செப்டம்பர் 24, 2012

குறளின் குரல் - 165


24th September, 2012

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

                  (குறள் 156:   பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
oRuththArkku orunALai inbam poRuththArkkup
pondRun thuNaiyum pugaz

oRuththArkku – when a person punishes another for the misdeeds of that person
orunALai -  may be for a day
inbam – there is happiness that either a fitting rebuke is done, a false sense of justice rendered
poRuththArkkup – but when somebody is forbearing for such misdeeds, ( *to make them realize)
pondRun thuNaiyum – till their death or the worlds end **
pugaz – glory

*  refer to kuraL inna seydhArai oRuththal avar nANa nannayam seydhu viDal
** parimElazhagar says till the world end, which is questionable, but till the persons demise  is possible

What is more important? A pleasure of revenge for a brief time for mistakes of others or undying fame for tolerating and even forgiving, giving the other person a chance to mend and make amends appropriately? This can be answered in many ways. vaLLuvar says in a different verse, “innA seydhArai oRuththal avar nANa nannayam seydhuviDal” – when somebody deliberately causes harm, to make the person realize the folly, forgetting, doing some unexpected good,  is the best form punishment.

The momentary pleasure or so imagined is but an illusion mostly. If there was some misdeed done, the true loss of that can never be brought back by punishing. By forgiving, a fulfilling happiness, an opportunity for the other person to change is initiated. Also it gives to the person that tolerates a lasting glory for the life time. parimElazhagar  adds “world “ to the meaning of the “pondRum” to interpret it as “until the demise of the world”. Did he think the world would perish oneday or that was not going to happen and hence the glory would always be there? Either way, “until the demise” of the person is more realistic scenario.

“Punishing may appear to bring pleasure for a brief time
  But to forgive and tolerate will spring glory for life time”

தமிழிலே:
ஒறுத்தார்க்கு – ஒருவரை அவர்செய்யும் சிறு பிழைகள், இவற்றுக்காக தண்டிப்பவர்களுக்கு
ஒருநாளை – அன்று ஒருநாளக்கு வேண்டுமானால்
இன்பம் – மகிழ்ச்சி ஏற்படலாம் (ஏற்படும் என்பது உறுதியான நிலைப்பாடு அல்ல)
பொறுத்தார்க்குப் – ஆனால் அவ்வாறு பிழைசெய்பவர்களிடமும் பொறுமையோடு இருப்பவர்களுக்கு (அவர்களை உணரவைக்கும் விதமாக*)
பொன்றுந் துணையும் – அவர்கள் மரணிக்கும் வரை அல்லது உலகம்அழியும் வரை **
புகழ் - புகழானது நிலைத்திருக்கும்.

* இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் - குறள்
**உலகம் அழியும் வரை என்று பரிமேலழகர் உரை கூறுகிறது, இது ஐயத்துக்குரியது!

சிறிது நிலைத்திருக்கும் மகிழ்வா அல்லது மங்காப் புகழா என்று கேள்விக்குப் பலவிதமாக விடையளிக்கமுடியும். அவற்றுள் ஒன்றுதான்.  ஒருவர் தவறு இழைக்கும்போது, அது மன்னிக்ககூடியதாக இருந்தால், அந்த மன்னிப்பை உணர்ந்து மனந்திருந்த வாய்ப்பிருந்தால், மன்னிப்பதே சிறந்தது. வள்ளுவரே சொல்லியுள்ளார், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடால்” என்று. இன்னா செய்தவர்க்கே இப்படியென்றால், சிறுதவறுகளை செய்பவர்களை தண்டிப்பதை விட மன்னிப்பது சிறந்த ஒன்று.

தண்டிக்கும் போது ஒரு சில மணித்துளிகளுக்கோ, அன்று மட்டுமோ, அல்லது சிலநாட்களுக்கு வேண்டுமானால், ஒரு மனநிறைவிருக்கலாம், அல்லது மனநிறைவு ஏற்பட்டது போல் மாயநினைப்பு ஏற்படலாம். தவறினால் ஏற்பட்ட இழப்பு, இழப்புதானே, அதை தண்டிப்பது என்கிற தவறின் மூலம் சரி செய்யமுடியாது.  ஆனால் மன்னித்துவிட்டால், அதில் ஏற்படும் மனநிறைவும், தவறு இழைத்தவர்கள், வெட்கி, திருந்துவதற்காக வாய்ப்பும், மேலும் தன்னுயிருர் உள்ளவரை ஏற்படும் புகழும் மிகவும் ஏற்புக்குரியது. பரிமேலழகர் உலகம் அழியுமளவும் என்று “பொன்றுதலை” உலகின்மேலேற்றிச் சொல்லுவார். அதைக்காணுபவர்கள் யார்? ஆனால் ஒரு மனிதப்பிறவி வாழ்ந்து முடியும் காலம்வரை அப்பிறவியின் நற்குணங்கள் நினைந்து பாராட்டப்படும்.

இன்றெனது குறள்:
தண்டித்தால் இன்பம் சிறிதளவே – மன்னித்தால்
உண்டுபுகழ் பூவுலகில் நின்று

செப்டம்பர் 23, 2012

குறளின் குரல் - 164


23rd September, 2012
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
                  (குறள் 155: பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
oRuththArai ondRaga vaiyArE vaippar
poRuththAraip ponpOR podhindhu

oRuththArai  - who does not exhibit forbearance and punishes somebody who has caused harm
ondRaga  - value him as a person of virtue
vaiyArE – will not keep them in good books
vaippar – But will do so
poRuththAraip – one who has forbearance for people that mean or cause harm
ponpOR – like precious gold
podhindhu- profusely

When others do ignorable mistakes or misdeeds, those who punish them will not be respected by the society; on the otherhand, if forbearance is shown such character is profusely appreciated and liked like the precious gold.

Thugh vaLLuvar generally says, will keep and not keep, parimElazagar says, “wisemen” in his commentary. Mostly patience is a much a appreciated virtue. In Ramyana, Hanuman mentions about Seetha’s patience in one sentence which is so etched in the pages of Kamban’s work. “ iRpiRappu enbhadhu ondRum irum poRai enbadhu ondRum” (இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும்). 

The general idea promoted by this verse is that people of forbearance, patience have high value and are respected and as precious gold. No such value is there for people that lose it and urge to punish even the small mistakes. This verse must also be read in the context of “selliDaththukk kAppAn sinam kAppAn”.

“Wisemen will not count those who avenge with impatience
  But keep as precious gold ones that have utmost tolerance”

தமிழிலே:
ஒறுத்தாரை – சிறியோர் செய்த பிழைகளை பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவரை
ஒன்றாக – ஒரு பொருட்டாக
வையாரே – சான்றோர் மதிக்கமாட்டார்கள்
வைப்பர் – ஆனால் அப்படி மதிப்பர்
பொறுத்தாரைப் - பொறுமையை கடைபிடிப்பவர்களை
பொன்போற் – உயர்ந்த பொன்னைப் போற்றுவது போல
பொதிந்து- மிகுந்து

மற்றவர் செய்யும் மறந்து மன்னிக்கக்கூடிய சிறுபிழைகளைப் பொறுத்துக்கொள்ளாது தண்டிப்பவர்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். ஆனால் பொறுமையை கடைபிடிப்பவர்களை விலையுயர்ந்த பொன்னைப் போற்றுவதுபோல மிகுந்து போற்றி மகிழ்வார்கள்.

வள்ளுவர் பொதுப்படையாக “வைப்பார், வைக்கமாட்டார்” என்றதை பரிமேலழகர் “சான்றோர்கள்” என்று ஏற்றிச் சொன்னாலும், பொதுவாக, பொறுமையைக் கடைபிடிப்பவர்கள எல்லோரும் பாராட்டத்தான் செய்வார்கள். மீண்டும் இராமாயணத்தில் சீதையின் பொறுமையைப்பற்றி ஒரு இடத்தில் அனுமன், “இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும்” என்பான்.  இக்குறளால் பொறுமையை கடைபிடிப்பவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டு என்பதை வலியுறுத்துவதைக் காண்கிறோம்.  தண்டிப்பதில் இன்பம் இல்லை, மன்னிப்பதில்தான் இன்பம் என்று பின்னர் வரும் குறளுக்கு முன்னோடியாக சொல்லப்பட்ட பொதுக்கருத்து.  இக்கருத்தை “செல்லிடத்துக்காப்பான் சினங்காப்பான்” என்ற குறளில் சொல்லப்பட்ட கருத்தொடு இணைத்து அறிந்துகொள்ளவேண்டும்.

இன்றெனது குறள்:
போற்றிடுவர் சான்றோர் பொறையுடைமை – போற்றிடார்
சீற்றத்தில் தண்டிப்பா ரை.

செப்டம்பர் 22, 2012

குறளின் குரல் - 163


22nd September, 2012

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
                  (குறள் 154:   பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
niRaiyuDaimai nIngamai vENDin poRaiyuDamai
pOtRi yozhugap paDum

niRaiyuDaimai – character, repectability and glory
nIngamai vENDin – if desirous of keeping the above said
poRaiyuDamai – forbearance, tolerance
pOtRi –  to keep as the important virtues
yozhugappaDum – will be practiced

For somebody to keep the respectability, and glorious stature, the person must practice the good virtue of forbearance as the important discipline in his life.  

Patience and tolerance is practiced not because of fear or being gullible. Forbearance will win the world is a well known saying  said to point out Dharma’s patience, tolerance and how he restrained his brothers not to get instigated bu Kaurava’s misdeeds through out Mahabharata. It is not because of his ineptitude or lack of valor. He lived his name and practiced tolerance as the primemost virtue in his life. Hence he ruled Asthinapura eventually. His patience agaist the virAta rajA’s anger without thinking about saved his countries destruction is another episode we can remember from the epic.

“For a person to sustain glory and greatness
  Must practice forbearance with devotedness “

தமிழிலே:
நிறையுடைமை - நற்குணம், மேன்மை, மாட்சிமையாகிய சால்பு
நீங்காமை வேண்டின் – இவை ஒருவரைவிட்டு நீங்காமல் இருக்கவேண்டுமானால்
பொறையுடைமை – பொறுமையெனும் பண்பினை
போற்றி – மிகவும் இன்றியமையாததாகப் இருத்தி
ஒழுகப்படும் – அதன்படி வாழப்படும்

ஒருவர்க்கு சால்பாகிய மேன்மையும், மாட்சிமையும் அவரைவிட்டு நீங்காதிருக்க, அவர் பொறுமையெனும் நற்பண்பினை மிகவும் இன்றியமையாததாகக் கருதி தன்வாழ்வில் ஒழுகவேண்டும்.  ஏலாதியிலே இக்கருத்தையொட்டி, “நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையேபொறையுடைமை” என்று அறமுடையார்க்கு வேண்டிய ஆறுகுணங்களிலே மனக்கட்டுப்பாடு (நிறை), நற்பண்பு (நீர்மை) பொறையுடமை என்று காணப்படுகிறது.

பொறுமை என்பது அச்சத்தினாலோ, அல்லது ஏமாளிதனத்தினாலோ கொள்வது என்று. பொறுத்தார் பூமி ஆள்வார் என்னும் வழக்கு, மகாபாரதக் கதையில் வரும் தருமனின் பொறுமைக்காக சொல்லப்படுவது. மற்ற உடன்பிறப்புகளையும் விட கௌரவர்கள் செய்த தவறுகளையும், இழைத்த அநீதிகளையும் பொறுத்துக்கொண்டது, தன்னுடைய உடன்பிறப்புகளும் பொறுமையை கடைபிடிக்கச் செய்தது, அச்சத்தினால் ஏற்பட்ட கோழைதனத்தினாலோ, ஏமாளிதனத்தினாலோ, கையாலாகத்தனத்தினாலோ அல்ல. தன்பெயருக்கு ஏற்றார்போர், பொறுமையை ஒரு அறமாகவே கடைபிடித்ததால்தான் பின்னாளில் அரசையும் ஆளக்கூடிய நிலைக்கு உயர்ந்தான். கங்கபட்டனாக விராட அரசனிடன் அவன்காட்டிய பொறுமை, விராடநாட்டின் நாசத்தையே தவிர்த்ததும் திரௌபதி வாயிலாக நாம் அறிவது.

இன்றெனது குறள்:
பொறுமையைப் பேணி ஒழுகவேண்டும் சால்பு
அறுகாமை வேண்டப் பெறின்
poRumaiyaip pENI ozhugavENDum sAlbu
aRugAmai vENDap peRin

செப்டம்பர் 21, 2012

குறளின் குரல் - 162


21st September, 2012

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
                  ( குறள் 153:பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
inmaiyuL inmai virundhorAl vanmaiyuL
vanmai maDavAr poRai

inmaiyuL inmai – The worst form of poverty among all poor things
virundhu – the guests that come hom
orAl – not able to provide and not entertaining them
vanmaiyuL – What is strength among
vanmai  - all strong attributes
maDavAr – who err due to their ignorance, stupidity
poRai -  show tolerance and forbearance towards them.

This verse is a bit confusing. It is apparent that the commentators have taken the meaning of words “inmai” to mean something which it does not mean. The comparison between “poorer of the poor” and the “stronger of the strong” does not have any meaning, though that seems to be the way commentators have interpreted. It is silly to think that a poet like vaLLuvar would have used rhyming words without an appropriate meaning.

The word “orAl” is not found in Tamil dictionaries. “Oruvudhal” is found, with the meanings “command to leave”, or “avoiding” or “to remove”. Around this meaning, the commentators from Parimelazhagar to recent ones have interpreted the word “oRal” as “command to leave”. Even then, the words “oruvudhal” and “oral” must have the opposites as “oruvAmai”, “orAmai” or “orAl”.  Only commentator that has interpreted it this way is “maNakkuDavar”.

Now taking the words, “inmai” as “varumai” or “state of being poor”, the comparison has become meaningless.  We can split the word as “il+mai”. When the two parts conjugate, it becomes a word “inmai” instead of “ilmai”. Now the word means the “household” implying the “lady of the house”.   

There is a word called “Oral”, meaning “researching”, “understanding”. But that does not fit the context, though the meter perfectly well. Another mistake might be that “maDavAr” has been interpreted as “senseless people”. But that word also denotes “ladies” in general sense.

Commentators write the meaning for this verse as: “the worse poverty in poor is to be in such a deprived state to tell guests to leave home, not be able to feed them. The stronger than the strong are those who can tolerate the dim-witted foolish persons that do harm unthinkingly”. Though both statements merit sense as stand alone statements, they don’t stand as comparison to one another. It is silly to think that vaLLuvar would have wasted his poetical skills with such poor comparison.

But, if we understand the meaning as follows, we can see the underlying connectivity to already expressed thought in the “Hospitality” chapter, through the verse “mOppak kuzhaiyum anichcham – mugamthirindhu nOkkak kuzhayum virundhu”.  The real meaning must be: “the best of the households will not tell their guests to leave and show utmost hospitality as the best virtue. Likewise, the strongest of strong attribute for ladies of the house is to have forebearance, patience and tolerance”.  In general this is in line with the way of the world to pin tolerance to ladies of the household.

“Forbearance is the virtue of the strong willed as it is
  For the best household to never unwelcome guests” 
                                     (Reflecting what the meaning should be!)

“The poorer than poor will not welcome the guests
  The stronger of strong will tolerate fooling deeds” 
                                    (In line with other commentators)

இன்மையுள் இன்மை – வறுமையில் கொடுமையான வறுமை
விருந்து – வீட்டிற்கு வரும் வருந்தினரை
ஒரால் – ஏற்றுக்கொள்ள முடியாமல் விலக்குதல்
வன்மையுள் – வலிமையுள் சிறந்த
வன்மை - வலிமையென்பது
மடவார்ப் – அறிவின்மையால் தவறு செய்தவர்களிடம்
பொறை – காட்டும் பொறுமை

இன்றைய குறள் சற்றே குழம்ப வைக்கும் குறள். மேலோட்டமாக பார்த்தால், இன்மை, வன்மையென்ற சொற்களுக்காக பொருத்தமில்லாத உவமையை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. வறுமையுள் வறுமைக்கும், வலிமையுள் வலிமைக்கும் என்ன பொருத்தம் இருக்கமுடியும்?  அமெரிக்காவுக்கும், பேரிக்காவுக்கும் உள்ள பொருத்தம்தான்!

ஒரால் என்ற சொல் எனக்குத் தெரிந்தவரைக்கும், அகராதிகளில் இல்லாத ஒரு சொல்.  ஒருவுதல் என்ற சொல்லுக்கு “நீங்கு என்று ஏவுதல்” அல்லது “தவிர்த்தல்” அல்லது “விலகல்” என்ற பொருளுள்ளது. இதையே மையமாகக் கொண்டு ஒரால் என்ற சொல்லுக்கு பரிமேலழகர் தொடங்கி உரையாசிரியர்கள் பொருள் செய்துள்ளதாகத் தெரிகிறது. அப்படியே வைத்துக்கொண்டாலும், ஒருவுதல், ஒரல் என்பதற்கு எதிர்மறையான சொற்களாக ஒருவாமை, ஒரால் என்று ஆகவேண்டும். மணக்குடவர் செய்த உரையில் இப்பொருளிலேயே, நீங்கு என்று ஏவாமை, அல்லது நீங்காமை என்றே செய்திருக்கிறார். தவிரவும் தவிர்க்காமை, விலகாமை என்பவையும் பொருளாகக் கொள்வோம்.

இரண்டாவதாக “இன்மை” என்ற சொல்லை, “வறுமை” என்று எடுத்துக்கொண்டதால் தவறான ஒப்புமைக்கு வழிவகுத்து விட்டது என்று நினைக்கிறேன். “இல்+மை” என்பது “இல்மை” என்றாகாமல் “இன்மை” என்றாகும். இல்லத்துள் நல்ல இல்லம் என்பது (உள்ளத்துள் நல்ல உள்ளம் போல) அல்லது இல்லாளுள் நல்ல இல்லாள் என்று கொள்ளவேண்டும்.

ஓரல் என்று ஒரு சொல் உள்ளது, அதற்கு ஆய்தல், தெளிதல் என்ற பொருள். அதுவும் பொருந்துவதாக இல்லை. “மடவார்” என்ற சொல்லுக்கும், “அறிவற்றவர்” என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் “மடவார்” என்பது பெண்டிரையும் குறிக்கும்.

இக்குறளுக்கு மற்ற உரையாசிரியர்கள் எழுதும் பொருள் இதுதான். “வறுமையுள் வறுமை, விருந்தை நீங்கு என்று சொல்லும்படியான நிலையில் இருத்தல். வலிமையுள் வலிமை, அறிவற்று மற்றோர் செய்யும் தவறுகளைப் பொறுப்பதாம்.” தனியே இரண்டு சொற்றொடரிலும் பொருள் இருந்தாலும், இவற்றில் முதலிலே சொன்னதை, இரண்டாவதுக்கு ஏற்ற ஒப்புமையாகக் கொள்ளமுடியாது. தவிரவும் வள்ளுவன் ஏதோ எதுகைக் காரணமாக வன்மை, இன்மை என்றதாகவும் ஆகிவிடும். மற்ற குறள்களை கவனித்தால், வள்ளுவன் அந்த கட்டாயத்துக்கும் ஆளாகி இருக்கமுடியாது.

இக்குறளின் பொருளை இவ்வாறு கொண்டால், நிச்சயமாக ஒன்றோடு ஒன்று இயைந்த பொருளாக வருகிறது. “இல்லறத்தில் சிறந்த இல்லறம் என்பது, வரும் விருந்தினரை “நீங்கு” என்று ஏவாமல், விருந்தோம்புதல். இது ஒரு சிறந்த அறனாம். அதேபோல், வலிமையுள் சிறந்த வலிமை பெண்களின் பொறுமையாம்”.  இது இல்லத்துப் பெண்களை குறித்துச் சொல்வதாக அமைகிறது. விருந்தோம்பும் பண்புக்கு மிகவும் தேவை இல்லத்தரசிகளுக்கு பொறுமை, விருந்தினர் முகம் கோணக்கூடாதே என்கிற எண்ணமும்தான்.  

விருந்தோம்பல் அதிகாரத்தின் இறுதிக்குறளான “மோப்பக்குழையும் அனிச்சம்- முகந்திரிந்து நோக்கக்குழையும் விருந்து” என்ற குறளை நினைவு கூர்ந்தால், இக்குறளின் பொருள் உள்ளங்கை நெல்லிக்கனி.  எனவே உரையாசிரியர்களின் கருத்தின் படி ஒரு குறளும், எனக்குப் பொருள்படுகிற கருத்தின்படி ஒரு குறளும் எழுதியுள்ளேன்.

இன்றெனது குறள் (கள்):
பெருவேழ்மை இல்விருந்து நீக்கும் - பொறுக்கும்
பெருவலிமை மூடரி டம்       (உரையாசிரியர்கள் கருத்துப்படி)
peruvEzhmai ilvirundhu nIkkum- poRukkum
peruvalimai mUDari Dam

இல்சிறந்தாள் நீங்கென்னாள் தம்விருந்தை - இல்பெண்டிர்
நல்வலியோ குன்றாப் பொறை. (எனக்குத் தோன்றிய பொருள்)
ilsiRandhAL nIngennAL thamvirundhai – ilpeNdir
nalvaliyO kundRap poRai

செப்டம்பர் 20, 2012

குறளின் குரல் - 161


20th September, 2012

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
                  (குறள் 152: பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
poRuththal iRappinai endRum adhanai
maRaththal adhaninum nandRu

poRuththal – practicing forbearance, tolerance
iRappinai  - when there is an excess of swerving form virtuous conduct from someone
endRum – always (good)
adhanai – such excess of misconduct
maRaththal – forgetting them, without keeping them in mind, and nurturing ill feelings
adhaninum  -  even better than forbearance
nandRu -  is a good deed

This is good, but that’s better – is a thought expressed for another virtue of “thankfulness” earlier.  The verse “nandRi maRappadhu nandRanRu nandRalladhu andRe maRappadhu nandRu” is similar to the current verse – instead of “thankfulness”, it is said in the context of “forbearance”

When somebody swerves from virtuous conduct, tolerating such excess is a good trait to have, but to forget as such is even better, without harping on the excess and nurturing ill feelings and aversion because of that.

In general we can be forbearing and even be forgiving of other’s misdeeds, but not without pointing out the mistakes. Otherwise they may not even know that they were on the wrong side and and also understand that others know that they were wrong. In either case, there would likely be more wrong doings from the same person. Mistakes must be pointed out and opportunities be given for corrective behavior. When such opportunities are appropriately availed and the erring person self mends, we must forget his wrong doings altogether.

Earlier mistakes should never be the yardstick to assess somebody and paint the person with that taint when working with them again. This is what we must get as the essence from this verse. Without any new opportunities given and assurances obtained of corrective behavior, vain tolerance and forgetting are never advisable.

“Forbearance is good when others err on virtues
  Forgetting is even better virtue than to eschew”

தமிழிலே:
பொறுத்தல் – பொறுமையைக் கடைபிடித்தல்
இறப்பினை – பிறர் செய்யும் அற மீறலை, மிகுதியான தவறினை செய்யும் போது
என்றும் – எப்போதும் (நன்றாம்)
அதனை – அத்தகு அறமீறல்களை, வழுவல்களை
மறத்தல் - நினைவில் கொண்டு, அது நெஞ்சிலே கனன்று கோபமாக வளராமல், மறந்துவிடுதல்
அதனினும் – பொறுத்தலை விடவுமே
நன்று – நல்ல செய்கையாம்.

இது நல்லது, ஆனால் இதைவிட அது நல்லது என்ற பொருளிலே வள்ளுவர் செய்த குறள்களில் இது ஒன்று. உடனடியாக நினவுக்கு வருவது, “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று”. இக்குறளில் அதையே பொறுமையின் மீது ஏற்றிச்சொல்லுகிறார். 

பிறர்செய்யும் அறமீறலை, அவர்களின் செய்யும் மிகையான தவறுகளை பொறுத்துக்கொள்ளுதல் எப்போதுமே ஒரு நல்ல குணமாம். அதைவிட சிறந்தது, அத்தகு அறமீறல்களை, வழுவல்களை நினைந்து, மனதிலே வளர்த்து, அதன்காரணமாக காழ்ப்பு தோன்றாமலிருக்கும்படி, அவற்றை மறந்துவிடுதலேயாகும்.

பொதுவாக பிறர்செய்யும் தவறை மன்னிக்கலாம், பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் தவறைச் சுட்டிக்காட்டாமல் இருந்தால் சிலருக்குத் தாங்கள் செய்த தவறென்ன என்று தெரியாமலும் போகலாம், தவறே இல்லை என்கிற எண்ணமும் ஏற்படலாம். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு, தவறுகளைத் திருத்திக்கொள்ளுவதற்கு வாய்ப்புகள் தரப்படவேண்டும்.  அவ்வாய்ப்புகள் சரிவர பயன்படுத்தி ஒருவர் திருந்தியபின்னர், முன்னரவர் செய்த தவறுகள் மறக்கப்படவேண்டும்.

முன் செய்த தவற்றினை மனதில் கொண்டு ஒருவரை பின்னாளில் எடைபோடவும் கூடாது, அவரிடம் தரப்படும் செயல்களில் அச்சாயம் பூசி நோக்கக்கூடாது. அதைத்தான் இக்குறளிலிருந்து நாம் பெறும் கருத்தாக இருக்கவேண்டும். எவ்வித எதிருறுதியும், திருத்திக்கொள்ளுவதற்க்கான வாய்ப்பையும் தராமல், பெறாமல், வெற்றுப் பொறுமையும், மறத்தலும் மட்டுமே சரியானவையும் அல்ல.

இன்றெனது குறள்:
நன்றாம் பிறர்செய் அறமீறல் தான்பொறுத்தல்
நன்றதனின் முற்றுமறத் தல்

nandRam piRarsei aRamIRal thAnpoRuththal
nandRadhanin mutRumaRath thal

செப்டம்பர் 19, 2012

குறளின் குரல் - 160


அதிகாரம் 16: பொறையுடமை (Forbearance/Tolerance)
[This chapeter is about tolerance towards the people that act with high and mighty attitude due to their ignorance, stupidity, arrogance, enemity or other illfeelings]

19th September, 2012
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
                  (குறள் 151:  பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
agazhvAraith thAngum nilampOlath thammai
igazhvArp poRuththal thalai

agazhvAraith – Even those who dig (for their personal gains)
thAngum  - bear and hold them on it
nilampOlath – like the patience of the mother earth
thammai igazhvArp - those that insult us
poRuththal – tolerating them is
thalai – is a must.
  
Most often earth is cited as the very personification of patience, forebearance, as it bears the people that dig, plough, till, excavate, quarry, and mine day in and day out for their personal and selfish gains. This verse suggests that against all insults hurled a person should be patient and display tolerance towards the adversaries like how earth bears its adversaries and it is considered the true virtue too.

A verse in kaliththogai says, “Forebearance is that which bears the people that don’t praise”. Similar thoughts are expressed in nAlaDiyAr, and “pazhamozhi nAnUru”.

Kamban, to show “SItA’s” patience in high light, says compared to her patience, even the earth is not tolerant at all. This imagination is different and challenges the earth as the standard scale of patience.

“ The true virtue of patience is tolerating people that insult 
 Like the earth bearing people that dig selfishly to the hilt”

தமிழிலே:
அகழ்வாரைத் – தன்னை, தங்கள் சுயநலத்துக்காகத் தோண்டி, வெட்டுகிறவரை
தாங்கும் – பொறுத்துக்கொண்டு, அவரைத் தாங்குகிற
நிலம்போலத் – மண்மடந்தை, நிலமகள் போல
தம்மை இகழ்வார்ப் – – ஒருவர் தன்னை இகழ்ந்து, அவமதிப்பவரையும்
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
தலை – முதலாய அறப்பண்பாகும்

பொறுமைக்கு பூமாதேவியை எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கிலுள்ளது. “நிலத்தோரன்ன நலத்தகு பெரும்பொறை” என்கிறது பெருங்கதை. மனிதன் தன்னுடைய சுயநலத் தேவைகளுக்காக நிலத்தை அகழ்வதும், உழுவதும், வெட்டுவதும், தோண்டுவதும், சுரண்டுவதும், தொன்று தொட்டு நடந்துவருவது. உணவுக்காக, தாம் அணியும் அணிகலன்களுக்கான உலோக மற்றும் விலைமதிப்பற்ற கற்களுக்காக, தான் வசிக்கும் இருப்பிடங்களுக்காக என்று பலவித தேவைகளுக்காக இது நடைபெறுகிறது. இருந்தாலும் நிலமானது, தன்னை வெட்டுபவர்களைத் தாங்கிக்கொண்டு, அவர்கள் இவ்வுலகில் வாழ அடித்தளமாக இருக்கிறது. இதை பொறுமையின் வரையரையாகக் கொண்டால், அதேபோல, தம்மை இகழ்ந்து, அவமதிப்பவர்களையும், பொறுத்துக் கொள்ளுதலே ஒருவருக்கு அறப்பண்பாகும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.

கலித்தொகைப்பாடல், இக்குறளின் கருத்தையொட்டி, “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் என்கிறது”. நாலடியார், “தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்பதன்றி” என்கிறது.  பழமொழி நானூற்றுப் பாடல், “சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்” என்கிறது.

நிலத்தைப் பொறுமையின் வரையரையாகக் கொள்வோருள் சற்று வேறுபட்டு, சீதையின் பொறுமையை அதனோடு ஒப்பிட்டு, நிலம்கூட பொறுமையானது இல்லை என்று கூறலாம் என்கிறான் கம்பன் “நிலம் பொறை இலது என, நிமிர்ந்த கற்பினாள்”.  அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினும் பொறுமை உடையள் அந்நிலத்துத் தோன்றிய சீதை என்கிற கம்பனின் கற்பனை உவக்கத்தக்கது.

இன்றெனது குறள்:
தூற்றுவாரைப் தாம்பொறுத்தல் மண்மடந்தை தோண்டுவாரை
ஏற்றுதன்மேல் தாங்குதல் போல்

thUtRuvAraip thAmpoRuththal maNmaDandhai thOnDuvArai
eTruthanmEl thAngudhal pOl

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...