நவம்பர் 09, 2015

குறளின் குரல் - 1299

9th Nov, 2015

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

                           (குறள் 1293: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

கெட்டார்க்கு - அழிவுறுகிறவர்களுக்கு
நட்டார் இல் - நண்பர்கள் இருக்கமாட்டார்கள்
என்பதோ நெஞ்சே நீ - என்பதாலோ நெஞ்சமே நீ
பெட்டாங்கு - விரும்பி
அவர்பின் செலல் - அவர் பின்பாக செல்கின்றாய்?

அழிவின் விளிம்பில் இருப்பவர்களுக்கு நண்பர்கள்கூட இருக்கமாட்டார்கள் என்பதாலோ, என் நெஞ்சமே, நீ விரும்பி அவர்பின் செல்கின்றாய்? என்று தன்னைப் பிரிந்து சென்றதால் அவர் அழிந்துபடுவார் என்றும், அதனால் அவர்க்கு நண்பர்களே இருக்கமாட்டார்கள் என்றும் உணர்த்துகிறாள். ஆயினும் அவள் உள்ளம் அவர்பால் ஈர்க்கப்படுவதை உணர்ந்து அதைக் கண்டிக்கிறாள் இவ்வாறு..

அகநானூற்று வரிகள் (71:1-3), பயனின்மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல்” என்று கூறுவதும், வளையாபதி வரிகள், “விழுமிய ரேனும் வெறுக்க யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போல்” என்று கூறுவதும், கெட்டார்க்கு நண்பர்கள் இல்லை என்பதைதான்.

Transliteration:

keTTArkku naTTAril enbadO nenchEnI
peTTAngu avarpin selal

keTTArkku – Those who are in for ruin
naTTAr il – there will be no friends
enbadO nenchE nI – is what why, O! my heart?
peTTAngu - desiring
avarpin selal – you went behind him?

Those who are in the verge of destruction, ruin, would not have friends at all! Is that why you want to show solidarity and desiring to be with, go behind him? O! my heart! – The maiden rebukes her heart, realizing despite his leaving her and going away, her heart is drawn towards him.

This verse is based on an adage that is in vogue, “keTTArkku naTTar il” and has been used in many literary works, mostly in direct context, not as a similie.

“It is said that, friends none for that in ruin.
 Is that why, in desire, behind him you run?

இன்றெனது குறள்:

அழிந்தார்கு நண்பரில்லை என்றோ விரும்பி
ஒழிந்தாய்நெஞ் சேயவர் பின்?

azhindArkku naNbarillai enRO virumbi
ozindAinen cEyavar pin?

நவம்பர் 08, 2015

காஞ்சியில் காட்சிதரும் காமாட்சி

ஸுமனேஸ ரஞ்சனி

ஸ க2 ம2 ப நி2 ஸ் - ஸ் நி2 ப ம2 க2 ஸ

பல்லவி:
காஞ்சியில் காட்சிதரும் காமாட்சி - பக்தரை
வாஞ்சையுடன் காக்குமுன தாட்சி - அம்மா
அனுபல்லவி:
தீஞ்சுவை இசைஞானம் தெள்ளிய சொல்லாட்சி
ஆஞ்சையில் அன்னையே அமர்ந்தருள்வாய் மாட்சி
(ஆஞ்ஞா சக்கரம் - ஞானம் சக்கரம்)
சரணம்:
ஊஞ்சலாடும் உள்ளம் ஒருநிலை பெறவுந்தன்
ஆஞ்சையே அகந்தனில் அனுதினம் விழைந்தேன்!
பூஞ்சுமந்த பாணமும் கரும்புவில்லும் ஏந்தி
காஞ்சியில் கன்னிமதி கொஞ்சிடும் கவினெழிலே!
ஆஞ்சை-உத்தரவு; காஞ்சி - கேசம்

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் - 12

இப்போது எல்லோரும் அறிந்த, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் ஓர் அசிங்கக்கூத்து நாடுதழுவி நடந்து கொண்டிருக்கிறது. குடியரசில் இதெல்லால் செய்யலாம் என்றாலும் கூட, ஒரு பைசாவுக்குப் பெறாதா காரணத்தைச் சொல்லி, தங்கள் அரசியல் எதிரியான மோடி அவர்களின் இமாலய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய அங்கீகாரம் இவற்றைப் பொறுக்கமுடியாமல், இவர்களது கைக்கூலிகளாகவே செயல்பட்டு அவற்றுக்க்காக விருதுகளை வாங்கியவர்களே இன்று திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.. 

இது ஒரு அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட சதிவலையாகவே தோன்றுகிறது. இவர்களில் பல எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.. ஏன் விஞ்ஞானிகள் என்றுகூட சொல்லிக்கொள்கிறார்கள்.. பெரும்பாலும் இடது சாரி சிந்தனைத் தளத்தில் இயங்கி, சார்பின்மை என்பதனைப் பற்றி நாளும் பாடம் எடுத்துக்கொண்டிருப்பவர்கள்.

ஒருவகையில் இவர்கள் செய்வது சரியே.. பொறையுடைமை (TOLERANCE) பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த பொறையுடைமையின் அரிச்சுவடி கூட அறியாதவர்களுக்கு, அசடர்களுக்கு, தகுதியில்லாதவர்களுக்கு, முதலில் விருது கொடுக்கப்பட்டதே தவறு.. அத்தவறு இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய பாரதம் பொறையுடைமை இன்மையோடு (INTOLERANT) இருக்கிறதாம்.. அதாவது நம்முடைய பெரும்பாலான குடிமக்கள் அவ்வாறு இருக்கிறார்களாம். 

இவர்கள் பிரதமர் மோடியை அசிங்கப்படுத்தவேண்டும், நம் நாட்டை வெளிநாடுகளின் பார்வையில் அசிங்கப்படுத்தவேண்டும் என்று ஒரு முனைப்போடு செயல்படுகிறார்கள்.

ஒருவர் சொல்லுகிறார், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி, குறிப்பாக அமெரிக்கப் பயணத்தைப் பற்றி அமெரிக்கப் பத்திரிக்கைகள் பெரிதாகப் பேசவே இல்லை என்று.. அதே மூச்சில், அவர்கள் நம்நாட்டு பொறையின்மையைக் கூர்ந்து கவனித்து பத்திபத்தியாக எழுதுவதாக.. எவ்வளவு அயோக்கியத்தனமான வாதம் இது? அவர்களுடைய நோக்கமாவது பரவாயில்ல.. நம்முடைய வளர்ச்சியை விரும்பாதவர்கள், குற்றங்களை பூதாகாரமாகப் பேசி உலக அரங்கிலே நம்மைத் தலைகுனியச் செய்யவேண்டும் என்று முனைபவர்கள். 

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னுடையதோ என்று கேட்டு நாட்டைவிட்டு நீங்கிய புலவர்களைத்தான் நம் நாடு கண்டிருக்கிறது.. இந்த தன்மானத் திலகங்கள் அவ்வாறு செய்தாலாவது கொஞ்சம் மதிக்கலாம். இங்கேயே உட்கார்ந்து கொண்டு, தங்களுடைய வக்கிரங்களை அனுமத்திக்காத அரசு மத்தியில் ஆட்சி புரிகிறதே என்று வயித்தெரிச்சல் படுபவர்களை என்ன செய்யலாம். அவர்கள் நினைப்பது போல மிகவும் பொறையுடைமை உடைய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா அல்லது ISIS போன்ற ஜீவகாருண்யமிக்க இயக்கங்கள் இருக்கும் ஸிரியா போன்ற நாடுகளுக்கு வேண்டுமானாலும் அனுப்பிவிடலாம்.

கீழ் காணும் கலித்தொகை வரிகளைப் பாருங்கள்.. நல்ல நாட்டிலே பகை வந்து சேர்ந்த்தாக அந்த நாட்டை விட்டு நீங்கும் மக்கள், தகுதியுள்ள தலைவனைத் தேர்ந்தெடுத்து வேறு இடத்தில் வாழ்வார்களாம்..

பண்புடை நல்நாட்டுப் பகை தலை வந்தென
அது கை விட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழற்
பதி படர்ந்து இறை கொள்ளும் குடி …………..
 மருதன் இளநாகனார். கலித். 78 : 4 – 6

இந்த விருது திரும்பிகொடுக்கும் நன்மக்கள், இவர்கள் நாட்டுக்கு அரசே பகையாயிற்று என்று கருதினால், ஒட்டுமொத்த பாரதமும் பொறையின்றிப் போயிற்று என்று நினைத்தால், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அவர்களுக்கென்று தனி குடியேற்றம் செய்துவிட்டால் போகிறது… அவர்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.. வேண்டுமானால் துணக்கு மணிசங்கர் ஐயர் போன்ற சிறந்த தேசபக்தர்களையும், பர்காதத், நிதி ரஸ்தான் போன்ற ஊடக நங்கூரங்களையும் அழைத்துச் சென்று, சார்பில்லாத ஒரு குடியரசு அமைக்கலாமே…?

அன்று இப்படி:

பண்புள்ள நாட்டிலே பார்பொறை யின்மையென்று
புண்ணாகிப் போனோர் புலம்பெயர்வர் - திண்ணமவர்
தன்மானம் காத்தோராம்; தம்மவரில் சீர்த்தோனை
முன்னிருத்தி வாழ்வார் முனைந்து

இன்று எப்படி?:

உடனிருந்தே கொல்நோய் உறவாடிச் சாய்க்கும்
விடமென்ன பச்சோந்தி வீணர் - சுடரணைக்கும்
சூரர்கள் சொல்லாலே சூதுவிளை சூழ்ச்சியர்கள்
பாரதத்தைப் பற்றிய புற்று

குறளின் குரல் - 1298

8th Nov, 2015

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

                           (குறள் 1292: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

உறாதவர்க் கண்ட கண்ணும் - நம்மிடத்தில் அன்பு உறாதவர் என்றறிந்து கண்டு உணர்ந்த பின்னும்
அவரைச் செறாரெனச் - அவர் கோபிக்கமாட்டார் என்று
சேறி ன் நெஞ்சு - அவர் மாட்டு செல்கின்றாயே என் நெஞ்சமே

என் காதலர் என்னிடத்தில் அன்பு கொள்ளாதவர் என்றறிந்து உணர்ந்த பின்னும், நீ அவர்மாட்டு வலிந்து செல்வதற்காக, அவர் வெகுளார், வெறுக்கார் என்று நம்பி, அவரிடத்தில் செல்கின்றாயே என் நெஞ்சே, என்று காதற்தலைவி தன் நெஞ்சோடு கோபித்துக் கூறுகிறாள். நெஞ்சோடு பிணங்கி இவ்வாற்ய் கூறினும், அவர் தன்னை வெறுத்துத் தள்ளக்கூடாது என்கிற உள்ளக்கிடக்கையை அவள் கூறுவது உள்ளுரையான பொருள்.

Transliteration:

uRAa davarkkaNDa kaNNum avaraich
cheRAarenach chERiyen nenju

uRAadavark kaNDa kaNNum – Though you’re aware that he does not love me anymore
avaraich cheRAarenach – that he will not be angry
chERi yen nenju – you’re drawn towards him, O! my heart.

Though you’re aware that my lover does not love me anymore, you still are drawn towards him, O! my heart, thinking that he will not be angry with nor detest you for that, says the maiden to her heart! There is a hidden yearning conveyed in her pretense quarrel with her heart, that he would not do so.

“Though you’re aware he does not love me anymore, O! my heart
 You’re drawn to him, as if he would not be angry with you for that!”

இன்றெனது குறள்:

அன்பிலார் என்றுணர்ந்த பின்பும் அவர்வெகுளார்
என்றவர்பால் செல்வாயென் நெஞ்சு

anbilAr enRuNarnda pinbum avarveguLAr
enRavarpAl selvAyen nenju

நவம்பர் 07, 2015

குறளின் குரல் - 1297

130: (Protesting with self  - நெஞ்சொடு புலத்தல்)

[After confiding with the friend about how her heart and mind hasten to be with her beloved, in this chapter, being annoyed by such desire from the heart, she is expressing her earnest protest to the heart and questions its intentions to lead her to her beloved ]

7th Nov, 2015

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

                           (குறள் 1291: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

அவர் நெஞ்சு - என்காதலர் மனமானது அவருக்கு கட்டுப்பட்டு
அவர்க்கு ஆதல் கண்டும் - என்னை நினையாதிருக்க அவர்க்கு உறுதுணையாய் இருக்கக் கண்டும்
எவன் நெஞ்சே - எக்காரணம் பற்றி, என்னுடைய மனமே
நீ எமக்கு ஆகாதது - நீ என் கருத்துக்கு உடன்படாதது?

என் நெஞ்சமே! நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்! என் காதலர்தம் நெஞ்சம் அவருடைய எண்ணத்துக்கு உடன்பட்டு என்னைப்பற்றி நினையாமலிருக்கிறது. நீ ஏன், யாது காரணம் பற்றி அதுபோல என் எண்ணத்திற்கு உடன்படாது என்னை அவர்பால் ஈர்க்கின்றாய் என்று தலைவி தன் மனத்தோடு முறையிட்டு சண்டையிடுகிறாள். உனக்காகவாது தெரிந்திருக்க வேண்டும், அன்றி, அவருடைய நெஞ்சைப் பார்த்தாவது நீ செய்யவேண்டும். இரண்டும் செய்யவில்லையே என்று தலைவி நெஞ்சை நொந்துகொள்கிறாள்.

கலித்தொகையின் பல பாடல் வரிகள் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

“புலப்பென்யான் என்பேன்மன அந்நிலையே அவற்காணின்
கலப்பென் என்னுமிக் கையறு நெஞ்சே!” (கலித்தொகை: 67:8-9)

“ஊடுவென் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
 கூடுவென் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே” (கலித்தொகை: 67:12-13)

“துனிப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத்தனியில் நெஞ்சே” (கலித்தொகை: 67:16-17)

“நிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னும் தம்மோ
டுடன் வாழ் பகையுடை யார்ர்கு” (கலித்தொகை: 77:22-24)

Transliteration:
avarnenju avarkkAdal kaNDum evannenjE
nIemakku AgA dads?

Avar nenju – that his heart is
Avarkk(u) Adal kaNDum – in his control and goes what he thinks
evannenjE – for what reason
nI emakku AgAdadu? – you’re not listening to my wish, O! my heart?

O! my heart! Don’t you see that his heart (my beloved) goes with his thought of “not thinking about me”? Why then are you, and for what reason, not in agreement with my similar thought and draw me towards him?, the maiden quarrels with her heart in this verse.  Either you should know on your own or must have the sense to emulate what the counter part does; you do neither! – is the implied tone of the maiden here!

“Don’t you see that his heart listens to his thought!
 For what reason do you not do the same O! heart!”

இன்றெனது குறள்:

அவரெண்ண மாற்றுமவர் நெஞ்சுகண்டும் நெஞ்சே
இவணதுபோல் ஆற்றாத தேன்?

avareNNa mARRumavar nenjukaNDum nenjE
ivaNAdupOl ARRAda dEn?

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...