ஜூலை 09, 2014

குறளின் குரல் - 811

9th Jul 2014

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
                        (குறள் 805: பழைமை அதிகாரம்)

பேதைமை ஒன்றோ - அறியாமையின் காரணம் பற்றியோ
பெருங்கிழமை - பெருமளவில் எடுத்துக்கொண்ட உரிமையின் காரணமாகவோ
என்றுணர்க - என்று அறிந்துணர்க
நோதக்க - வருந்தும்படியான செயல்களை
நட்டார் செயின் - நண்பரென்பார் செய்தால்

பழகிய நட்பென்பதற்கு அடையாளம், தம் நண்பர் தாம் வருந்தும்படியாகச் செய்தால் அது பெருமளவில் எடுத்துக்கொண்ட உரிமையின் காரணம் பற்றியென்று அறிக, அறியாமையின் காரணமாக அல்ல என்றுமறிக.

இதையே நாலடியார் பாடலொன்று “இறப்பவே தீய செயினும் தன் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ?” எல்லோரும் அறிந்த பழமொழியொன்று, “ஒருவர் பொறை இருவர் நட்பு” சொல்வதும் இக்கருத்தையொட்டியே. 

இருவர் நட்புறவில் இருக்கும்போது, யாராவது ஒருவர் தவறு செய்தால் அதை மற்றொருவர் பொறுக்க வேண்டும. இல்லையெனில் நட்பு நிலைக்காது. இப்பழமொழியைப் பழமொழி நானூறு பாடல் இவ்வாறு கூறுகிறது. தெளிவாகப் பொருள் கொள்ளும்படி பதம்பிரிக்கபட்டுள்ளது.

தீமை இல்லவர், நட்டவர் தீமையையும்,
‘எம் தீமை’ என்றே உணர்ப, தாம்; அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு.

Transliteration:

pEdamai onRO perungkizhamai enRuNarga
nOdakka naTTAr seyin

pEdamai onRO – Is it due to ignorance
perungkizhamai – No, it is due to liberty of long sustaining friendship
enRuNarga – so you understand!
nOdakka – if acts that are painful to heart
naTTAr seyin – are done by friends.

The hallmark of long sustaining friendship is to understand implicitly that when the friend is indulged in an act that causes pain, it is not due to ignorance, but the liberty taken by the friend.

A nAlaDiyAr poem says, even if a friend does something that causes ill, equivalent to the pain of death, a true friend would only tolerate bearing in mind the health of friendship. “One person’s patience assures friendship between two” is a translation of an adage, implying for friendship between two persons to last, at least one person must be restrained during the testing times – not necessarily the same person. A pazhmozhi nAnURu poem also says the same thing in a different way.  A friend, would own his friend’s ill-acts as his own, because only if one keeps patience the friendship would last.

“If a friend is indulgent in deeds causing pain, it is not due to ignorance
 but due to great liberty taken, based on long friendship of resilence”

இன்றெனது குறள்:


வருந்தக்க நட்புசெய்தல் புல்லறிவால் அல்ல
பெருமுரிமை யால்மட் டுமே

varunthakka naTpuseidal pullaRivAl alla
perumurimai yAlmaT TumE

ஜூலை 08, 2014

குறளின் குரல் - 810

8th Jul 2014

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
                        (குறள் 804: பழைமை அதிகாரம்)

விழை தகையான் - நண்பர் விரும்பும் செயலாக இருப்பதால்
வேண்டி இருப்பர் - அவற்றை தாமும் வேண்டியே உடன்பட்டிருப்பார்
கெழுதகையாற் - உரிமையின் காரணமாக
கேளாது - தம்மைக் கலந்தாலோசிக்காமலேயே
நட்டார் செயின் - நண்பர் ஒரு செயலைச் செய்தாலும்.

மீண்டும் ஒரே கருத்தையே கேள்வி, பதில், செய்வினை, செயப்பாட்டுவினை என்று மாற்றி மாற்றிச் சொல்வதுபோல ஒரு குறள். சென்ற குறளில் பழகிய நண்பர்தானே என்ற உரிமையில் தம் நண்பர் செய்த செயலோடு ஒவ்வாதார்க்கு பழகிய நட்பு அரிது என்பதைச் சொல்லி, இக்குறளில் பழைய நட்பைப் போற்றுபவர்கள் நண்பர்கள் கேளாமலே செய்தாலும் தாமே விரும்பி ஏற்பர் என்கிறார்.

ஒரு நண்பர் உரிமையின் காரணம்பற்றி தம்மைக் கேளாமலேயே  ஒரு செயலைச் செய்தாலும், நெடுநாள் பழகிய உரிமையின் காராணமாக, அச்செயலையும் விரும்பத்தக்கதாகவே கொள்வர் பழகிய நட்பை போற்றுபவர்கள்.

Transliteration:

vizhaithagaiyAn vENDi iruppar kezhuthakaiyAR
kELADu naTTAr seyin.

Vizhai thagaiyAn – because the friend of long time desires
vENDi iruppar – a person would also desire the same
kezhuthakaiyAR – because of the liberty of friendship
kELADu – if the friend without consulting
naTTAr seyin – has done a deed

Once again, a verse with a same line thought as the previous verse packaged in a different form.  Though a friend, because of the liberty accorded by the longevity of friendship, does something without consulting or against advise, still a friend that values that long time friendship would accept that as his own desire too. Now, compare this with what was expressed in the previous verse – “It would be impossible to have a long lasting friendship for someone who does not agree with a friend that has done something taking liberty of such friendship”.

Once again, we may construe this to be a reinforcement of a thought by saying it different ways.

Even if a friend, taking libery of a long friendship, acts without consulting
 A friend that honor the same would accept it as his own desire and fitting”

இன்றெனது குறள்:

உரிமையால் கேளாச் செயினும் விருப்பம்
புரிந்தவரோ டொப்புதலே நட்பு

urimaiyAl kELAch cheyinum viruppam

purindavaRO DoppudalE naTpu

ஜூலை 07, 2014

குறளின் குரல் - 809

7th Jul 2014

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
                        (குறள் 803: பழைமை அதிகாரம்)

பழகிய நட்பு - பழகிய பல நாள் நட்பு என்பதால்
எவன் செய்யுங் - என்ன பயன்?
கெழுதகைமை - உரிமையில்
செய்தாங்கு - நண்பர் செய்தவற்றை
அமையாக் கடை - தாமும் அவற்றோடு ஒப்பியிருப்பதுபோல் செய்யாதவொன்று?

பலநாள் பழகிய நட்பு என்பதன் பொருளென்ன? அவ்வுரிமையில் தம் நண்பர் செய்தவொன்றை தாமே செய்தால் போன்று எண்ணி நண்பரோடு ஒப்பியிருக்காத நட்பு பழைய நட்பு என்பதால் பயன் என்ன? என்கிறது இக்குறள்.

இது நீதி என்பதற்குப் புறம்பாகச் சொல்லுகிற குறளாக இருக்கிறது. உதாரணமாக ஆட்சியிலோ, ஒரு பொறுப்பான பதவியிலோ, அல்லது நீதி வழங்குகிற நிலையிலோ இருப்பவர்களால், இக்குறள் சொல்லும் முறையிலே வாழ்வது இயலாது. பழகிய நட்பு என்பதற்காக் ஒரு நண்பர் செய்யும் எல்லாவற்றுடனும் ஒப்பியிருப்பது தவறு, இவ்வதிகாரத்தை ஒட்டிய கருத்தாக இருப்பினும் கூட.

Transliteration:

Pazhagiya naTpevan seyyung kezhutagaimai
seydAngu amaiyAk kaDai

Pazhagiya naTp(u) – A friendship that’s long standing
evan seyyung – what use is in it (the friendship)
Kezhutagaimai – taking liberty
seydAngu – in whatever the friend has done
amaiyAk kaDai – be agreeable and act in support of friendship

What is the use in a long-standing friendship, if taking liberty because of that friendship, when a friend is in acts that even not are agreeable, not able to support?

This verse seems to preach what is not in line with sense of justice. For example, a person of responsibility, or rendering justice cannot live the way of what this verse advocates. Just because of long-standing friendship, one shall not agree with whatever another friend does, though this verse is perfectly in line with the chapter’s central thought of standing by long standing friendship. In fact previous chapter said that a long-standing friendship should take the liberty to mend and correct a friend instead of supporting wrong deeds.

“What use is it in long-standing friendship if not
 agreeable and supports as if it is his own act?

இன்றெனது குறள்:

உரிமையில் நண்பரென்பார் செய்வதோடு ஒவ்வார்க்

கரிதாம் பழகிய நட்பு

urimaiyil naNparenbAr seyvadODu ovvArk
karidAm pazagiya naTpu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...