येन ख्यातो भवति स गृही पूरुषो मेरुधन्वा
यद्दृक्कोणे मदननिगमप्राभवं बोभवीति ।
यत्प्रीत्यैव त्रिजगदधिपो जृम्भते किम्पचानः
कम्पातीरे स जयति महान्कश्चिदोजोविशेषः ॥ ७५॥
யேன க்²யாதோ ப⁴வதி ஸ க்³ருʼஹீ பூருஷோ மேருத⁴ன்வா
யத்³ த்³ருʼக்கோணே மத³ன நிக³ம ப்ராப⁴வம் போ³ப⁴வீதி ।
யத்ப்ரீத்யைவ த்ரிஜக³த³தி⁴போ ஜ்ருʼம்ப⁴தே கிம்பசான:
கம்பாதீரே ஸ ஜயதி மஹான் கஶ்சிதோ³ஜோ விஶேஷ: ॥ 75॥
எப்பெருமைக்கு, மேருவை வில்லாய் கொண்ட
பரம்பொருள் இல்லாளனாகிறானோ, எப்பொலிவின் கடைக் கண்களில் மதனாகமப் பெருமை வெளியாகிறதோ,
எதன் கிருபையாலே பரம ஏழைகூட மூவுலகின் அதிபனாக வளர்கிறானோ, அத்தகு சிறப்பான பொலிவு
கம்பைக் கரையிலே பெரிதாக விளங்குகிறது.
எக்கதழ் வுக்கே இமயவில் லீசனார் இல்லறனோ,
எக்கலிப் பின்விழி ஈற்றில் மதன்வேதம் ஈடுறுமோ,
எக்கிரு பையினால் ஏழையும் ஈசனாய்
ஏறுவனோ,
அக்கடிக் காந்தி அடைக்கம்பை துங்கமாய்
ஆகிறதே!
கதழ்வு,ஈடு-பெருமை;
இல்லறன்-கணவன்; கலிப்பு,காந்தி-பொலிவு; ஈசன்- அதிபன்; ஏறுதல்-உயர்தல்; கடி-சிறப்பு;
அடை-கரை; துங்கம்-உயர்வு;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam