ஜூலை 25, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 45

मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन
मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन
कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण
श्रेयस्करेण मधुपद्युतितस्करेण 45

மாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன
மன்தாக்ஷிதேன ஸுஜனைரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்மதிமிரோத்கர பாஸ்கரேண
ஶ்ரேயஸ்கரேண மதுப த்யுதி தஸ்கரேண ||45||

தாயே காமாக்ஷீ! சற்றே மென்மையும், நாணமும் கூடி தாழ்ந்ததும், நல்லோர்களால் நன்கு அறியப்பட்டதும், கர்மவினையாம் இருளைச் சூரியன்போல் அழிப்பதும், உயர்வை அளிப்பதும், வண்டுகளின் ஒளியைத் திருடியதுமான உன் கடைக்கண்ணினால் சிறிது நேரமாவது என்னை நீராட்டுவாயாக!

சற்றேமென் மையோடு தாழ்ந்து இருளைத் தகைவுடைத்தாம்;
சற்சனத் தோர்கள் தரிசிப்பாம்; அற்கன்போல் தம்கருமம்
உற்றவல் நீக்கும்; உயர்வீயும்; வண்டின் ஒளிதிருடும்;
சற்றக்கண் ணால்நனைத் தால்தாயே காமாட்சீ தண்ணுறுமே


இருளை - நாணம்; சற்சனம் - நல்லோர்; அற்கன் - சூரியன்; அல் - இருள்; தண்; குளிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...