மே 31, 2014

குறளின் குரல் - 772

31st May 2014

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
                        (குறள் 766: படைமாட்சி அதிகாரம்)

மறம் - வீரம்
மானம் - பெருமையும் மதிப்பும்
மாண்ட வழிச்செலவு - முன்னோர்வழிவந்த சிறந்த படைத்திற வழிகள்
தேற்றம் - உரமிக்க நெஞ்சம் (அரனுக்கு நம்பிக்கையாயிருத்தல் என்பார் பரிமேலழகர்)
என நான்கே - எனப்படும் நான்குமே
ஏமம் - காக்கும் அரண் போன்றவையாம்
படைக்கு - ஒரு சேனைக்கு

இக்குறள் ஒரு சேனைக்குத் தேவையானவையாக வீரம், தம்முடைய பெருமையும், மதிப்பையும் இழக்காமை, முன்னோர் வகுத்துத் தந்த, படையைச் செலுத்தும், நல்வழிமுறைகள் மற்றும் குலையாத நெஞ்சுரம் என்ற நான்கும் என்கிறது. இவை நான்குமே ஒரு படையைக் காக்கும் அரண் போன்றதாம்.

Transliteration:

maRammAnam mANDa vazhichelavu tERRam
enanAngE Emam pADaikku

maRam - valor
mAnam - honour
mANDa vazhichelavu – glorious path paved by illustrious predecessors
tERRam – resolute heart
ena nAngE – these four are
Emam – the protection
pADaikku – for an army

This verse lists four must-have attributes for an army. They are valor that can face the enemy at the war front, honor that does compromise for any lures, following glorious path of warefare paved by illustrious predecessors and the resolute heart that does not give up. Only these four can be the best protection for an army.

“Valor, honor, following the good path of predecessors and confidence
 are the four attributes required as a safeguard for an army of eminence”

இன்றெனது குறள்:

வீரமெவ்வம் முன்னோர்தம் நல்வழி நெஞ்சுரம்
சேரநான்கும் சேனைக்கு காப்பு

(வீரம், எவ்வம், முன்னோர்தம் நல்வழி, நெஞ்சில் உரம் (இவை) சேர நான்கும் சேனக்கு ஏமம்)
 எவ்வம் - மானம்; ஏமம் - வலிமை, காக்கின்ற அரண் போன்றது

vIramevvam munnOrtham nalvazhi nenjuram

sEranAngum sEnaikkE mam

மே 30, 2014

குறளின் குரல் - 771

30th May 2014

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
                        (குறள் 765: படைமாட்சி அதிகாரம்)

கூற்று - மரண தேவன்
உடன்று - கோபித்து, சினந்து
மேல்வரினும் - எதிர் வரினும்
கூடி எதிர்நிற்கும் - ஒன்றாகக் கூடி நின்று எதிர்த்து நிற்கக்கூடிய
ஆற்றலதுவே - ஆற்றல் அதாவது திறனே
படை - படை,சேனை (என்று உலகம் போற்றும்)

ஒரு சிறந்த சேனையானது, மரணத்தை தரும் தேவனே சினந்து எதிர் வந்தாலும், ஒன்றாகச் சிதறாமல் நின்று அவனையும் எதிர்கொண்டு எதிர்த்து நிற்கும் திறனை உடையது. மீண்டும், இக்குறள் கூற்றுவனையே எதிர்க்கும் ஆணவத்தைக் குறிப்பிடாமல், அரசின் மீது அன்பையும், சிறந்த படைக்கு இருக்கக்கூடிய  உயிரையும் அர்ப்பணிக்கும் உணர்வையும், ஒழுக்கத்தையும் அடிக்கோடிடுகிறது. இலக்கியங்களில் பலவும் கூற்றுவனுக்கு அஞ்சா மனவுறுதியைப் வீரர்களைப் பற்றிய பாடல்களில் குறிக்கின்றன.

Transliteration:

kURRudanRu mElvarinum kUDi edirniRkum
ARRa laduvE paDai

kURRu – the lord of death
udanRu – in anger
mElvarinum – even if comes against
kUDi edirniRkum – congregate to stand against Him
ARRaladuvE – is the most capable
paDai – army

An excellent army is one that does not disintegrate and run away even when the God of death comes before them, with extreme anger. They stand united to face him and fight him. The intent of this verse is to not to show the arrogance of people that defy even death. It is out of love for the rule, the sacrificing quality, and the extreme discipline in facing the adverse and fierce enemies.
“Even at the face of death lord with extreme fury
 Not to fear and face united to fight is a real army”

இன்றெனது குறள்:

மரணதேவன் கோபித்து வந்தெதிர்த்தும் அஞ்சா
துரத்தொ டெதிர்ப்பதேசே னை

(மரணதேவன் கோபித்து வந்தெதிர்த்தும் அஞ்சாது உரத்தொடு எதிர்ப்பதே சேனை )

maraNadEvan kObiththu vandedirththum anjA

duraththo DedirppadEsE nai.

மே 29, 2014

குறளின் குரல் - 770

29th May 2014

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
                        (குறள் 764: படைமாட்சி அதிகாரம்)

அழிவின்றி - பகைவரால் தோற்கடிப்படமுடியாத
அறை போகாதாகி - பகைவரின் வஞ்சனையில் வீழாத
வழிவந்த - தொன்று தொட்டு வந்த
வன்கண் அதுவே - நெஞ்சுறுதியும் உடையதுவே
படை - படை

பகைவரால் குலைத்து அழிக்கமுடியா மறமும், பகைவரின் வஞ்சனைக்கு வீழாமையும், தொன்று தொட்டு வந்த மறத்தினால் கொண்ட நெஞ்சுறுதியும் உடையதுவே படை, என்று ஒரு படைக்குத் தேவையான மூன்று கூறுகளைக் கூறுவது இக்குறள்.

பரிமேலழகர் உரையில், “அழிவின்றி” என்பதை வீரத்தின் காரணமாக போரில் அழிக்கப்படாமை என்கிறார். “அறை போகாமை” என்பதை பகைவரின் வஞ்சனையில் வீழாத அளவுக்கு தம் அரசின்மேல் உள்ள அன்புடைமை, ஒழுக்கமுடைமை, தன்மானம் என்கிறார்.

கல்லிலே பொருந்தி நின்றான் என் தந்தை; என் கணவன் போர்களத்திலே பட்டான்; பகைவர்முன் நின்று போரிலே விழுந்தார் என்னுடைய தமையன்மார்; தன் சேனையே அழிந்தாலும், தான் அழியாது நின்று, அம்பைச் செலுத்த பகையரசன் மேல் பாய்ந்து பின்னர் முள்ளம்பன்றிபோலப் பட்டான் என்னுடைய புதல்வன் என்று உறுதிகுலையாத பண்டுதொட்டு வந்த வீரத்தைப் பேசும் தமிழ் மறப்பெண்ணைக் கொண்டாடும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று “வழிவந்த வன்கண்” என்பதைச் சொல்லுகிறப்பாடல் இதோ:

கன்னின்றா னெந்தைக்கணவன் களப்பட்டான்

முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் -பின்னின்று

கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி

எய்போற் கிடந்தானென் னேறு

Transliteration:

azhivinRi aRaipOgA dAgi vazhivanda
vanka NaduvE paDai

azhivinRi – With unfailing valor to not fall at the hands of enemies
aRai pOgAdAgi – Not be defeated by the guile of enemies
vazhivanda – hereditary that continues for ages
vankaN aduvE – that which has highly resolved and firm mind
paDai – is indeed an army

Valor that cannot be vanquished by enemies,  the stance of not falling for enemies guile, the resolved mind because of hereditary valor of ages are the three traits for an army.

Parimelazhagar’s commentary explains the use of specific words of this verse thus: “AzhivinRi” is because of the valor that is undeatable and hence does not perish. “aRai pOgAmai  means not falling for enemies guile, because of the love  out of loyalty to the rule,  restrained conduct and self-respect.

A poem from “PurapporuL veNpA mAlai” talks about a valorus mother proudly talking about her father, husband, and elder brothers and finally her son that fell in the battlefield, implying the valor that has come through ages of seasoned war-field experience as a hereditary trait – a detailed explanation of the phrase “vazhivanda vankaN

“Not perishing, not being subject to guile of enemies,
 Resolute heart as hereditary pride are traits of armies”

இன்றெனது குறள்(கள்):

அறுதலின்றி வஞ்சனையில் வீழாது குன்றா
உறுதினெஞ்சில் கொள்வதுப டை

aRudalinRi vanjanaiyil vIzhAdhu kunRA
uRudinenjil koLvathupa Dai

தோற்காது வஞ்சனையில் வீழாது பண்டுதொட்டு
தோற்காத நெஞ்சினர்ப டை

thORkADu vanjanaiyil vIzhAdhu paNDuthoTTu
thORkADa nenjinApa Dai


அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...