ஜூன் 30, 2013

குறளின் குரல் - 438


44:  (Avoiding Faults - குற்றம் கடிதல்)

[The common faults of human beings, more specifically, for rulers are, lust, anger, attachment, lack of honor, unjustified happiness, and arrogance. A ruler must be wise and be devoid of these faults to function just and effectively. Without wisdom, it may difficult to be analytical to discern good from bad and avoid faults. Hence this chapter follows the chapter on wisdom.]

30th June 2013

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
                            (குறள் 431: குற்றம் கடிதல் அதிகாரம்)

Transliteration:
Serukkum sinamum siRumaiyum illAr
Perukkam perumidha nIrththu

Serukkum – Arrogance out of pride of self
sinamum – anger, wrath, fury out of such arrogance
siRumaiyum – small-mindedness without restrain of lowly desires
illAr – those who are devoid of the above
Perukkam – their wealth is
perumidha nIrththu – highly dignified and exalted in state.

To be devoid of the six inner enemies of excessive desire, bitter hatred, miserliness, excessive attachment, arrongance out of pride, malicious envy is good for everyone, partilcularly for the people of power, rulers. The wealth of such people without three ills - the pride because of self importance, anger that comes out of that even when people suggest something out of concern or care,  and the lowly mind of excessive desires – is of exalted state and is a matter of deserved pride. That wealth will be spent in good ways and give a heavenly place of permanence.

All commentators interpret the word, “sirumai” as excessive desire, which seems right. Only such desire is the birthplace of all other ills. As thirumUlar would say, be devoid of desires even with the Lord supreme, which is the only way to heavenly state of mind. In Ramayana, the king Janaka was depicted as ruler who ruled without any attachment to the throne, a true raja rishi. Such state of mind is what is expected out of excellent rulers.

“The wealth of rulers without arrogance, anger and lowly
 lust is of high and diginified state of use most certainly”

தமிழிலே:
செருக்கும் - தாம், தமது என்னும் வெற்றுப் பெருமையினால் வரும் ஆணவம், இறுமாப்பும்
சினமும் - எளிதில் வரும் ஆத்திரத்தின் காரணமாய கோபமும்
சிறுமையும் - பரந்துபடாத எண்ணம், குறுகிய நோக்கும் (அளவிறந்த இச்சையினால் என்பர்)
இல்லார் - இவைகள் இல்லாதவர்களின் (குறிப்பாக ஆளுபவர்களுடைய)
பெருக்கம் - செல்வமானது
பெருமித நீர்த்து - மேன்மையானது (ஏனெனில் நல்வழிகளில் செலவழிக்கபடுதலை உடையது)

அறுவகை உட்பகைகளாகக் கூறப்படும், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் இவையாவும் அறுதல் எல்லோருக்குமே நல்லதுதான்.  தாமென்ற அகந்தையும், அதனாலே தம்மை கேள்வி கேட்பவர்களிடமும், தமக்கு இதமானவற்றைக் கூறுபவர்களிடம் கோபமும்,, மற்றும் கீழ்மையான குணங்களும் தம்மிடம் இல்லாது களைந்தவர்களிடம் உள்ள செல்வமானது மேன்மையானது, பெருமை தரக்கூடியது,  ஏனெனில் அச்செல்வம் நல்வழிகளில் செலவிடப்பட்டு, நிலையான பேற்றினை அளிக்கவல்லது.

உரையாசிரியர்கள் சிறுமை என்பதை அளவிறந்த இச்சையென்று கூறுகிறார்கள். அதுவும் சரியே. ஏனெனில் இச்சையே மற்ற இழிகுணங்களின் பிறப்பிடம். திருமூலர் சொல்லிய வாக்கு, “ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” எல்லோருக்கும் பொருந்துவது,  குறிப்பாக ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானது. சனகராஜனைப் போல் பற்றற்று ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும் என்பார்கள்.

இன்றெனது குறள்:

இறுமாப்பு கோபம் இழிநடத்தை அற்றார்
உறுஞ்செல்வம்  உன்னதச்செல் வம்

iRumAppu kOpam izhinaDaththai aRRAr
uRunjchelvam unnadhachchel vam

ஜூன் 29, 2013

குறளின் குரல் - 437


29th June 2013

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.
                                  (குறள் 430: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:
aRivuDaiyAr ellA muDaiyAr aRivilAr
ennuDaiya rEnum ilar

aRivuDaiyAr – Wise people
ellAm uDaiyAr – have the fulfillment of everything, though not wealthy
aRivilAr - Fools
enn uDaiyarEnum – Regardless of how much wealthy they are
ilar – have none and are considered poor

The last verse of this chapter makes a clear-cut distinction between the wisemen and men of ignorance. Though not measured in terms of riches as wealthy, wisemen have everything to their avail as their wisdom as the power to accomplish anything; fools may be rich and wealthy, but highly lack in the treasure of knowledge, without which, they may not even be able to safeguard their riches. They are indeed considered impoverished in comparison.

nAlaDiyAr says, not having finer sensitivity (a product of wisdom)  is poverty; having that is huge wealth. pazhamozhinAnUru says, just like a nude person can not be beautified by jewels, mere wealth can not make a fool proud.

“People of wisdom, have plenty of everything, though not by measure
Of wealth; fools, though rich, are impoverished in knowledge treasure”

தமிழிலே:
அறிவுடையார் - அறிவுள்ளோர்க்கு
எல்லாம் உடையார் - எல்லாம் நிறைந்தவராகவே இருப்பர் (செல்வமேதும் இல்லை எனினும்)
அறிவிலார் - அறிவற்றோர்

என் உடையரேனும்  - எது இருந்தாலும், எவ்வளவு செல்வமிகுந்தவராயினும்
இலர் - ஒன்றுமே இல்லாத வறியவர்தாம்.

இவ்வதிகாரத்தின் இறுதி குறளில் அறிவுடையோருக்கும், அறிவிலிகளுக்குமான தெளிவான வித்தியாசத்தைக் குறிப்பிட்டு நிறைவு செய்கிறார் வள்ளுவர். செல்வச் சிறப்பில்லாவிட்டாலும், அறிவுடையோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு, அவர்களது அறிவுடைமையே பெருந்துணையாகவும், செல்வமாகவும் இருந்து அவர்களை வாழ்விக்கும். அறிவில்லாதவர்களுக்கு, மூடர்களுக்கு, பெருஞ்செல்வமிருந்தும் அவர்கள் வறியரே. அவர்கள் செல்வத்தைக்கூட கட்டிக்காக்கும் திறமையில்லாதவர்கள், அவர்கள் செல்வத்தைத் தொலைக்கவும் செய்வர்.

நாலடியார் பாடலொன்று இதையே, “ நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” என்கிறது.. பழமொழிப் பாடலொன்று,  இவ்வாறு கூறுகிறது.

 “அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட(து) எவனாம் - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்”

இதன் கருத்து, “ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம்”

இன்றெனது குறள்(கள்):

இலரெனினும் உள்ளோர் அறிவுடையோர் பெற்றும்
இலரே அறிவிலி கள்
ilareninum uLLOr aRivuDaiyOr peRRum
ilarE aRivili gaL

அறிவுடையோர்க் கில்லாமை இல்லை இருந்தும்
அறிவிலார்க் கேதுமில் லை
aRivuDaiyOrk killAmai illai irundhum
aRivilArk kEthumil lai

ஜூன் 28, 2013

குறளின் குரல் - 436


28th June 2013

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
                                  (குறள் 429: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:
edhiradhAk kAkkum aRivinArk killai
adhira varuvadhOr nOi

edhiradhAk – Expecting the hardship that will befall
kAkkum – protecting self from them
aRivinArkk(u) illai – for such people of wisdom, there is none
adhira - shocking
varuvadhOr – that comes
nOi - misery

Wisemen can foresee what is about to come in the future and protect themselves from any adverse happenings or impending distress. Hence no misery that shocks them will befall on them; they would take precautionary or preparatory steps to handle such situations. Wisdom is a friend that can save before mishap befalls.  The same verse also implies the opposite without being explicit. Even the little or ordinary mishaps can be shocking and beyond their capacity of handling for unwise.

“Wisdom foresees and protects from impending distress
 Hence, no shocking misery will befall for wise as duress

தமிழிலே:
எதிரதாக் - வரப்போகும் துன்பங்களை எதிர்பார்த்து (எதிர் அதா - வருங்காலத்தில் அங்கே)
காக்கும் - அவற்றிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளும்
அறிவினார்க்கு இல்லை - அறிவுடையோர்களுக்கு இல்லை
அதிர - நடுங்கும் படியாக
வருவதோர் - வரக்கூடிய
நோய் - துன்பங்கள் ஒன்றும்

அறிவுடையோர் பின்னால் வரக்கூடிய துன்ப நிகழ்வுகளை முன்பாகவே எதிர்பார்த்து, அவற்றிலிருந்து தம்மைக் காத்துகொள்ளும் திறனுடையர். அதனால் அவர்களுக்கு நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பங்கள் ஒன்றுமில்லை.. அறிவுடைமை வருமுன் காக்கும் தோழன் போன்றதாம். இதனால் எதிர்மறைப் பொருளும், அதாவது அறிவுடைமை அற்றவர்களுக்கு அத்திறமை இல்லை என்பதும், அவர்களுக்கு சிறுதுன்பங்களும் கூட நடுக்குறுபவையாக அமையும் என்பதும் பெறப்படுகிறது.

இன்றெனது குறள்:

வருமுன் அறிந்துகாத்துக் கொள்ளறிஞர் துன்பம்
ஒருநாளும் கொள்வதில் லை

varumun aRindhukAththukk koLLaRinjar thunbam
orunALum koLvadhil lai

ஜூன் 27, 2013

குறளின் குரல் - 435


27th June 2013
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
                                  (குறள் 428: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:
Anjuva dhanjAmai pEdhaimai anjuvadhu
Anjal aRivAr thozhil

Anjuvadh(u) – what needs to be feared (blame, sin and destruction because of that)
anjAmai – not fearing that
pEdhaimai – is stupidity
anjuvadhu – To fear
Anjal – for that needs to be feared
aRivAr – wisemen’s
thozhil – job and duty

Everyone must live with the fear of ill effects of blame, sin and must refrain from them hence. Such a stance is wisdom. Living otherwise are foolishness and stupidity. Wisemen do fearing evil as a duty. nAlaDiyAr says, one must gain wisdom and be self-contained or self-restrained and must fear evil ill to make the world happy. (“aRivaRindhu aDangi anjuvadhu anji uRuvadhu ulagu uvappach cheivadhu”).  Those who do not fear evil are called “aRanili” by kaliththogai.

Wisdom is fearing ills that need to feared and a duty
Fools feign fearlessness for ill out of sheer stupidity                                     

தமிழிலே:
அஞ்சுவது - எவற்றிற்கு பயப்படவேண்டுமோ (பழி, பாவம், கேடு முதலியவற்றுக்கு)
ஞ்சாமை - அவற்றிற்கு பயப்படாமல் இருப்பது
பேதைமை - மடமை
அஞ்சுவது
 - அவ்வாறு எவற்றுக்கு அஞ்ச வேண்டுமோ
அஞ்சல் - அவற்றுக்குப் பயப்படுதல்
அறிவார் - அறிவுடையார்
தொழில் - தாம் மேற்கொண்ட வேலையாகவே, காரியமாகவே கொண்டு கருத்தாகச் செய்வர்.

பழி, பாவம், அவற்றினால் வரும் கேடு இவற்றுக்கு ஒவ்வொருவரும் அஞ்சியே வாழவேண்டும்; அதுவே அறிவுடைமையும் ஆகும். அவற்றுக்கு அஞ்சாமல் வாழ்வது மடமை, பேதைமையாகும். அறிவுடையோர் தீயனவற்றுக்கு அஞ்சுவதைக் கடமையாகவே செய்வர். நாலடியார், “அறிவதறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி உறுவது உலகு உவப்பச் செய்வது” என்று கூறும். அறிவது அறிந்த அறிவுடையோருக்கே அதன் காரணமாக அடக்கமும், அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சுவதும் உறும்!  அறம் பிறழ்ந்து அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாதவர்களை “அறனிலி” என்கிறது கலித்தொகைப் பாடல் வரி - “அஞ்சுவதஞ்சா அறனிலி”.

இன்றெனது குறள்(கள்):

அறிவுடையோர் அஞ்சுதற்கு அஞ்சுவர் அஞ்சார்
அறிவிலாப் பேதைமை யர்
aRivuDaiyOr anjudhaRku anjuvar anjAr
aRivilAp pEdhaimai yar

அறிவுடைமை அஞ்சுதற்கு அஞ்சுதல் அற்றல்
அறிவற்ற பேதைமை யாம்
aRivuDaimai anjudhaRku anjudhal aRRal
aRivaRRa pEdhaimai yAm

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...