ஜூன் 23, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -74

खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री-
शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती
तुण्डीराख्यै महति विषये स्वर्णवृष्टिप्रदात्री
चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूळि ७४॥

²ண்டீ³க்ருʼத்ய ப்ரக்ருʼதி குடிலம் கல்மஷம் ப்ராதிபஶ்ரீ-
ஶுண்டீ³ரத்வம் நிஜபத³ஜுஷாம் ஶூன்யதந்த்³ரம் தி³ஶந்தீ
துண்டீ³ராக்²யை மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருʼஷ்டி ப்ரதா³த்ரீ
சண்டீ³ தே³வீ கலயதி ரதிம் சந்த்³ர சூடா³ல சூளி 74

தன் திருவடிகளை அண்டிய பக்தர்களுக்கு, இயல்பில் கொடும் பாவத்தை நீக்கி, நல்ல ஞானத்தோடு விளங்கும் திறன் அளிப்பவளும், தொண்டை-மண்டலம் என்னும் உயர்ந்த தேசத்தில் பொன்மாரி கொடுத்து தரித்திரத்தை நீக்கும் சண்டிதேவி (காமாக்ஷி), சந்திரனைத் தலையில் தரித்த பரமசிவனிடத்தே அளவற்ற அன்பைச் செலுத்துகிறாளே!

அண்டி அடிசேர் அடியார்க் கியல்பாய் அறங்கடையைத்
துண்டித் தருளுவள் தூவொளி; பொன்மாரி தூவியேட்டை
தொண்டைப் பதியாம் துடிநாட்டில் நீக்குவள்; தூவளியை
சண்டீ! மதியைத் தலையணிந் தார்க்கே தருகிறாளே!

அறங்கடை-பாவம்; தூவொளி-தூய ஞானம்; ஏட்டை-தரித்திரம்; துடி-மேன்மை; தூளிவ-தூ+அளி-தூய அன்பு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அண்டி அடிசேர் அடியார்க்கு இயல்பாய் அறங்கடையைத் துண்டித்து அருளுவள் தூ ஒளி; பொன்மாரி தூவி ஏட்டை, தொண்டைப் பதியாம் துடி நாட்டில் நீக்குவள்; தூ அளியை, சண்டீ!, மதியைத் தலை அணிந்தார்க்கே தருகிறாளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...