ஜூலை 06, 2014

குறளின் குரல் - 808

6th Jul 2014

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
                        (குறள் 802: பழைமை அதிகாரம்)

நட்பிற்கு - ஒரு நல்ல நட்புக்கு
உறுப்புக் - அங்கமாவது
கெழுதகைமை - நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிக்கொள்ளும் உரிமை
மற்று அதற்கு - தவிரவும் அதற்கு
உப்பாதல் - உட்படுதலும் உடன்படுதலும்
சான்றோர் - நட்பினைப் போற்றும் சான்றோர்க்கு
கடன் - முறையுமாம்

முதிர்ந்த நட்புக்கிடையே இருக்கவேண்டிய சிறந்த புரிதலை, வலியுறுத்தும் குறள். இருவருக்கிடையிலான சிறந்த நட்புக்கு அங்கமாகக் கருதப்படுவது, நண்பர்கள் ஒருவருக்கொருவர் வழங்கிக்கொள்ளும், எடுத்துக்கொள்ளும் உரிமையாகும். தவிரவும், அத்தகைய உரிமைக்கு உட்படுதலும் உடன்படுதலும் நட்பினைப் போற்றும் கற்றறிந்தோர்க்கு முறைமையுமாம்.

சான்றோர்கள் நட்பானது ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டது! அதனாலேயே உரிமை எடுத்துக்கொள்ளக்கூடியது. அதனாலேயே அதனை அவர்க்குக் கடமையாகவும் சொல்லப்படுகிறது இக்குறளில்.
Transliteration:

naTpiR kuRuppuk kezhuthagaimai maRRadaRku
uppAdal sAnROr kaDan

naTpiRk(u) – for a good friendship
uRuppuk – a part of that is
kezhuthagaimai – right to be free and take rights with each other
maRR(u) adaRku – Other than that,
uppAdal – to be in conformance and be subject to such right
sAnROr – the wise who respect such friendship
kaDan – is the duty.

A verse which stresses on the importance of innate understanding that must exist in a long friendship. Taking and according liberty with/ to each other is a constituent part of any close, long and sustaining friendship. To value that and be subject to that is proper for wise that respect such friendship.

In other words, the friendship of wisemen is based on implicit understanding and allows freedom and right to express thoughts freely. Hence it is said as their duty also, in this verse.

“Long sustained friendship gives and takes liberty
 For wisemen, it is implicit to take it as such a duty”

இன்றெனது குறள்:

நட்பினங்கம் நண்பர்க் குரிமை இனிததற்கு
உட்படுதல் நட்டார்க்குச் சீர்

naTpinangam naNbark kurimai inidadaRku

uTpaDudal naTTarkkuch chIr

ஜூலை 05, 2014

குறளின் குரல் - 807

80: (Old friendship - பழைமை)

[This chapter discusses the how sometimes, based on longevity of the friendship, the mistakes have to be tolerated either because of the circumstances in which they are caught in or by the design of fate (as per Parimelazhagar). However much we scrutinize before making friends, sometimes, after sometime, we may find that we either don’t agree with a few aspects or deeds we see in them or they do. But because of the longevity of the friendship and the overall goodness of the same, we may have to ignore, tolerate or even condone certain apects of the friendship, and if possible try to mend it.]

5th Jul 2014
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
                        (குறள் 801: பழைமை அதிகாரம்)

பழைமை எனப்படுவது - நெடுங்காலமாகத் தொடரும் நட்பு என்பது
யாதெனின் - எதுவென்றால்
யாதும் கிழமையைக் - - எந்தவொரு உரிமையால் செய்யப்பட்டவற்றையும் (பிழையாகவே இருப்பினும்)
கீழ்ந்திடா - அதற்காக நட்பை, நண்பரை விட்டுக்கொடுக்காமல் (உடன்படுவர்)
நட்பு - அத்தகையதாம் நட்பு.

நெடுநாளைய நட்பின் சிறப்பென்பது, அது யாது காரணம் பற்றியும், தம் நண்பர் தாமே உடன்படாதவாறு பிழைக்கினும், அவரை விட்டுக்கொடுக்காது, அவரோடு உடனிருத்தலாம், அவர் செயலுக்கு உடன்படுவதுமாம்.

ஆராய்ந்து நட்பு கொண்ட பிறகு, ஒரு நல்ல நண்பருக்கு அழகு, தம் நண்பர் பிழைக்கும்போது, அவற்றை சுட்டுவதும், தேவைப்பட்டால் தட்டிக்கேட்பது தேவை. அதே சமயம், நெடுநாளைய நட்பின் காரணமாக, நண்பர் உரிமையிலே செய்யும் செயலானது, பிழையாக நேரினும், அவற்றைப் பொருட்படுத்தாது உடன்படுதலே நட்பாகும்

மகாபாரத கர்ணனை, அவ்வாறே எடுத்தாள்பவர்கள் சித்தரிக்கின்றனர். அவன் துரியோதனனோடு கொண்ட நீண்ட நட்பால், அந்நட்பின் பழைமை கருதி அவனோடு, அவன் செய்த தீச்செயல்களுக்கு உடன் பட்டதாக கூறுவர். வியாச பாரதத்தில் காட்டப்படும் கர்ணனுக்கு இவை சற்றும் பொருந்தாவிடினும், இக்குறளின் கருத்தை வலியுறுத்த அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்,

Transliteration:

Pazhaimai enappaDuvadu yAdenin yAdum
Kizhamaiyaik kIzhndiDA naTpu

Pazhaimai enappaDuvadu – a friendship of long time is that
yAdenin – which is
yAdum Kizhamaiyaik – whatever was done with liberty of friendship (however wrongful it is)
kIzhndiDA – never let down the friendship (before others) and go along with friend, in what is done
naTpu – such is a good and true friendship.

A true longtime friendship would go along with whatever the friend does, without letting the frienddown, especially before other; even if sometimes, what the friend does is not right.

After all, after making a friendship, scrutinizing about who the person is, a good friend would always point out mistakes and even condemn (because of the same liberty the friendship accords) if need be.

Karna of mahAbAratA is depicted as a friend who stood with DhuryOdanA, despite his own covictions of goodness and he did not always agree with what DhuryOdanA did, though it is far from true as per the original vyAsa bhAratA.

“A long standing friendship would never letdown
 a friend, though he may be faulty in acts done”

இன்றெனது குறள்:

நீண்டநட்பில் உள்ளோர்தம் நண்பர் பிழைக்கினும்
ஈண்டவர் என்பதால்கொள் வர்

(ஈண்டவர் - நெருக்கமானவர்)

nINDanaTpil uLLORtham naNbar pizhaikkinum

INDavar enbadAlkoL var

ஜூலை 04, 2014

குறளின் குரல் - 806

4th Jul 2014

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
                        (குறள் 800: நட்பாராய்தல் அதிகாரம்)

மருவுக - கூடுக
மாசற்றார் - குற்றமிலா பண்புடையாரோடு
கேண்மை - நட்புறவிலே
ஒன்றீத்தும் - ஏதேனும் ஒன்றை தந்தாவது (கைப்பொருளை விலையாக)
ஒருவுக - நீங்குக, விலக்குக
ஒப்பிலார் - பண்பிலே ஒவ்வாதவரோடு கொண்ட
நட்பு - நட்பினை

குற்றமில்லாத நற்பண்பு உடையவர்களிடமே ஒருவர் நட்பு கொள்ளவேண்டும். நற்பண்புகள் நிறையபெறாமல், ஒவ்வாதார் நட்பினை ஏதேனும் விலை கொடுத்தேனும் விலக்கி விடவேண்டும். சில நேரங்களில் அத்தகைய நட்பு விதிவசமாக அமைந்துவிடுவது உண்டு. விலக்குவதற்கு கடினமாயினும், ஏதேனும் ஒன்றைத் தந்தாவது அவற்றிலிருந்து நீங்குதலே நன்றாம்.

இக்குறளின் கருத்தையொட்டிய குறளினை அறத்துப்பாலின் செய்நன்றி அதிகாரத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு”

இவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் ஏதேனும் கொடுத்தாவது நல்ல நட்பைக் கொள்ளவேண்டுமென்றார். இக்குறளில் ஏதேனும் கொடுத்தாவது தீயவர் நட்பை விடவேண்டும் என்கிறார்.  எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக் கொடுக்கும் பழக்கம் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது போலும்.

Transliteration:

Maruvuga mAsaRRAr kENmaione RIththum
Oruvuga oppilAr naTpu

Maruvuga – Be in the company of
mAsaRRAr – blemishless persons’
kENmai - friendship
oneRIththum – even giving some price or something in exchange
Oruvuga – let go or abstain from
oppilAr – people of lacking in virtue and virulent
naTpu – their friendship

Friendship must be made only with blemishless and virtuous persons. Lacking in virtue and virulent must be avoided or shunned giving whatever price it takes to get rid of such friendships. Some times, by the design of ill fate, such bad friendships are made and they must be rid off by giving whatever it takes or else, they will set  life only in ruin.

A verse in the canto of virtues, from the chapter “Gratitude has already spoken about this through this verse “maRavaRga mAsaRRAr kENmai thuravArka thunbaththuL thuppAyAr nAtpu(Don’t forget the friendship of the pure and blemishless. Never forsake timely helpers)
In the fourth verse of this chapter vaLLuvar stressed that good friendships must be made by giving whatever price. Here, he stresses the same saying bad friendships must be rid off by giving whatever price it demands. It is interesting to observe that setting price for everything was in vogue, even during vaLLuvar’s times.

“Have only friendship with persons that are blemishless
 By giving whatever, be rid of virulent and characterless”

இன்றெனது குறள்:

குற்றமிலார் நட்பேகொள் எவ்விலை தந்தேனும்
நற்றமிலார் நட்பை விலக்கு

(நற்றம் - நற்குணம்)

kuRRamilAr naTpEkoL evvilai thandEnum

naRRamilAr naTpai vilakku

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...