊர் - என்பதன் திரிபுதான். மஹிஷம் (என்றால்) எருமை. 'ஹேரம்ப'த்திற்கு எருமை ஸம்பந்தம் சொல்கிறார்களே! அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஸஹாதேவனிடம் தோற்றுப் போனார்கள். ஆனாலும் அவர்கள் தங்களைப் பற்றி ரொம்பவும் தற்பெருமை அடித்துக் கொள்கிறவர்களென்று தெரிகிறது. அதனால் பெருமை பீற்றிக் கொள்பவர்களை ஹேரம்பர் என்று சொல்வதுண்டு என்று தெரிகிறது. அந்த தேசத்திலே விக்நேச்வரருடைய எந்த ரூப
பேதம் ரொம்பவும் பூஜிக்கப்பட்டதோ அதற்கே ஹேரம்ப கணபதி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இது வெறும் guess தான். தப்பாகவும் இருக்கலாம். முடிவாக என்ன தோன்றுகிறதென்றால், "அர்த்தம், கிர்த்தம் பார்க்காதே!ஹேரம்ப என்ற சப்தம் காதுக்கு நன்றாக இருக்கோ, இல்லியோ?என்னை மாதிரியே அதிலே காம்பீர்யம், மாதுர்யம் இரண்டும் இருக்கோ, இல்லியோ?என்னை அப்படிக் கூப்பிட்டால் பொருத்தமாக இருக்கோ, இல்லியோ?பின்னே கூப்பிட்டுவிட்டுப் போயேன்!டிக்ஷ்னரி பார்ப்பானேன்?"என்று விக்நேச்வரரே சொல்லி இப்படிப் பேர் வைத்துக் கொண்டாற் போலிருக்கிறது!

ஹேரம்ப நாட்டு வாஸியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாரத தேசம் முழுக்கவே ப்ரஸித்தமாகி விட்டவர் ஹேரம்பர். பாலகணபதியில் ஆரம்பித்து ஷோடச கணபதிகள் என்று பதினாறு மூர்த்திகள் இருப்பதிலும் ஹேரம்ப கணபதி இருக்கிறார்; நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஷோடச நாமாக்களிலும் அந்தப் பேர் இருக்கிறது.

சிங்கம் பூஜிக்கும் யானை

ஹேரம்பருடைய ஸ்வரூபம் விசேஷமானது. அவருக்கு ஐந்து முகங்கள். ஐந்தும் யானை முகந்தான். 'பஞ்ச மாதங்க முக'என்று ஒருத்தர் கீர்த்தனம்கூட பாடினார்.திருவாரூரிலுள்ள அநேக விக்நேச்வர மூர்த்திகளில் பஞ்சமுகராக இருக்கப்பட்டவரின் மீது தீக்ஷிதர் பாடியது என்று தெரிகிறது.

சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. சிவ பஞ்சாக்ஷரி த்யானத்தில் அப்படித்தான் இருக்கிறது. ஆசார்யாள் கூட அதை வைத்து வேடிக்கை பண்ணியிருக்கிறார். ஐந்து முகமிருப்பதால் ஈச்வரனுக்குப் 'பஞ்சாஸ்யன்'என்று பெயர். 'பஞ்சாஸ்யம்'என்று சிங்கத்திற்கும் பெயர். இந்த இடத்தில் 'பஞ்ச'என்றால் விரிந்த, பரவலான என்று அர்த்தம். 'ப்ரபஞ்சம்'என்றால் நன்றாக விரிந்து பரவியது என்று அர்த்தம். இங்கே 'பஞ்ச'என்றால் ஐந்து என்றும் அர்த்தம் பண்ணிக் கொண்டு ஐம்பூதங்களால் ஆனது ப்ரபஞ்சம் என்றும் சொல்லலாம். அது இருக்கட்டும் சிங்கம், சிவம் இரண்டுக்கும் பஞ்சாஸ்யப் பேர் இருக்கிறது. யானைக்கு சிங்கம் என்றால் ஒரு பயம். 'ஸிம்ஹ ஸ்வப்னம்'என்றே சொல்கிறோம். ஒரு யானை சொப்பனத்தில் சிங்கத்தைப் பார்த்தாலும் பயத்திலேயே ப்ராணனை விட்டுவிடுமாம். சிங்கத்துக்குத் தன்னைவிட உருவத்திலே ரொம்பப் பெரிசாக இருக்கும் யானையைத் தீர்த்துக் கட்டணும் என்று ரோஷம் பொங்கிக் கொண்டிருக்குமாம். ஒரு யானையைப் பார்த்துவிட்டால் தன் பலம் அத்தனையையும் திரட்டிக் கொண்டு அதன் மஸ்தகத்தைப் பேயறையாக அறைந்து பிளப்பதற்குப் பாயுமாம். இப்படிப் பட்ட பஞ்சாஸ்யம் (சிங்கம்) ஒரு யானையைப் பூஜை பண்ணினால் அது பெரிய ஆச்சர்யம்தானே?அந்த ஆச்சர்யத்தைத்தான் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

மஹாதந்தி-வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா

திருச்செந்தூரிலுள்ள ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் மேல் அவர் பாடிய புஜங்க ஸ்தோத்திரத்தில் முதல் ச்லோகமான விநாயக ஸ்துதியில் இப்படி வருகிறது.

ஸதா பாலரூபாபி விக்நாத்ரி - ஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா

விக்நேச்வரர் எப்போதும் குழந்தையாயிருப்பவர் - ஸதா பால ரூபர். ஆனாலும் - அபி என்றால் ஆனாலும்;'ஸதா பாலரூப அபி';எப்போதும் குழந்தையாயிருந்தாலும், மலையாக இருக்கும் விக்னங்களையும் பிளந்து தள்ளுகிறார். 'விக்நாத்ரி'- விக்ன மலையை, 'ஹந்த்ரீ'- அழிக்கிறவர்.

அப்புறம்தான் அவர் யானையாக இருந்தும் சிங்கத்தால் பூஜிக்கப்படுவதாக
வருகிறது. மஹா தந்தி - வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா

'தந்தி' (Danti) என்றால் யானை. தந்தத்தை உடையதாயிருப்பதால் தந்தி. கணபதி காயத்ரீயில் தந்தி என்ற பெயரைச் சொல்லியே நமக்கு நல்லறிவைத் தூண்டி விடுமாறு பிரார்த்தித்திருக்கிறது. பிள்ளையார் ' மஹா தந்தி வக்த்ர அபி'; பெரிய யானையின் முகத்தைப் பெற்றிருந்த போதிலும், 'பஞ்சாஸ்ய மாந்யா'- சிங்கத்தால் பூஜிக்கப் படுபவர். நடக்கமுடியாத ஸமாசாரங்கள் பிள்ளையாரிடம் சேர்ந்திருப்பதாக கவி சமத்காரத்துடன் ஆசார்யாள் பாடியிருக்கிறார். சின்னக் குழந்தை விக்ன மலையையே பிளந்து தள்ளுகிறது என்று முதலில் சொல்லிவிட்டு, அதே ரீதியில் நடக்க முடியாதது நடக்கிறது என்று தொடர்ந்து காட்டுவதாக 'யானையாயிருந்தும் பஞ்சாஸ்யத்தால் பூஜிக்கப்படுகிறது' என்று அவர் சொல்லும்போது, 'பஞ்சாஸ்யம்'என்றால் சிங்கம் என்றே கேட்கிறவர்களுக்குச் சட்டென்று தோன்றும். சிங்கம் எங்கே பிள்ளையாரைப் பூஜித்தது என்று யோசிக்கும் போதுதான், 'பஞ்சாஸ்யம்' என்பதில் சிலேடை பண்ணியிருக்கிறாரென்று புரியும் இங்கே பஞ்சாஸ்ய என்பது சிங்கம் அல்ல சிவன் என்று புரியும். த்ரிபுர ஸம்ஹாரத்துக்குப் பரமசிவன் புறப்பட்டுத் தேரச்சு முறிந்தபோது விக்நேச்வர பூஜை பண்ணினாரல்லவா?அதைத்தான் பஞ்சாஸ்யமான்ய என்று சொல்லியிருக்கிறாரென்று புரியும்.

ஐந்து முகம்கொண்ட ஸிம்ஹவாஹனர்

பஞ்சாஸ்ய மான்யர் மட்டுமில்லை; தாமே பஞ்சாஸ்யராக ஐந்து முகத்தோடு விளங்கும் ரூபம்தான் ஹேரம்பர். அற்புதமான மூர்த்தியாக இருப்பவர் அவர். ஐந்து கஜ சிரஸுகள்; பத்து கைகள். வாஹனம் என்னவென்றால் ஸிம்ஹம்; பஞ்சாஸ்யம்! ஸிம்ஹத்தைக் கண்டு யானை பயப்படாதது மட்டுமில்லை; அதை அடக்கி அதன் மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது! பஞ்சமுகத்தால் தகப்பனாரை ஞாபகப்படுத்துவது போல ஸிம்ஹவாஹனத்தால் தாயாரை ஞாபகப்படுத்துகிறார். அம்பாள் தானே ஸிம்ஹவாஹினி? மஹா கணபதி என்ற மூர்த்திக்கும் பத்துக் கை உண்டு. ஆனால் ஐந்து முகமோ, ஸிம்ஹ வாஹனமோ கிடையாது. ஹேரம்பர்தான் அப்படியிருப்பவர். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி கோவிலில் செப்புத் திருமேனியாக ஹேரம்ப மூர்த்தி இருக்கிறார். திசைக் கொன்றாக நாலு திசைக்கு நாலு முகமும், அந்த நாலுக்கும் மேலே சேர்த்துக் கிரீடம் வைத்தாற் போன்ற ஐந்தாம் முகமுமாக ஐந்து யானைத் தலைகளைப் பார்க்கிறபோதே ஆனந்தமாக இருக்கும்.

ஷோடஸ கணபதி 15 - ஹேரம்பர் (ஐம்முகர்)

அஞ்சுதல் போக்கிடும் ஐம்முக மூர்த்தியாய் ஆனவுரு
குஞ்சரக் கோவாம் குமரன் தமையனை கும்பிடவே
நெஞ்சம் கனிந்தே நிகளம் துகளாய் நெறிபடவும்
வஞ்ச மிலாமல் வளமிகு வாழ்வை வழங்குவனே

añcutal pōkkiṭum aimmuka mūrttiyāy āṉavuru
kuñcarak kōvām kumaraṉ tamaiyaṉai kumpiṭavē
neñcam kaṉintē nikaḷam tukaḷāy neṟipaṭavum

vañca milāmal vaḷamiku vāḻvai vaḻaṅkuvaṉē

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...