कूलङ्कषं वितनुते करुणाम्बुवर्षी
सारस्वतं सुकृतिनः सुलभं प्रवाहम् ।
तुच्छीकरोति यमुनाम्बुतरङ्गभङ्गीं
कामाक्षि किं तव कटाक्षमहाम्बुवाहः ॥90॥
கூலம்கஷம் விதனுதே கருணாம்பு வர்ஷீ
ஸாரஸ்வதம் ஸுக்ருதின: ஸுலபம் ப்ரவாஹம் |
துச்சீகரோதி யமுனாம்பு தரங்க பங்கீம்
காமாக்ஷி கிம் தவ கடாக்ஷ மஹாம்புவாஹ: ||90||
காமாக்ஷி! கருணை
நீர் பொழிகிற உனது கடைக்கண் நோக்காம் பெரிய மேகமானது, நல்லோரின் பேச்சாற்றலின் பெருக்கினை
எளிதில் கரைபுரளச் செய்கிறது. அதிலே, யமுனை நதியின் அலைகளோடு கூடிய நீர் பெருக்கின்
அழகை ஏன் தாழ்வுற செய்கிறது?
கருணை பொழியுமுன் கண்கடை யாம்பெரு கந்தரம்நற்
கருமத் தவர்பேச்சின் கையைப் பெருக்கி
கரைபுரள
அருளும் எளிதாய்; அலைமிகு காளிந்தி ஆற்றொழுக்கின்
திருவையோ காமாட்சீ! செய்வதே னோசொல் திரக்கரித்தே?
கந்தரம்-மேகம்;
கை-ஆற்றல்; காளிந்தி-யமுனை; திரு - அழகு; திரக்கரித்தல்-அவமதித்தல்