பிப்ரவரி 03, 2013

குறளின் குரல் - 297


3rd February, 2013

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
                               (குறள் 288:  கள்ளாமை அதிகாரம்)

Transliteration:
aLvaRindhAr nenjath thaRampOl niRkum
kaLavaRindhAr nenjil karavu

aLvaRindhAr – Those that stead by the order and limits of virtuous ways specified for his ascetic life
nenjath(thu) – in their minds
aRampOl niRkum – like virtues stay (in the minds of)
kaLavaRindhAr – those who know only bad deeds of stealing
nenjil – in their minds will reside
karavu – only vile/wicked thoughts.

The minds of ascetics that stay by the virtuous, righteous order ordained for them will be filled with virtues. Likewise, the minds of those who steal from others will be filled with vile, wicked thoughts. A simple truth known to everyone is said in this verse. But there is subtle point of resolve implied here. Like the ascetics will not steer away from the righteous, virtuous ways in their heart, the cunning will come to stay in the hearts of those who indulge in stealing; vaLLuvar underlines the importance of not stealing.

“Vrtue resides in the mind of ascetic of virtuous creed
 Wicked thoughts reside in thieving mind of evild deed”

தமிழிலே:
அளவறிந்தார் - தமக்கு வகுக்கப்பட்ட அறநெறிகளின் எல்லைகளில் வாழும் நெறியினர்
நெஞ்சத்(து) - நெஞ்சத்தில்
அறம்போல நிற்கும் - அறம் நின்றுவாழ்வது போல
களவறிந்தார் - களவென்னும் தீயொழுக்கம் மட்டுமே அறிந்தார்தம்
நெஞ்சில் - நெஞ்சிலே குடிகொள்ளும்
கரவு - வஞ்சமென்னும் தீயெண்ணம்.

துறவறத்திலிருப்போருக்கு வகுக்கப்பட்ட நெறி, நியம எல்லைகளில் நின்று வாழுகின்றவருடைய நெஞ்சில் அறமே தங்கும்; அதுபோல பிறரிடம் உள்ளவற்றை கவர்ந்துகொள்ளும் திருடர்களின் நெஞ்சங்களிலே வஞ்சக எண்ணமே குடிகொண்டிருக்கும். மற்றொரு உள்ளங்கை நெல்லிக்கனியான,  “அவர்களிடம் அது உள்ளதுபோல் இவர்களிடம் இது உள்ளது” என்பது போல ஒரு குறள். அறவழிகளில் ஊறியவர்களுக்கு அறத்தில் உள்ள உறுதிப்பாட்டைக் குறித்து, அதேபோல, திருடுபவர்களுக்கு வஞ்சக எண்ணம் ஊறி நிலைத்துவிடும் என்று சொல்லி, எதில் உறுதிப்பாடு கொள்ளவேண்டும் என்பதை அடிக்கோடிட்டு இருக்கிறார். இக்குறளில்.

இன்றைய குறள்:
நேர்மையோர் நெஞ்சிலறம் போல்நிலைக்கும் வஞ்சகம்
நீர்மையில் கள்ளர்தம் நெஞ்சு

nErmaiyOr nenjilaRam pOlnilaikkum vanjagam
nIrmaiyil kaLLartham nenju

பிப்ரவரி 02, 2013

குறளின் குரல் - 296



2nd February, 2013

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
                               (குறள் 287:  கள்ளாமை அதிகாரம்)

Transliteration:
kaLavennum kAraRi vANmai aLavennum
ARRal purindhArkaN il

kaLavennum – Stealing (the deed of stealing)
kAr – that which is black as dark cloud
aRivANmai – imposing intellect ( or lack of that? aRivinmai?)
aLavennum – The limits imposed by ethical and virtuous tenets
ARRal – capable of following them
purindhAr kaN il – those who understand will not have (such thoughts of stealing)

This verse is similar to the previous one. After discussing as to who succumbs to cheap desires of stealing in the last verse, here he says who will not indugle in such things. The scheming mind, and the knowledge to only to do things of dark nature, like pregnant clouds which are also dark,  will not be there in ascetics that know their bounds to virtuous ways.

The phrase “kAr aRivAnmai” literally means that “knowledge that is like pregnant clouds that carry water in abundance”. This interpretation is exactly opposite to what the kuraL wants to convey.  But, commentators have taken the “darkness” attribute as the main attribute to imply “the dark nature of intellect” that is used to harm others. vaLLuvar could have avoided the confusion to says “kAraRivinmai” which could have straightaway conveyed the intended meaning, “aRivinmai”, “lack of intellect”.  ManakkuDavar, another respected commentator, would interpret the same as “ the evil intellect that stealing is”.  vaLLuvar probably meant that to do evil deeds one must have twisted intellect, which some people of ascetic life have as we see from time to time.

“There will not be blinding darkness of knowledge, to thieve
 For that are bound by the limits of virtuous tenets to live”

தமிழிலே:
களவென்னும் - பிறரை வஞ்சித்து அவர்களின் பொருளை  களவாடும் எண்ணம்
கார் - கருத்த மேகம்போன்ற இருண்ட
அறிவாண்மை - அறிவினை உடையராதல் (அறிவின்மையாக இருந்திருக்கலாமோ?)
அளவென்னும் - நல்வழிகளின் எல்லைகளுக்ககுள்ளே
ஆற்றல் - நின்று தம்கடமைகளை ஆற்றி (தவசீலர்களுக்கு என்று கொள்ளவேண்டும்)
புரிந்தார்கண் இல்.- துறவறம் புரிவார்களுக்கு இல்லை.

சென்ற குறளின் கருத்தை அடியொட்டிய குறள்தான் இதுவும். முன்னரே எழுதியிருந்தபடி, சென்ற குறள், “அவ்வாறு இருக்கிறவர், இவ்வாறு இருக்கமாட்டார்” என்றது. இந்த குறள், “இந்த தீய குணம், இவ்வாறு நல்ல இயல்பினைக் கொண்டவர்களிடம் இருக்காது” என்கிறது.

யார் அற்பக்களவில் ஆசையுளோர் என்று கூறிய பின்னர், இக்குறளில் யாருக்கு அற்பக்களவில் ஆசையில்லை என்று கூறப்படுகிறது. இதில் களவு செய்யுமறிவு கரிய மேகத்தின் இருண்ட தன்மையைப்போல என்று கூறி, அதுபோன்ற வழிகளில் தம் நெறிக்கு வகுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டு தம் கடமையை ஆற்றும் துறவிகள், இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்.

“கார் அறிவாண்மை” என்பது, கரிய மேகம் மழைநீரைத் தேக்கியுள்ளது போன்ற அறிவுடமையென்று ஆகிறது.  அது இக்குறள் சொல்லவரும் கருத்துக்கு முரணாக இருக்கிறது. பரிமேலழகரும் மற்றவர்களும், கரிய மேகத்தின் இருண்ட தன்மையை எடுத்துக்கொண்டு அதை “இருண்ட அறிவு உடையவர்கள்” என்கின்றனர்.  காரறிவின்மை என்றாலாவது இருண்ட அறிவின்மை என்ற பொருள் பொருந்திவரும். மணக்குடவர் இதற்கு, “களவாகிய பொல்லா அறிவுடமை” என்பார். ஒருவேளை அறிவின்மையாயிருந்தால், அவர்களுக்கு தீமைகள் செய்ய தோன்றாதிருக்கலாம் என்றும், தீமைகள் செய்யவும், தீய சிந்தனைகளை செய்யவும் தீயறிவு வேண்டுவதால் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

இன்றைய குறள்:
இருள்போல் அறிவாம் களவு அளவின்
பொருளை அறிந்தவர்க் கில்

iruLpoL aRivAm kaLavu aLavin
poruLai aRindhavark kil

பிப்ரவரி 01, 2013

குறளின் குரல் - 295


1st January, 2013

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
                       (குறள் 286:  கள்ளாமை அதிகாரம்)

Trasliteration:
aLavinkaN ninROzhugal ARRAr kaLavinkaN
kaNRiya kAdha lavar

aLavinkaN – understanding the bounds of life’s virtuous ways, ethical conduct
ninROzhugal ARRAr – those that are not abiding by the same,
kaLavinkaN – (do) steal from others, with cunning
kaNRiya – vile ridden
kAdhalavar – excessive desire (to steal from others)

This verse seems an extension of previous verse. One who does not abide by the limits of ethical and virtuous conducts in life, will be avaricious to steal others wealth by cunning – this is what the verse says.

Since this chapter is under the part of Asceticism, we must surmise that these verses are written towards pretentious ascetics, though the tone seems more generalistic, without specifying who these talk about.

Yet another verse that makes one to think if there have been insertions into vaLLuvar’s work. Those who don’t live within the ethical bounds always cannot all be construed or generalized as to be indulging in stealing or even entertain such thoughts. Also, this verse even in interpretation is not very different from previous verse. The usage of word “aLavu” seems to be used more for poetic metrical consideration as it is difficult to interpret in the context of these verse directly.

“Aware of ethical bounds, the person that does not abide by
 Have the cheap big desire of stealing from others in the sly”

தமிழிலே:
அளவின்கண்  - தம் வாழ்க்கைக்கு ஏற்ற நெறிகள் அவற்றின் எல்லைக்கோடுகளுக்குட்பட்டு
நின்றொழுகல் ஆற்றார் - அவற்றிற்குத் தக்கவாறு ஒழுகமாட்டாதார்
களவின்கண் - வஞ்சித்து பிறை பொருளைத் திருடிக்கொள்ளும்
கன்றிய - அற்பமான, மிகுந்த
காதலவர் - வேட்கை உடையவர்

சென்றகுறளில் சொல்லப்பட்ட குறளின் நீட்சியாகத்தான் இக்குறளைக் கொள்ளவேண்டும். தம் வாழ்க்கைக்கு ஏற்ற நெறிகளின் எல்லைக்கோடுகளுக்கு உட்பட்டு, அவற்றிற்கு தக்கவாறு ஒழுகமாட்டாதார், பிறர் பொருளை வஞ்சித்து அவர்பொருளைத் திருடிக்கொள்ளும் அற்பமான வேட்கை உடையவர், என்பதே இக்குறளின் கருத்து.

துறவறவியலின் கீழ்வரும் இவ்வதிகாரத்தின் குறள்கள் எல்லாமே துறவறம் மேற்கொண்டவர்களை நோக்கிச் சொல்லப்பட்டனவென்றால், இக்குறளும் பொய்த்துறவிகளைப்பற்றி குறிப்பதாகக் கொள்ளலாம்.

வள்ளுவர் செய்த திருக்குறள்களில் கட்டாயம் இடைச்செருகல்கள் இருக்குமோவென ஐயப்படவைக்கும் பாடல்களுல் ஒன்று இக்குறள். தம்வாழ்க்கையின் எல்லைக்கோட்டைத் தாண்டுபவர்கள் எல்லோருமே அற்பத் திருட்டினில் வேட்கையுள்ளவர் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. தவிரவும் கருத்து வகையிலும் முந்தையகுறளுக்கு, இக்குறளுக்கும் பெரிய வேற்றுமைகள் இல்லை! தவிரவும் “அளவு” என்ற சொல், களவுக்கு எதுகை வேண்டுமென்கிறதாலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நேரடியாகப் பொருள்கொள்ளும்படியான சொல்லில்லை.

இன்றைய குறள்:
நெறியினெல்லை நின்றொழுகார்  அற்பக் களவு
குறித்தொழுகும் ஆசையு ளோர்

neRiyinellai ninRozhugAr aRpak kaLavu
kuRithozhugum Asaiyu Lor

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...