மார்ச் 09, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 8

श्रितकम्पसीमानं शिथिलितपरमशिवधैर्यमहिमानम् ।
कलये पटलिमानं कञ्चन कञ्चुकितभुवनभूमानम् ॥8॥

ச்ரிதகம்பா ஸீமானம் சிதிலித பரமசிவ தைர்ய மஹிமானம் |
கலயே பாடலீமானம் கஞ்சன கஞ்சுகித புவன பூமானம் ||    (8)

கம்பா நதிக்கரையில் இருப்பதுவும், உயர்ந்தோன் பரமசிவனின் மனவுறுதியை உடையும்படி செய்ததுவும், தாரணி யாவுமே தன்னுடைய உடையாக அணிந்ததுவும், இளஞ்சிவப்பு (வெண்ணிறத்தோடு கூடிய சிவப்பு) நிறத்ததுமான பொருளொன்றை என்னுள்ளத்திருத்தி ஏத்துவேன், தியானிக்கிறேன்.

கம்பைக் கரையமர் காஞ்சீ கனகமா காட்சியதாம்
உம்பன் பரசிவன் உள்ளத் துறுதி உடைத்ததுவாம் 
தம்முடை யாகவே தாரணி யாவும் தரித்ததுவாம்

எம்முள் நினைந்து இளஞ்சிவப் பாமதை ஏத்துவனே

மார்ச் 08, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 7

ऐश्वर्यमिन्दुमौलेरैकत्म्यप्रकृति काञ्चिमध्यगतम् ।
ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् ॥7॥

ஐஸ்வர்யம் இந்துமௌளே: ஐகாத்ம்ய ப்ரக்ருதி காஞ்சிமத்யகதம் |
ஐந்தவகிசோர சேகரம் ஐதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம் ||   (7)

பரப்ரம்ஹத்தோடு இரண்டென்று வேறிலாது இருக்கும் பரவஸ்துவும், காஞ்சீ புரத்தின் நடுவே வீற்றிருப்பதும், இளம் பிறையினை சிரத்தில் அணியாகக் கொண்டதுமான, சந்த்ரமெளளீஸ்வருடைய தேவிரூப (காமாக்ஷி) செல்வமானது, சிவமே ஆக்கியளித்த வேதமாகவும் விளக்கமாகவும் விளங்குகிறது.

சிவத்தோடு வேறிலா சித்தாய சக்தியாய் சேர்ந்தவளும்
சிவகாஞ்சீ புண்ணிய சேத்திரத் தேயுறை சின்மயியும்
சிவசந்த்ர மௌலியர் செல்வம் பிறையணி சேகரியும்

சிவவேத ஞானமும் செம்பொரு ளான சிவசதியே

மார்ச் 07, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 6

परया काञ्चीपुरया पर्वतपर्यायपीनकुचभरया ।
परतन्त्रा वयमनया पङ्कजसब्रह्मचारिलोचनया ॥6॥

பரதந்த்ரா வயமனயா பங்கஜ ஸப்ரம்ஹசாரிலோசனயா |
பரயா காஞ்சீபுரயா பர்வதபர்யாய பீனகுசபரயா ||   (6)

காஞ்சீபுரியிலிருப்பவளும் பர்வதங்களின் உருவம்போல் பருத்ததான தன பாரங்களை உடையவளும், தாமரைப் பூக்களைப்போல் கண்களைக் உடையவளுமான இந்த பரதேவதையினால் நாம் பரவசமாகிவிட்டோம்

மாமலை யேபோல் மதர்க்கும் தனமுடை மாதரசி
தாமரைப் பூக்களைத் தாயவள் கண்களாய் தாங்கியவள்
காமத்துக் கோட்டமாம் காஞ்சி வதியும் கருணையளை

பாமையாம் தேவியைப் பார்த்திட என்றும் பரவசமே 

மார்ச் 06, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 5

पञ्चशरशास्त्रबोधनपरमाचार्येण दृष्टिपातेन ।
काञ्चीसीम्नि कुमारी काचन मोहयति कामजेतारम् ॥5॥

பஞ்சசர சாஸ்த்ர போதன பரமாசார்யேண த்ருஷ்டிபாதேன |
காஞ்சீ ஸீம்னி குமாரி காசன மோஹயதி காமஜேதாரம் ||   (5)

இந்த ஸ்லோகத்தில்  பரமேஸ்வரனுக்கே காமாட்சி பரமாச்சார்யாளாக இருப்பதை அழகாக கூறுகிறார் மூககவி. காஞ்சீயின் எல்லையுள் ஒரு குமாரி காம சாஶ்த்ரத்தைப் போதிப்பதில் பேராரசிரியையாகி தன் கடைக்கண் நோக்கால் காமனை வென்றவரையே மயக்குகிறாளாம்.

நெற்றிப் பொறியினில் நீராகி மாரன் நிலம்படவும்
செற்றப் பரமனை சேல்விழிப் பார்வையில் சேர்த்தணைக்கும்  
பெற்றியைப் பெற்றவள் பேறெனக் காஞ்சிப் பெருங்குருவாய்
பற்றிப் பரமர்க்கு பஞ்சர பாடம் படிக்கிறாளே!

பஞ்சர பாடம் - காமனுடைய சாத்திரம்; பஞ்சர் - பஞ்ச சரம்!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...