மே 10, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 70

मञ्चे सदाशिवमये परिशिवमयललितपौष्पपर्यङ्के ।
अधिचक्रमध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥70॥

மஞ்சே ஸதாசிவமயே பரசிவ மய லலித பௌஷ்ப பர்யங்கே |
அதிசக்ரமத்யம் ஆஸ்தே காமாக்ஷீ நாம கிமபி மம பாக்யம் ||70||

ஸதாசிவனாகிய மஞ்சத்தில், பரசிவனாகிய அழகிய மலர் விரிப்பின்மீது, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமாக்ஷி என்னும் எனது பெரும்பேறு விளங்குகிறது.

சதாசி வனாரேயாம் தாலாட்டும் மஞ்சம தன்நடுவில்
உதார பரசிவ ஒண்பூ விரிப்பினிலே உம்பர்கொள்
ததாக தமாம்திருச் சக்கரத் துந்தியில் தானமர்ந்த
கதாசித்தா மென்றன் கடாச்சமாய் வீற்றிடும் காமாட்சியே


உதார - மேம்பட்ட; கதாசித்து - அரியது; கடாட்சம் - பாக்கியம்; ததாகதம் - நிலைத்தது; உந்தி - நடுவில்; உம்பர் - மேலே

மே 09, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 69

किं वा फलति ममान्यौर्बिम्बाधरचुम्बिमन्दहासमुखी ।
सम्बाधकरी तमसामम्बा जागर्ति मनसि कामाक्षी ॥69॥

கிம் வா பலதி மமாந்யை: பிம்பாதர சும்பி மந்தஹாஸமுகீ |
ஸம்பாதகரீ தமஸாம் அம்பா ஜாகர்த்தி மனஸி காமாக்ஷீ ||69||

கொவ்வைக் கனிபோல் அதரங்களை முத்தமிடும் புன்சிரிப்போடு கூடிய முகத்தை உடையவளும், அறியாமையை அறவே போக்குபவளுமான அன்னை காமாக்ஷி என் மனத்தில் விளங்குகிறாள். பிறரால் எனக்கு என்ன கார்யம் ஆகவேண்டியிருக்கிறது? (ஒன்றுமில்லை என்கிற கருத்து)

கொவ்வைக் கனியிதழ் கொஞ்சிடும் புன்னகை கொள்முகத்தாள்
அவ்வை அறவே அறியாமை நீக்கிடும் அன்னையென
செவ்வியள் காமாட்சி சேர்ந்தென் மனத்தில் சிறந்திருக்க
எவ்வம் பிறரால் எனக்கிங்கு ஆவது என்பதுவே?


எவ்வம்- எவ்விதம்; அவ்வை - தவக்கோலத்தினள்; செவ்வியள் - செம்மை நிறத்தவள்

மே 08, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 68

बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥68॥

பாண ஸ்ருணி பாச கார்முக பாணிம் அமும் கமபி காமபீடகதம் |
ஏணதர கோண சூடம் சோணிம பரிபாக பேதம் ஆகலயே ||68||

மலரம்பு, அங்குசம், பாசக்கயிறு, கோதண்டம் இவற்றைக் கையில் ஏந்தியது; காமபீடத்தே அமர்ந்தது; பிறைமதியைச் சூடியது; உயர்ந்த சிவப்பு நிறத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளதுமான ஒன்றை நான் மனத்தில் தியானிக்கிறேன்.

அம்பு துறட்டி ஆசைக்கயிறு வில்லை அணிகையாள்
அம்புலி தன்னை அணிந்தேகாம பீடம் அமர்வாளாம்
செம்மை நிறத்தின் சிறப்பு நிலைகளாய் சேர்ந்ததுவாம்
அம்மூர்த் தியையான் அகத்தில் நினைந்தேன் அனுதினமே

அம்பு- மலரம்பு; துறட்டி - அங்குசம்; ஆசைக்கயிறு - பாஶக்கயிறு

மே 07, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 67

अधिकाञ्चि वर्धमानामतुलां करवाणि पारणामक्ष्णोः ।
आनन्दपाकभेदामरुणिमपरिणामगर्वपल्लविताम् ॥67॥

அதிகாஞ்சி வர்தமானாம் அதுலாம் கரவாணி பாரணாம் அக்ஷ்ணோ: |
ஆனந்த பாக பேதாம் அருணிம பரிணாம கர்வபல்லவிதாம் ||67||

காஞ்சீபுரியில் வளர்ந்தோங்குவதும், தன்நிகரில்லாததும், மகிழ்வின் பல்வேறு நிலைகளால் நிறைந்த உருவமுடையதும், கூடிய செஞ்சிவப்பின் செருக்கில் வளர்ந்தோங்கிய துளிர் போலிருப்பதுமாக உள்ள ஒன்றை என் கண்களாறப் பார்க்கிறேன்.

கஞ்சியில் ஓங்கி களையேறு மொன்றை கதழ்விலியை
விஞ்சும் மகிழ்வதன் வேறாம் நிலைகளாய் வீங்குவதை
செஞ்சிவப் பின்தற் செருக்கில் வளர்ந்த சிறுதளிராம்
கஞ்சத்தை என்னிரு கண்கள் விருந்தாகக் கண்டனவே

களையேறுதைல் - ஒளிமிகுதல், வளருதல்; கதழ்வு - ஒப்பு, நிகர்; கஞ்சம் - தாமரை

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...