நவம்பர் 15, 2014

குறளின் குரல் - 940

15th Nov 2014

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
                                    (குறள் 934: சூது அதிகாரம்)

சிறுமை பலசெய்து - அவமானப்படும் அளவுக்குத் துன்பம் பலவும் தந்து
சீரழிக்கும் - ஒருவரின் சீர்த்தியைப் பாழ் செய்யும்
சூதின் - சூதைக்காட்டிலும்
வறுமை தருவதொன்று - ஒருவரை ஏழ்மையில் ஆழ்த்துவதொன்றும்
இல் - இல்லை.

ஒருவரை தாழ்வுறச் செய்யும் துன்பங்கள் பலவற்றைத் தந்து, அவருடைய புகழைக் குலைத்து அவருக்கு ஏழ்மையை தருவதில் சூதைக்காட்டிலும் மிக்கது இல்லை. சூதாட்டத்தில் ஈடுபடுவோர்க்கு, தாழ்மையும், இகழ்வுமே சேரும். இவை இருக்குமிடத்தில் செல்வமும் கெட்டு, ஏழ்மையே மிஞ்சும். எளிமையான கருத்தும், அதை விளக்கும் குறளும்.

Transliteration:

Sirumai palaseidhu sIrazhikkum sUdin
vaRumai tharuvadonRu il

Sirumai palaseidhu – bringing many painful things of shame
sIrazhikkum – destroys the fame
sUdin – other than the gamble
vaRumai tharuvadonRu – brings poverty to a person
il - none

There is none worse than gambling that can make a person utterly poor, also make him face the pain of shame, many times and completely undo his fame and name. For those indulge in gambling, only lowliness, and disgrace will befall. A simple thought expressed in simple words.

“None worse than gambling to make a person lose fame,
 render him poor, and bring multitudes of pains of shame”

இன்றெனது குறள்:

ஏழ்மைசெய்து பாழ்செய்யும் சூதைவிட துன்பமும்
கீழ்மையும் செய்வதொன்று இல்

Ezhmaiseidhu pAzhseyyum sUdaivida thunbamum

kIzhmaiyum seyvadhonRu il

நவம்பர் 14, 2014

குறளின் குரல் - 939

14th Nov 2014

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
                                    (குறள் 933: சூது அதிகாரம்)

உருள் ஆயம் - பகடை வீசி, பணயத்தை
ஓவாது கூறின் - ஓயாமல் சொல்வதால்
பொருள் ஆயம் - ஈட்டிய செல்வமும், ஆதாயமும்
போஒய்ப் - சென்று
புறமே படும் - பிறரையேச் சேரும்

இடைவிடாது கவறாட்டத்தில் ஈடுபட்டு, பகடை உருட்டி, “இதோ என் பணயம்” என்று பணயப்பொருள் மதிப்பை கூட்டிக்கொண்டே செல்வோர்க்கு, சொல்வோர்க்கு அவர் ஈட்டிய ஆதாயமும், செல்வமும் சென்று பிறரையே சேரும். சூது எல்லாவற்றையும் இழக்கச் செய்யுமென்று மிகவும் எளிமையாகக் கூறுகிறார் வள்ளுவர்.

மகாபாரதத்தில் தருமத்தின் உருவமாகக் கொண்டாடப்படும் தருமரே சகுனியின் கவறாட்டம் சூது என்று அறிந்தும், அதை அரச தருமம் என்ற போர்வையில், தம்மினும் வல்லவனான சகுனியோடு சூதாடி, மேலும் மேலும் பணயத்தைக் கூட்டி, எல்லாமே இழந்தது, இதிகாசம் காட்டும் காட்சி இக்குறளை காட்சியாக்கி கண்முன் நிறுத்துகிறது. உண்மையில் தருமருக்கு சூதாட்டத்தில் இருந்த விழைவே அவரை எல்லாவற்றையும் இழக்கச் செய்தது.

Transliteration:

uruLAyam OvAdu kURin poruLAyam
pOoiip puRamE pAdum

uruL Ayam – throwing dice and betting
OvAdu kURin – without stopping, by saying the what is being placed as bet
poruL Ayam – all the wealth earned and gains
pOoiip – will leave
puRamE pAdum – and only go to others; (enemies)

By indulging in the gamble of game of dice and by incessantly increasing bet everytime, (despite odds being totally against his winning), a person shall lose all his wealth and gains to others, mostly enemies. Gambling results in total loss for anyone and everyone.

Most celebrated as the form and figure of virtue of righteousness, Dharma, lost everything under the garb of “Kings virtue” to Sakuni’s who was clearly superior in the game of dice. The truth is that his interest in the game led him to bet everything in his possession and lost them all.

“Incessantly increasing the bet each time of throwing the dice
 A person shall lose everything, earnings and gains in that vice”

இன்றெனது குறள்:

பகடைப் பணயமோயாச் சொல்வார்தம் செல்வம்
அகன்று பிறர்க்கேசே ரும்

pagaDaip paNayamOyAch cholvArtham selvam

aganRu piRarkkEchE rum

நவம்பர் 13, 2014

குறளின் குரல் - 938

13th Nov 2014

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு?
                                 (குறள் 932: சூது அதிகாரம்)

ஒன்றெய்தி - ஒரு பலன் பெறுவதற்காக
நூறிழக்கும் - நூறு பலன்களை இழக்கின்ற
சூதர்க்கும் - சூதாடிகளுக்கு
உண்டாங்கொல் - உண்டோ?
நன்றெய்தி - நல்லவற்றை அடைந்து
வாழ்வதோர் - வாழ்வதற்கான
ஆறு - வழி!

ஏதோ ஒரு ஆதாயத்தை அடைவதற்காய், பலவற்றை இழக்கும் சூதாடிகளுக்கு நல்லவற்றை அடைந்து வாழ்வதற்கான வழி ஏதேனும் உண்டா? இல்லை என்பது தொக்கி நிற்கும் பொருள்.

ஒன்று, நூறு என்கிற கணக்குக்கு வள்ளுவர் மகாபாரதத்தின் கௌரவர்களை அடிப்படையாகக் கொண்டே கூறியிருக்கலாம். இல்லையெனில் சிலவற்றைப் பெற்று பலவற்றை இழக்க நேரும் என்றோ, அல்லாது எல்லாவற்றையுமே இழக்கவேண்டும் என்றோ கூறியிருக்கலாமே!

மகாபாரதத்தைப் பொருத்தவரை இக்குறள் கௌரவர் அனைவருக்கும், துரியோதனன், சகுனி, திருதராட்டிரன் எல்லோருக்கும் ஒன்று-நூறு என்கிற கணக்கு, பொருந்துவதே. தம் நூறு மகன்களின் நலனுக்காக, குறிப்பாக துரியோதனின் மேலிருந்த குருட்டுத்தனமான பாசத்துக்காக, திருதராட்டிரன் சூதாட அனுமதி அளித்தான்; சகுனியோ தம் தங்கையின் நூறு புதல்வர்களும் குறிப்பாக துரியோதனும் நலமாக இருக்க, பாண்டவர்களை ஒழிக்க எண்ணினான்; துரியோதனோ பிறவியிலேயே குணக்கேடன். பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமைக்காக, தாமே நாட்டை அடையவேண்டுமென்கிற ஆசையில் சகுனியின் துணையுடன், திருதராட்டிரன் அனுமதி பெற்று, வஞ்சக சூதிலே பாண்டவர்களை வென்றாலும் முடிவில் இவர்களெல்லாம் அடைந்தது என்ன? நூறு புதல்வர்களை திருதராட்டிரனும், நூறு மருகன்களை சகுனியும், துரியோதனன், தம்மோடு சேர்த்து நூறு சகோதரகளையுமே இறுதியில் இழந்தார்கள். இவர்கள் சூதால் ஒன்றை அடைந்தாலும், இறுதியில் பெற்றது என்ன? நூறை இழந்தார்களே!

Transliteration:

OnReidhi nUrizhakkum sUdarkkum uNDAngkol
nanReidhu vAzhvadhOr Aru?

OnReidhi – for a single benefit
nUrizhakkum – losing all the hundred other benefits
sUdarkkum – those that gamble
uNDAngkol – Is there?
NanReidhu – gaining good benefits
vAzhvadhOr – and living with those good benefits
Aru? - a way!

If a person, for gaining one benefit, loses hundreds in gamble, is there way for him to survive and gain any good? None, implies vaLLuvar.

The specific counts of one and hundred in this verse seem to be based on Kauravas of Mahabharata. If not, the poet could have simply said, a few gains and many a losses.

This verse is equally applicable to all three, Dhridarashtra, Sakuni and DhuryOdanA. To secure the state for his hundred sons and blinded by his love for the first born Dhuryodhana, Dhridarashtra allowed the game of dice. Sakuni blinded by his love for his sister, wanted to secure the state for his nephews. Dhuryodhana driven by jealousy and the avarice to rule, wanted to eradicate the trace of Pandavas. All of them lost hundred - Dhridarashtra, his hundred sons, Sakuni his hundre nephews and finally Dhuryodhana, including himself, all his siblings. They attained a temporary, and transient gratification of winning over Pandavas in the game of dice; but in the end, lost everything they had including their lives.

For those that lose hundred benefits for one
is there way to live gaining any good? None!”

இன்றெனது குறள்:

உற்றதெல்லாம் ஒன்றேயாம் மற்றதெல்லாம் அற்றதாகும்
பெற்றெதை வாழ்வார்சூ தால்?

uRRadhellAm onREyAm maRRadhellAm aRRadhAgum

peRRedhai vAzhvArsU dAl?

நவம்பர் 12, 2014

குறளின் குரல் - 937

94: ( Gamble - சூது )

[ In the list of transgressions of human beings, that vaLLuvar addresses and advises not to engage in, next to toddy drinking is the habit of gambling. Toddy-addiction ruins a person and perhaps his family too; but the gambling can bring about a catastrophic destruction to an entire clan and even ruin a large population, as evident from the story of Mahabharata; gambling ruins and topples kingdoms. Since the entire canto on wealth is predominantly ruler centric, it is very possible, that the epic Mahabharata has been the central thought to the verses of this chapter. This is evident from the second verse, “Onreidhi nURizhakkum sUdarkkum” ]

12th Nov 2014

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
(குறள் 931: சூது அதிகாரம்)

வேண்டற்க - விரும்பாதீர்
வென்றிடினும் - வெல்லும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டவனாயினும்
சூதினை - சூதாட்டத்தை
வென்றதூஉம் - அவ்வாறு வென்றது எதுவாக இருக்குமென்றால்
தூண்டிற்பொன் - தூண்டிலில் இரையோடு இருக்கும் இரும்பு முள்ளை
மீன்விழுங்கி அற்று - மீன் இரையெனக் கருதி விழுங்கி அதனால் தூண்டிலில் அகப்பட்டது போலாம்.

சூது என்பது ஆசை காட்டி மோசம் செய்யும் இயல்பினது என்பதை முதற் குறளிலேயே தூண்டில் இரைக்கு ஆசைப்பட்டு, அகப்பட்டுக் கொள்ளும் மீன்களை உவமித்துச் சொல்லுகிறார் வள்ளுவர். ஒருவன் சூதாடி வெற்றியே கொள்பவனாக இருப்பினும், அவன் அச்சூதினை அவன் விரும்பக்கூடாது. அவ்வாறு வெல்லுவது மீண்டும் மீண்டும் அவனை சூதாட்டத்தில் ஆழ்த்தி, தளை செய்து, பெற்றதையெல்லாம் இழக்கச்செய்வதோடு, அவனை அழிவுப்பாதை என்ற முள்ளில் சிக்க வைத்து, முடிவில் அழிவிலாழ்த்திவிடும். சூதாட்டத்தில் வென்ற கௌரவர்கள் தாமும் அழிந்து, தம்மவர்களையும் அழிவுப்பாதையில் அழைத்துச் சென்றார்கள் அல்லவா?

Transliteration:

vENDaRka venRiDinum sUdhinai venRadUum
thUNDiRpon mInvizhungi aRRu

vENDaRka – Don't desire to play
venRiDinum – even if winning ability is there in you,
SUdhinai – the evil of gamble
venRadUum – that you win would be
thUNDiRpon – the baited hook
mInvizhungi aRRu – that a fish grabs hold to be caught for its own death.

In the very first verse of this chapter itself, vaLLuvar underlines the nature of gamble that it attracts only to lead for an eventual destruction. To emphasize the thought he uses the metaphorical reference of of a fish caught in the hook, yielding to the temptation of food that is hides a hook. Even if a person has the ability to win the gamble again and again, it only indulges him more in to it to eventually make him lose all that he gained. After all the gamble of dice played by KauravAs gave them elation of victory over pANDavAs temporarily, but ultimately led to a massive destruction of the entire clan and their associates.

Gamble is like a hook hidden inside food to attract fish
  Though a temporary gain, destroys eventually to finish”

இன்றெனது குறள்:

மீன்விழுங்கும் தூண்டிலிரைப் போன்றதீய சூதினைத்
தான்வென்றா லும்வேண்டற் க

mInvizhungum thUNDilirap pOnRathIya chUdhinaith

thAnvenRA lumvENDaR ka

நவம்பர் 11, 2014

குறளின் குரல் - 936

11th Nov 2014

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
                                 (குறள் 930: கள்ளுண்ணாமை அதிகாரம்)

கள்ளுண்ணாப் போழ்திற் - கள்ளுண்பவர் தாம் கள்ளுண்ணா நேரத்து
களித்தானைக் காணுங்கால் - அதை உண்டு களித்திருப்போரைக் கண்டால்
உள்ளான்கொல் - உணர்ந்து கொள்ளமாட்டரோ?
உண்டதன் - கள்ளுண்டதனால் உறுகின்ற
சோர்வு - கேடு? (அவர் மன, மொழி, செயல்களால் தம் வயத்தில் இல்லாமலிருத்தலை)

அதிகாரத்தின் நிறைவிலே ஒரு அங்கலாய்ப்பு தொனிக்கிறது. தாமாக உணராதவர், பிறர் சொன்னாலும் கேளாதவர், தாம் உண்ணாதபோதாவது, கள்ளுண்ணும் பிறர், கள்ளுண்டு மயங்கியிருப்பதையும், அதனால வரும் கேட்டினையும், கண்ணுற்று அதனால் திருந்தமாட்டாரா? அவ்வாறு காணும் கேடு என்னவாயிருக்கும்? கள்ளுண்போர் மனம், மொழி, செயல்களால் தன்வயமிழந்து இருத்தலையே சோர்வு என்கிறார் வள்ளுவர்.

Transliteration:

kaLLuNNAp pOzhdiR kaLIththAnaik kANungkAl
uLLAnkol uNDadhn sOrvu

kaLLuNNAp pOzhdiR – when a person is sober without drinking toddy
kaLIththAnaik kANungkAl – when he sees the others who drink toddy and act without control
uLLAnkol – won't he think and understand
uNDadhn – that of toddy drinking
sOrvu – ill-effects of being not in control in mind, words and deeds.

There is a tone of exhaustion and desperation in the final verse of this chapter. At least when he is not drinking and is sober, a person who does not realize on his own, and does not listen to others advising, won't he think and try to come out of addiction seeing how other toddy-drinkers act? - asks vaLLuvar! He is certain to see the ill-effects of toddy drinking in others, of not being in control of their senses, words and deeds, which are impossible while being indulgent.

Won't a toddy-addict realize his folly seeing the ill-effects
  of that, when he is sober and see others in indulgent acts”

இன்றெனது குறள்:

கள்ளுண்பான் காணானோ உண்டான் உறுங்கேடு
கள்ளுண்ணா நேரத் துணர்ந்து?

kaLLuNbAn kANAnO uNDAn uRungkEDu

kaLLuNNA nErath thuNArndhu?

நவம்பர் 10, 2014

குறளின் குரல் - 935

10th Nov 2014

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
                             (குறள் 929: கள்ளுண்ணாமை அதிகாரம்)

களித்தானைக் - கள் களித்து போதையில் மூழ்கியவர்க்கு
காரணம் காட்டுதல் - அது தவறென்று அறிவுறுத்தி தெளிவிக்க முயலுதல்
கீழ்நீர்க் - நீருக்குக் கீழே மூழ்கி
குளித்தானைத் - குளித்துக் கொண்டிருப்பவரை
தீத் துரீஇ அற்று - தீப்பந்தத்தால் தேடுவரோ?

கள்குடியில் களித்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி, மூழ்கி இருப்பவரைத் திருத்துவதற்காக அவருக்கு தெளிவுறுத்தல் என்பது, நீருக்கு அடியிலே மூழ்கி குளிப்பவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு ஒப்பாகும், என்கிறார் வள்ளுவர்.

நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்..! ராத்திரிக்குத் தூங்கவேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்" என்ற கவித்துவமாகத் திரைப்படப் பாடலொன்று சொல்லுவதுண்டு. "குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" என்பதும் பழக்கமான சொலவடைதானே! அவர்களுக்கு அறிவுறுத்தித் திருத்துவது என்பது நடவாத காரியம். அது தீப்பந்தம் கொண்டு நீருக்கடியில் மூழ்கிக் குளிப்பவர் ஒருவரைத் தேடுவதற்கு ஒப்பாகும் என்கிற உவமை சொல்லவந்த கருத்துக்குப் பொருத்தமே! ஆனால், மின்சார தீவட்டிகள் நிறைந்துவிட்ட நாட்களில் நீருக்குள் தேடுவது எளிதல்லவா?

"குடி குடியைக் கெடுக்கும்", “புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்துக்கு ஊறுவிளைவிக்கும்" என்ற அபாய அறிவிப்பினைச் ஒரு கடமைக்காகச் செய்துவிட்டு அவற்றை ஒரு கேளிக்கைக்காகக் காட்டும் திரைப்படங்கள் மலிந்துவிட்ட நாட்களில், அரசாங்கமே, "குடி"மகன்களின் விருப்பம் என்ற போர்வையில், அரசாங்கத்துக்கு வருவாய் ஈட்டுதல் என்ற காரணத்துக்காகச் சாராயக்கடைகளை நடத்தும்போது இக்குறளால் ஆகக்கூடிய பயனென்ன? தவிர இக்குறளில் ஒரு நம்பிக்கையின்மை தெரிகிறது. குடிகாரர்களைத் திருத்த முடியும் என்பதற்காக பல அமைப்புகள் முயலுகையில் குடிப்பழக்கதிருந்து ஒருவரை மீட்பது இயலாது என்பது எதிர்மறையான சிந்தனைதானே? இவ்வமைப்புகள் மின்சாரத் தீவட்டிகளைப் போன்றவையே, எரிப்பந்தங்களைப் போல் நீரில் அவிந்துவிடக்கூடியவை அல்ல.

Transliteration:

kaLithtAnaik kAraNam kATTudal kIzhnIrk
kuLiththAnaith thIththurIi aRRu

kaLithtAnaik – To an addicted person
kAraNam kATTudal – reason out and explain the ill-effects to correct them
kIzh nIrk – under water
kuLiththAnaith – that who is swimming (to look for him)
thIth thurIi aRRu – attempting to search using a torch fire.

To advice an addicted person is a wasted effort, is the underlying thought expressed in this verse. It is like searching a person swimming under water with torch fire, impossible and foolish, implies vaLLuvar.

It is my promise that I won't drink from tomorrow; but tonight, to sleep, I will indulge a bit” is a rough translation of a movie song, underscores the behavioral pattern of addicts. “What an addict promises will hold no good when it is dawn”, says an adage, implying it is impossible to correct them by advising. Though the metaphorical reference of this verse, would make sense for vaLLuvar's times, in the days of electric torch lights, that function very well underwater, it makes it irrelevant.

Also, there are many public hoardings as well movie messages, vein-preaching that drinking and smoking are injurious to health as well as family and continue to show the same in entertainment, what good this verse would do? When governments, under the promise of freedom of action, and revenue generation, promote toddy drinking through their own outlets, what effect such preaching would have?

Also this verse sets an undertone of hopelessness, which is unnecessary these days, as there are many organizations that work tirelessly with programs that recovers people from such habits. The negativity of this verse is inappropriate in the days of perpetual hope of, “there is an alternative”, for every adverse situation.

Does it make sens to search a person underwater with a fire-torch?
Likewise, it is of no use to advice a toddy-addict to change as such”

இன்றெனது குறள்(கள்):

தேடுவரோ தீபந்தால் நீருள்ளே? காரணங்கள்
கூடுமோ கள்களிப்பார்க் கு?

thEDuvarO thIpandAl nIruLLE? KaraNangaL
kUDumO kaLkaLippArk ku?

இதே கருத்தை (பொருத்தமற்ற) உவமையை நீக்கிவிட்டு மீண்டுமொரு குறள்:

கள்ளுண்பார் காரணம் காணாரே கற்பிக்க
உள்ளுவரோ உண்மையறிந் தார்?

kaLLuNbAr kAraNam kANArE kaRpikka

uLLuvarO uNmaiyaRin dAr?

நவம்பர் 09, 2014

குறளின் குரல் - 934

9th Nov 2014

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
                                  (குறள் 928: கள்ளுண்ணாமை அதிகாரம்)

களித்தறியேன் - கள்ளுண்டிலேன்
என்பது கைவிடுக - என்று பொய்யுரையாகக் கூறுவதை ஒழிக
நெஞ்சத்து - உள்ளத்தில்
ஒளித்ததூஉம் - ஒளித்த கள்ளமானது (அதாவது கள்ளுண்ணும் கள்ளம்)
ஆங்கே மிகும் - உரைத்த பொய்க்கு மாறாகக் கள்ளுண்டு, பிறர் காணும் போது வெளிப்பட்டுவிடும்.

கள்ளுண்ணுதலுக்கு அடிமைப் பட்ட ஒருவர், தாம் கள்ளை உண்ணுவதேயில்லை என்று பொய்யுரையாகக் கூறாமல் இருக்க வேண்டும். ஏனெனெலில், அவரால் மீண்டும் கள்ளுண்ணாமல் இருக்கவியலாது. அவ்வாறு உண்ணும்போது அவர்களது குற்றம் தாமாகவே வெளிப்பட்டுவிடும் அல்லவா? கள்ளுண்போர்க்கு தம்முடைய சுயத்தை இழப்பது நிகழுமாகையால், அவர் கூறுகிற பொய்க்கு வாழும் காலம் குறைவு. கள்ளுண்பதே ஒரு குற்றம். இதில் பொய்யுரை வேறு தேவையில்லை என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

Transliteration:

kaLiththaRiyEn enbadhu kaiviDuga nenjaththu
oLiththadUum AngE migum

aLiththaRiyEn – I have never drunk toddy
enbadhu kaiviDuga – lying as such must be avoided
nenjaththu – in the heart
oLiththadUum – hidden evil of drinking toddy
AngE migum – when caught red-handed next time, while drinking toddy, it will be exposed

Those that are addicted to toddy drink shall not lie that they never drink toddy. Since the addiction will not let them abstain after all, their fault will automatically expose itself, when they next time consume toddy. Also, since toddy drinkers are likely to act foolish, and are not be self-controlled, their lies are short-lived and expose themselves. “Toddy drinking as such is a blamable evil and a grievous fault. At least refrain from lying about it” implies vaLLuvar in this verse.

Let toddy drinkers at least not lie about their habit
As their lie is short-lived and be exposed in a bit”

இன்றெனது குறள்:

கள்ளுண்போர் இல்லையென்று சொல்லீர் ஒளித்தாலும்
துள்ளிவெளி யாகுமக்குற் றம்

kaLLuNbOr illaiyenRu sollIr oLiththAlum

thuLLiveLi yAkumakkuR Ram

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...