செப்டம்பர் 11, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 93

एषा तवाक्षिसुषमा विषमायुधस्य
नाराचवर्षलहरी नगराजकन्ये ।
शङ्के करोति शतधा हृदि धैर्यमुद्रां
श्रीकामकोटि यदसौ शिशिरांशुमौलेः ॥93॥

ஏஷா தவாக்ஷிஸுஷமா விஷமாயுதஸ்ய
நாராசவர்ஷ லஹரீ நகராஜகன்யே |
ஶம்கே கரோதி ஶததா ஹ்ருதி தைர்யமுத்ராம்
ஸ்ரீகாமகோடி யதஸௌ ஶிஶிராம்ஶு மௌலே: ||93||

மலையரசன் மகளே! திரு காமகோடி!  இந்த உன் பார்வையழகு மன்மதனின் இரும்பு அம்பின் வரிசையென்று நினைக்கிறேன்! ஏனெனில் இது பரமசிவனின் உள்ளத்தில் உறுதியை சுக்கு நூறாகச் சிதறச் செய்கிறது!

மலைய ரசனார் மகளே திருகா மகோடியளே,
விலையிலுன் பார்வையின் வீச்ச தனங்கனின் வில்லிருந்து
நிலைநீங் குசர நிரைபோலு மென்றே நினைக்கிறேன்யான்!
குலைப்பதால் கூத்தர்க் குறுதி சிதறக் குறைத்ததுவே!


சரம்-அம்பு; நிரை-வரிசை; குலைத்து - அழித்து; கூத்தர்-சிவன்

செப்டம்பர் 10, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 92

कामाक्षि सत्कुवलयस्य सगोत्रभावा-
दाक्रामति श्रुतिमसौ तव दृष्टिपातः ।
किं च स्फुटं कुटिलतां प्रकटी करोति
भ्रूवल्लरी परिचितस्य फलं किमेतत् ॥92॥

காமாக்ஷி ஸத்குவலயஸ்ய ஸகோத்ரபாவா-
தாக்ராமதி ஶ்ருதிமஸௌ தவ த்ருஷ்டிபாத: |
கிம் ச ஸ்புடம் குடிலதாம் ப்ரகடீ கரோதி
ப்ரூவல்லரீ பரிசிதஸ்ய பலம் கிமேதத் ||92||

காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வையானது நல்ல கருநெய்தல் மலரின் நட்பாலே சுருதியாம் வேதவழியை அடைகிறது. ஆயினும் அதை அடைய கோணலான வழியில் செல்கிறது. இது புருவக்கொடியின் பழக்கத்தினாலா?

நல்ல கருநெய்தல் நட்பால் சுருதியாம் நல்வழியை
அல்லவோ உன்கடை அட்சம்கா மாட்சீ அடைகிறது!
அல்ல வழியில் அடைவதென் னாமதை? ஆய்தறிந்தேன்
பொல்லாப் பவராம் புருவ மதனின் புழங்கலிலே!


சுருதி-வேதம் (கேட்கும் செவிக்கும்); அட்சம்-கண்; பவர்-அடர்ந்த கொடி; புழங்கல்-பழகுதல்;

செப்டம்பர் 09, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 91

जागर्ति देवि करुणाशुकसुन्दरी ते
ताटङ्क रत्नरुचि दाडिम खण्डशोणे ।
कामाक्षि निर्भर कटाक्ष मरीचि पुञ्ज-
माहेन्द्र नीलमणि पञ्जर मध्यभागे ॥91॥

ஜாகர்தி தேவி கருணாஶுக ஸுந்தரீ தே
தாடங்க ரத்னருசி தாடிம கண்டஶோணே |
காமாக்ஷி நிர்பர கடாக்ஷ மரீசி புஞ்ஜ-
மாஹேந்த்ர நீலமணி பஞ்ஜர மத்யபாகே ||91||

தேவி! காமாக்ஷி! உனது கருணையாகிற அழகிய பெண்கிளி, உன்னுடைய காதணிகளின் அழகிய சிவப்பு இரத்தினங்களாம் மாதுளை வித்துக்களால் சிவந்து, உனது கடைக்கண்ணின் காந்தியால், இந்திர நீலமணியால் ஆகியதுபோல் தோன்றும் கூண்டின் நடுவே மிகவும் விழிப்புடன் இருக்கிறது.

உனது கருணையாம் ஒப்பமார் பெண்கிளி ஓலையிரத்
தினமாது ளைவித்தால் செம்மை நிறமுற்று தேசுடைத்த
நினது கடைக்கண் நிறத்தால், புரந்தர நீலமணி    
கனங்கொளும் கூண்டினில், காமாட்சீ, தங்கும் கருத்துடனே!


ஒப்பம்- அழகு; ஓலை-காதணி; செம்மை-சிவப்பு; தேசு-காந்தி/ஓளி; புரந்தர-இந்திர; கனம்-பெருமை; கருத்துடனே-விழிப்புடனே.

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...