ஜூன் 26, 2014

குறளின் குரல் - 798

26th Jun 2014

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
                        (குறள் 792: நட்பாராய்தல் அதிகாரம்)

ஆய்ந்தாய்ந்து - மேன் மேலும் பல வழிகளாலும் நன்கு ஆராய்ந்து
கொள்ளாதான் - ஏற்றுக்கொள்ளாதான் (எதை என்பது அடுத்த சொல்லில்)
கேண்மை - நட்பு
கடைமுறை - முடிவிலே
தான் சாம் - தாமே இறந்துபடக்கூடிய
துயரம் தரும் - துன்பம் விளைவித்து துயரத்தைத் தரும்

ஒருவருடைய பண்பு நலன்களையும், செயல்முறைகளையும் பலவாராக, பலநேரங்களில் நோக்கி, நன்கு ஆராய்ந்து, அவரைப் பற்றி தெளிந்தபின்னரே நட்பென்று கொள்ளாதானுடை நட்பு, முடிவிலே தாமே இறந்து மடியக்கூடிய துன்பங்களை விளைவித்து, அவற்றால் துயரத்தையும் தந்து, மரணத்தையும் தந்துவிடும். இக்குறளும், கடந்த குறளும் ஆராயாமல் கொண்ட நட்பால் விளையும் கேட்டினைக் குறித்தமையின், வள்ளுவர் நட்பாராய்தலின் இன்றியமையாமையை முதலிலே வலியுறுத்துவது தெளிவு.

பழமொழிப்பாடலொன்று ஆராயாமல் கொண்ட நட்பைப் பற்றி, இவ்வாறு கூறுகிறது. அன்புடையாராகவே இருப்பினும், ஆராயாமல் ஒருவரோடு கொண்ட நட்பு, இழிவைத்தந்துவிடும் என்று. அப்பாடல் வரிகள்:

“அளிந்தார்க்கண் ஆயினும் ஆராயானாகித்
 தெளிந்தான் விளிந்து விடும்”

ஆராயாமல் நட்பு கொள்வதால் வரும் தீமையைப் பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

இது ஆராயாது நட்பு கொண்டவரை, முன்னிலையில் விளித்து, இவ்வாறு கூறுகிறது. “நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்!”

Transliteration:

AyndAindu koLLAdAn kENmai kaDaimuRai
thAnsAm thuyaram tharum

AyndAindu – investigating in many ways as to the nature of friendship
koLLAdAn – and not having
kENmai – friendship (good)
kaDaimuRai – in the end
thAnsAm – for the person to die (rather painfully)
thuyaram tharum – will yield such grief

The attempt to make friendship with persons without thoroughly investigating the ways and deeds of those, will yield trouble and grief for the person so attempts and eill eventually get him to have a painful death. The first two verses of these chapters give the ill and evil of bad friendship, had without proper investigation, making it loud and clear, the intent of the chapter.

A poem from nAlaDiyAr tells a person this: “You seem to make friendship with some people, thinking they are good, If they don’t have such good character or traits as you believe, you will be in grief, which I will relate to you through a metaphor: When some body opens a contained thinking there is sandalwood paste, what if he finds a snake instead? It is like that”. The comparison of goodness to  the fragrance of sandal paste and the evil to snake is indeed an apt one to drive the point.

“The friendship made wiithout deep investigation
  will at the end, yield only death of aggravation"

இன்றெனது குறள்:

நன்காய்ந்து நாடாதான் நட்பு நலிவுதரும்
தின்மையில் சேர்க்குமுடி வில்  

(தின்மை - சாவு)

nangAindu nADAdAn naTpu nalivutharum

thinmaiyil sErkkumuDi vil

ஜூன் 25, 2014

குறளின் குரல் - 797

80: (Scrutinizing Friendship - நட்பாராய்தல்)

[This chapter discusses how to scrutinize if a friendship is worth it or not, based how in many ways, it has been defined in the preceding chapter. In a different chapter about indulging in deeds, vaLLuvar has already said about thinking before acting (“eNNith thuNiga karumam”). The thought is much more valid for choosing the right friends for most of us, spend more time with friends out side the home either for work or just for moral support and share much more with them than with kin.]

25th Jun 2014
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
                        (குறள் 791: நட்பாராய்தல் அதிகாரம்)

நாடாது - ஆராயாமல்
நட்டலிற் - ஒருவரிடம் நட்பு கொள்ளுவதிலும்
கேடில்லை - மிக்க கேடு தருவது ஏதுமில்லை
நட்டபின் - அவ்வாறு ஆராயாது நட்பு கொண்டபின்னர்
வீடில்லை - அத் தீநட்பினை விட்டொழிப்பதும் எளிதில்லை
நட்பு ஆள்பவர்க்கு - அத்தகைய நட்பைப் பெற்றவர்க்கு

ஒருவரோடு நட்பு கொள்ளுவது ஏற்புடையதா, இல்லையா என்று ஆராயாது, நட்பு கொள்ளுவதிலும் கேடு விளைவிப்பது வேறொன்றுமில்லை. அவ்வாறு ஆராயது நட்பு கொண்டுவிட்டபிறகு, அதுவும் தீநட்பாக இருக்குமேயாயின் அந்நட்பை விட்டொழிப்பதும் அவ்வளவு எளிதில்லை.  அதனால் ஆராயாமல் நட்பு கொள்ளாக்கூடாமையை வலிவுடன் சொல்லி இவ்வதிகாரத்தைத் தொடங்குகிறார்.

இக்கருத்தையொட்டிய நற்றிணைப் பாடலொன்று, இவ்வாறு கூறுகிறது. (32:8-9)  “நாடி நட்பின் அல்லது நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே”

Transliteration:

nADAdu naTTaliR kEDillai naTTapin
vIDillai naTpAL bavarkku

nADAdu – Not seriously understanding and knowing the person
naTTaliR – and making friends with the person (more than that)
kEDillai – there is no harm
naTTapin – after making such bad friendship
vIDillai – to relinquish such bad friendship is extremely difficult
naTp(u) ALbavarkku – for one who made such friendship

There is no greater danger or disaster, than to make friendship without scrutinizing about someone and not knowing about the person. If such a evil friendship is made, it is not easy to be get rid of such friendship either; Saying so bluntly about the need to scrutinize about the other person before making friendship, vaLLUvar begins this chapter.

“None more disastrous and evil than making friendship uninquired!
 After making bad friends, task of relinquishing, never accomplished”

இன்றெனது குறள்:

ஆய்ந்துகொள்ளா நட்பைப்போல் தீமையில்லை -கொண்டபின்
ஓய்வுமில்லை தீநட்பி னின்று

AindukoLLA naTpaippOl thImaiyillai koNDapin

Oivumillai tInaTpi ninRu

ஜூன் 24, 2014

குறளின் குரல் - 796

24th Jun 2014

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
                        (குறள் 790: நட்பு அதிகாரம்)

இனையர் இவர் எமக்கு  - இத்துணை நெருக்கமானவர் இவர் எனக்கு என்றும்
இன்னம் யாம் - அவருக்கு இவ்வளவு நெருக்கமானவன் நான்
என்று புனையினும் - என்றும் தற்பெருமையிலோ அல்லது மிகுதியாகச் சொல்லுதல்
புல்லென்னும் நட்பு - அது கீழ்மையான நட்பேயாகும்

உண்மையான நட்பு தம் நட்பைப் பற்றி வீண்பெருமைப் பேசாது. சிலர், பிறரிடம்  பெறக்கூடிய சில ஆதாயங்களுக்காக தாம் சில பெரியமனிதர்களோடு சிறந்த நட்பைக் கொண்டிருப்பதைப் போல் புனைந்து உரைப்பர். அன்னார் எமக்கு இவ்வளவு நெருக்கமானவர், தாம் எவ்வளவு அவருக்கு இன்றியமையாதவர் என்றெல்லாம் வீண்பெருமை பேசுவது நட்பைக் கீழ்மைப் படுத்துவதாகும். வள்ளுவர், இக்குறளின் வாயிலாக, நட்பைக் கொச்சைப்படுத்தும் வீண் தற்பெருமைப் பேச்சினை அடிக்கோடிடுகிறார்.

Transliteration:

Inaiyar ivaremakku innamyAm enRu
Punaiyinum pullennum naTpu
Inaiyar ivar emakku – He is so close to me
Innam yAm – I am very near and dear to him
enRu punaiyinum – speaking so in boastful, vainglorious manner
pullennum naTpu – is demeaning to friendship

True friendship does not boast about its glory. Some, to get benefits from others for self-gain, would boast their friendship with highly placed personalities of the society, saying how well they know them or close to them; they would even go to the extent of saying that how close they feel to self. Such vainglorious, conceited boasting are indeed demeaning to the friendship, if there is such friendship.

“Being boastful about friendship, claiming how near and dear the self is to someone
 Or how that someone feels close to self, are both demeaning; and a trait to shun!

இன்றெனது குறள்:

தம்முறவு ஈதவர்க்கு யாமின்னார் என்றுசொல்வார்
தம்பெருமை கீழ்மைநட் புக்கு.

(தம்முறவு ஈது; அவர்க்கு யாம் இன்னார் என்று சொல்வார் தம்பெருமை கீழ்மை நட்புக்கு!)

thammuRavu Idavarkku yAminnAr enRusolvAr

thamperumai kIzhmainaT pukku

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...