ஜூன் 22, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -73

दूरं वाचां त्रिदशसदसां दुःखसिन्धोस्तरित्रं
मोहक्ष्वेलक्षितिरुहवने क्रूरधारं कुठारम्
कम्पातीरप्रणयि कविभिर्वर्णितोद्यच्चरित्रं
शान्त्यै सेवे सकलविपदां शांकरं तत्कलत्रम् ७३॥

தூ³ரம் வாசாம் த்ரித³ஶ ஸத³ஸாம் து:³² ஸிந்தோஸ் தரித்ரம்
மோஹக்ஷ்வேலக்ஷிதிருஹ வனே க்ரூரதாராஸி பத்ரம்
கம்பாதீரே ப்ரணயி கவிபிர் வர்ணிதோத்³யச் சரித்ரம்
ஶாந்த்யை ஸேவே ஸகலவிபதா³ம் ஶாம்கரம் தத்கலத்ரம் 73

தேவவாக்காம் வேதங்களுக்கும் எட்டாததும், துக்கமாம் நதியைத் தாண்டுதற்கு ஓடமாயும், அறியாமையாம் நச்சுமரக்காட்டுக்கு, கொடுங்கூர்மையான கத்தியாயும், கம்பைக்கரையில் இருப்பதில் விருப்புள்ளதும், கவிகளால் வருணிக்கப்படும் உயர்ந்த சரித்திரத்தை உடையதுமான அந்த சங்கரனுடைய மனைவியை (காமாக்ஷியை), எல்லாவித ஆபத்துக்களுடைய சாந்தியின் பொருட்டு சேவிக்கிறேன்.

வானவர் வாக்காம் மறைக்கெட்டாய்; ஓடமாம் மம்மராற்றில்;
ஞானமின் மையென்னும் நச்சு வனமழி நல்லயில்வாள்;
தானமர் வாய்கம்பைச் சைகதம்; போற்றுவர் சாரதியர்;
ஆனன் மனைநின் அடிசரண்! இக்கெலாம் ஆற்றுவயே!

வானவர்-தேவர்;  மம்மர்-துக்கம்/துயரம்; அயில்-கூர்மை; சைகதம்-மணற்கரை; சாரதியர்-புலவர்கள்; ஆனன்-சிவன்/சங்கரன்; இக்கு-ஆபத்து; ஆற்று-சாந்தி செய்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


வானவர் வாக்காம் மறைக்கு எட்டாய்; ஓடமாம் மம்மர் ஆற்றில்; ஞானமின்மை என்னும் நச்சு வனம் அழி நல் அயில் வாள்; தானமர்வாய் கம்பைச் சைகதம்; போற்றுவர் சாரதியர்; ஆனன் மனை நின் அடிசரண்! இக்கெலாம் ஆற்றுவயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...