மே 14, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 74

वेदमयीं नादमयीं बिन्दुमयीं परपदोद्यदिन्दुमयीम् ।
मन्त्रमयीं तन्त्रमयीं प्रकृतिमयीं नौमि विश्वविकृतिमयीम् ॥74॥

வேதமயீம் நாதமயீம் பிந்து மயீம் பரபதோத்யத் இந்துமயீம் |
மந்த்ரமயீம் தந்த்ரமயீம் ப்ரக்ருதிமயீம் நௌமி விச்வவிக்ருதிமயீம் ||74||

மறை, இசை, மாசக்திவடிவின்வித்தென இவற்றின் உருவங்களாகவும், முக்தியில் உதிக்கும் சந்திரன் உருவாகவும், மந்திர (மறைமொழி), தந்திர வடிவங்களாகவும், மூலப் பொருளாகவும், உலகில் உள்ள எல்லாவற்றின் பரிணாமமாக விரிகின்றதுமாக உள்ள ஒன்றை (காமாட்சியை) நமஸ்கரிக்கிறேன்.

மறையிசை யாகவும் மாசக்தி யின்வித்து மானவுரு;
இறைமுக் தியிலே எழுகின்ற சந்திரன் என்னுமுரு;
மறைமொழி தந்திர மாகு வுரு;மூல மானவுரு;

நிறைந்து பலவாய் நிலவு மதைத்துதித்து நிற்பேனே

மே 13, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 73

मूर्तिमति मुक्तिबीजे मूर्ध्नि स्तबकितचकोरसाम्राज्ये ।
मोदितकम्पाकूले मुहुर्मुहुर्मनसि मुमुदिषा‌உस्माकम् ॥73॥

மூர்திமதி முக்திபீஜே மூர்த்னி ஸ்தபகித சகோர ஸாம்ராஜ்யே |
மோதித கம்பா கூலே முஹுர் முஹுர்மனஸி முமுதிஷா‌ς ஸ்மாகம் ||73||

முக்திக்கு வித்தாக இருப்பவளும், சகோரப் (சக்கரவாகம்) பறவைகளுக்கு உயிராக இருக்கும் சந்திரனைத் தலையில் சூடியவளும், கம்பை நதிக்கரையில் இருக்க விருப்பமுள்ளவளுமான ஒரு மூர்த்தியினிடத்தில் மனம் அடிக்கடி நிறைவு கொள்கிறது.

முக்திக்கு வித்தாய் முளைத்த வளாயதாம் மூர்த்தியினில்
சக்கர வாகத் ததன்னுயி ராம்மதி தாங்குவதில்
புக்கங்கு கம்பைப் புனற்கரை யேவிரும்பிப் போந்தாளில்
சிக்கும் மகிழ்வே சிறக்குதே மேன்மேலும் சிந்தையுளே

சக்கரவாகம் - சகோரப் பறவை; புனற்கரை - நதிக்கரை

மே 12, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 72

लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥72॥

லீயே புரஹரஜாயே மாயே தவ தருண பல்லவச்சாயே |
சரணே சந்த்ராபரணே காஞ்சீசரணே நதார்தி ஸம்ஹரணே ||72||

முப்புரங்களை அழித்தவரின் மனைவியே! மாயையே! இளந்தளிர் போல உள்ளவளே! சந்திரனை தலையில் சூடியவளே! காஞ்சீபுரியை இருப்பிடமாகக் கொண்டவளே; வணங்குவோர் துன்பங்களை போக்குபவளே! உன்னுடைய பாதத்தில் இலயமடைகிறேன்!

திரிபு ரமழித்தோர் தேவியே! மாயே! சிறுதளிர்போல்
உருவே! மதியை உகந்த சிரத்தவளே! ஒண்காஞ்சீ
புரியை இருப்பாய் புரிந்தவ ளே!சேவிப் போரிடரை

எரிப்ப வளேயான் இலயமுற் றேனுன் இணையடியே

மே 11, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 71

रक्ष्यो‌உस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया ।
श्रुतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥71॥

லக்ஷ்யோ‌ςஸ்மி காமபீடீ லாஸிகயா கனக்ருபாம்பு ராசிகயா |
ச்ருதியுவதி குந்தலீமணி மாலிகயா துஹினசைல பாலிகயா ||71||

காமபீடத்தில் நர்த்தனம் செய்கிறவளும், செறிவான கருணை இரசத்தின் கடலானவளும், வேதமாம் இளம்பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் இரத்தின மாலைகளை போன்றவளும் பனிமலையின் குமாரியானவளும், ஆனவளால் நான் பார்க்கத்தக்கவனாக இருக்கிறேன்.

காமபீ டத்தில் களிநடம் செய்வாள்; கனக்கருணை
சோமக் கடலாம்; சுருதியிளம் வல்லி சுரிகூந்தல்
ஆமென வாக்கும் அணிரத் தினமாலை ஆனாள்பனிப்
பாமையா லேநானும் பார்க்கப் பெறுகிறேன் பாக்கியமே


கனம் - செறிவுமிக்க; சோம - இரசம்; வல்லி - பெண்; சுரிகூந்தல் - சுருண்ட கூந்தல்; ஆம் - அழகு; பாமை- பெண்;

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...