மே 31, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 53

मनःस्तम्भं स्तम्भं गमयदुपकम्पं प्रणमतां
सदा लोलं नीलं चिकुरजितलोलम्बनिकरम्
गिरां दूरं स्मेरं धृतशशिकिशोरं पशुपतेः
दृशां योग्यं भोग्यं तुहिनगिरिभाग्यं विजयते ५३॥

மன:ஸ்தம்பம் ஸ்தம்பம் ³மயது³பகம்பம் ப்ரணமதாம்
ஸதா³ லோலம் நீலம் சிகுரஜித லோலம்ப³ நிகரம்
கி³ராம் தூ³ரம் ஸ்மேரம் த்ருʼதஶஶி கிஶோரம் பஶுபதே:
த்³ருʼஶாம் யோக்³யம் போக்³யம் துஹினகி³ரி பாக்³யம் விஜயதே 53

எப்போதும் விளையாடுவதும், கரு நீல நிறமுள்ளதும்,  கூந்தலழகால் வண்டின அழகை வென்றதும், வாக்கினுக்கு எட்டாத மகிமையுள்ளதும், அழகுள்ளதும், இளஞ்சந்திரனைத் தலையில் சூடியதும், பசுபதியின் கண்களுக்கு  உகந்த அனுபவப்பொருளும், பனிமலைக்குப் பாக்கியமுமான பொருளொன்று, வணங்குபவர்களின் இயக்கமற்று, உணர்விழந்த நிலையிலுள்ள மனங்களுக்கும் கம்பையருகிலுள்ள தூணாக விளங்குகிறது.

கருநீல வண்ணமும் கார்குழ லால்கட்கள் கார்செயித்த
வருணமும் வாக்கு மணுகா மகிமையும் வான்மதியை
சிரமேற்ற தும்சிவன் செங்கண்கட் கேற்றதும், சீதமலை
திருவும் துதிப்போர் திறமிலுள் ளின்கம்பைச் சீர்த்தறியே!

கார்-அழகு; கட்கள்-வண்டுகள்; வருணம்-அழகு; அணுகா-எட்டாத; செங்கண்-சிவந்த கண்கள்; சீதமலை-பனிமலை; திறம்-இயங்கு தன்மை; தறி-தூண்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

கருநீல வண்ணமும் கார்குழலால் கட்கள் கார் செயித்த வருணமும் வாக்கும் அணுகா மகிமையும் வான் மதியை சிரமேற்றதும் சிவன் செங்கண்கட்கு ஏற்றதும், சீத மலை திருவும் துதிப்போர் திறம் இல் உள்ளின் கம்பைச் சீர்த் தறியே!


(மூககவியின் சொல் விளையாடலில், அவர் அம்மையெனும் பொருள் பற்றி அடுக்கியிருக்கும் பலவித உருவகங்களை கட்டுக்கள் நிறைந்த கட்டளை கலித்துறையில், நான்கு வரிக்குள் கொண்டுவருவது மிகவும் கடினமான ஒன்றாயினும், இப்பாடலும், மூல ஸ்லோகத்தை ஒட்டியே எழுதமுடிந்ததே அவளுடைய தயையன்றி, என்னுடைய ஒருவிதத் திறமையும் இல்லை!. இக்குறிப்பும் கூட எனக்கு நானே எழுதிக்கொண்டதுதான், பின் எப்போதாவது படிக்க நேர்ந்தால்)

மே 30, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 52

श्रियं विद्यां बुद्धिं जगति नमतां त्वामथ यश:
सुपुत्रान् प्रादत्ते तव झटिति कामाक्षि करुणा
त्रिलोक्यामाधिक्यं त्रिपुरपरिपन्थिप्रणयिनि
प्रणामस्त्वत्पादे शमितदुरिते किं कुरुते ५२॥

ஶ்ரியம் வித்³யாம் பு³த்³தி³ம் ஜகதி நமதாம் த்வாமத யஶ:
ஸுபுத்ரான் ப்ராத³த்தே தவ சடிதி காமாக்ஷி கருணா
த்ரிலோக்யா மாதிக்யம் த்ரிபுர பரிபந்தி² ப்ரணயினி
ப்ரணாமஸ் த்வத்பாதே³ ஶமித து³ரிதே கிம் குருதே 52

திரிபுர எதிரியின்பால் அன்பு பூண்டவளே! காமாக்ஷி! உலகில் உன்னை வணங்குகிறவர்களுக்கு உன் கருணையானது, செல்வம், கல்வி, அறிவு, மேலும் புகழ், நல்ல குழந்தைகளையும் சீக்கிரமே கொடுக்கிறது. மேலும் மூவுலகிலும் உயர்வையும் கொடுக்கிறது! பாவத்தை நீக்கும் உன் சரணங்களில் செய்யப்படும் துதியானது எதைத்தான் செய்யவில்லை!

திரிபுர வைரிபால் செம்பத்தி யாளே! செகத்திலுனை
வருணிப்போர்க் குன்தயை, வாமமும் கல்வியும் வாசிதமும்
சுருதியும் மேலும் சுமக்களும் ஈயுமாம்; தூக்குமாமூ
வரைப்பில்கா மாட்சிநின் மாசொழி பாதமென் மாற்றிடாதே?

செம்பத்தி-செம்மையாம் அன்பு; வருணம்-துதித்தல்; வாமம்-செல்வம்; வாசிதம்-அறிவு; சுருதி-புகழ்; சுமக்கள்-நற்குழந்தைகள்; தூக்கு-உயர்வு; வரைப்பு-உலகம்; மாசு-பாவம்; ஒழி-நீக்கு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

திரிபுர வைரிபால் செம்பத்தியாளே! செகத்திலுனை வருணிப்போர்க்குன் தயை, வாமமும் கல்வியும் வாசிதமும், சுருதியும் மேலும் சுமக்களும் ஈயுமாம்; தூக்குமாம் மூவரைப்பில்! காமாட்சி நின் மாசு ஒழி பாதம் என் மாற்றிடாதே?

மே 29, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 51

उदञ्चन्ती काञ्चीनगरनिलये त्वत्करुणया
समृद्धा वाग्धाटी परिहसितमाध्वी कवयताम्
उपादत्ते मारप्रतिभटजटाजूटमुकुटी-
कुटीरोल्लासिन्याः शतमखतटिन्या जयपटीम् ५१॥

உத³ஞ்சந்தீ காஞ்சீ நக³ர நிலயே த்வத்கருணயா
ஸம்ருʼத்³தா வாக்³தாடீ பரிஹஸித மாத்வீ கவயதாம்
உபாத³த்தே மார ப்ரதிபட ஜடாஜூட முகுடீ-
குடீரோல்லாஸின்யா: ஶதமக² தடின்யா ஜயபடீம் 51

காஞ்சிபுரத்துறைபவளே! உனது கருணையால், கவிகட்கு உண்டாகும் நிறைவான, அமுதத்தையும் பழிக்கும் சொல்வன்மை, மாரவைரியின் சடைமுடியாம் குடிசையில் உள்ளக்களிப்புடன் வாழும் கங்கையின் வெற்றிக்கொடியையும் பறிக்கிறது!

கவிகட்குன் அன்பால் கமமாய், அமுதும் கடைப்படுத்தும்
கவிவன்மை உண்டாக்கும், காஞ்சி யளேயக் கவித்திறன்கா
மவைரியார் வேணி மகுடக் குடிலில் மனங்களிக்கும்
தவகங்கை வெற்றித் தவழ்கொடி யும்கட்டல் தாம்செயுதே!

கமம்-நிறைவு; கடைப்படுத்தல்-இழிவு செய்தல்; வேணி-சடை; கட்டல்-பறித்தல்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கவிகட்கு உன் அன்பால் கமமாய், அமுதும் கடைப்படுத்தும் கவி வன்மை உண்டாக்கும், காஞ்சியளே, அக் கவித்திறன் காமவைரியார் வேணி மகுடக் குடிலில் மனங்களிக்கும் தவகங்கை வெற்றித் தவழ் கொடியும் கட்டல் தாம் செயுதே!

மே 28, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 50

पुरस्तान्मे भूयःप्रशमनपरः स्तान्मम रुजां
प्रचारस्ते कम्पातटविहृतिसम्पादिनि शिवे:
इमां याच्ञामूरीकुरु जाननि दूरीकुरु तमः-
परीपाकं मत्कं सपदि बुधलोकं नय माम् ५०॥

புரஸ்தான்மே பூ: ப்ரஶமன பர: ஸ்தான்மம ருஜாம்
ப்ரசாரஸ்தே கம்பாதட விஹ்ருʼதி ஸம்பாதி³னி ஶிவே:
இமாம் யாச்ஞாமூரீ குரு ஜனனி³ தூ³ரீகுரு தம:-
பரீபாகம் மத்கம் ஸபதி³ பு³லோகம் நய மாம் 50

கம்பைத் தடத்தில் விளையாடும் மங்களமே! அன்னையே! என்னுடைய உலகவாழ்வாம் வினைகளைத் தீர்க்கும் உன்னுடைய சஞ்சாரம் என்முன் தோன்றுக. இத் துதியை ஏற்பாயாக! என்னுடைய முதிர்ந்த அறியாமையை அகற்றி, விரைந்து, என்னை அமரருலகிற்கும் போகச் செய்வாயாக!

கம்பைத் தடத்தாடும் காமாட்சி தாய்மங் களமயமே!
எம்மிக வாழ்வின் இருவினை தீர்க்கும் இயக்கமுடன்
எம்முன்னர் தோன்றுக! இத்துதி ஏற்றெம் இருட்டகற்றி
எம்மை விரைந்து இமையார் உலகினில் ஏற்றுவயே!

ஆடும்-விளையாடு; இருவினை-நல்ல,தீய வினைகள்; இயக்கம்-சஞ்சாரம்; இருட்டு-அறியாமை; இமையார்-அமரர்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கம்பைத் தடத்தாடும் காமாட்சி தாய் மங்களமயமே! எம்மிக வாழ்வின் இருவினை தீர்க்கும் இயக்கமுடன் எம்முன்னர் தோன்றுக! இத் துதி ஏற்று எம் இருட்டகற்றி எம்மை விரைந்து இமையார் உலகினில் ஏற்றுவயே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...