आधून्वन्त्यै तरलनयनैराङ्गजीं वैजयन्तीम्
आनन्दिन्यै निजपदजुषामात्तकाञ्चीपुरायै ।
आस्माकीनं हृदयमखिलैरागमानां प्रपञ्चैः
आराध्यायै स्पृहयतितरामादिमायै जनन्यै ॥ ७२॥
ஆதூ⁴ன்வந்த்யை தரல நயனைராங்க³ஜீம் வைஜயந்தீம்
ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷா மாத்த காஞ்சீபுராயை ।
ஆஸ்மாகீனம் ஹ்ருʼத³யமகி²லை ராக³மாநாம் ப்ரபஞ்சை:
ஆராத்⁴யாயை ஸ்ப்ருʼஹயதிதராமாதி³மாயை ஜனன்யை ॥ 72॥
அலையும் கண்களால், அங்கசனின் கௌரவத்தை
அசைப்பவளும், தனது திருவடியை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவளும், காஞ்சிபுரத்தை
அடைந்தவளும், அனைத்து வேதங்களாலும் உலகத்தில் பூசனைக்குரியவளும், ஆதி மாயையும் அன்னையுமானவளை
நமது இதயம் மிகவும் விழைந்து இருக்கிறது.
அலையும் விழிகளால் அங்கசன் மானம் அசைத்திடுவாள்;
கலைக்காஞ்சி சேர்ந்து, கழலணைந் தார்க்குக் களிப்பருள்வாள்;
நிலைமறை யெல்லாமும் நித்தம்பூ சிப்பவள்; நின்றவள்பால்
வலைப்பட்டு தாயாதி மாயையை வீக்கும் மனம்நமக்கே!
அலையும்-சஞ்சலிக்கும்; அங்கசன்-மன்மதன்;
மானம்-கௌரவம்; கழல்-திருவடிகள்; அணைதல்-சேர்ந்தார்க்கு; வலைப்பட்டு-ஆட்பட்டு; வீக்கும்-விழையும்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
அலையும் விழிகளால் அங்கசன் மானம்
அசைத்திடுவாள்; கலைக் காஞ்சி சேர்ந்து, கழல் அணைந்தார்க்குக் களிப்பருள்வாள்; நிலை
மறையெல்லாமும் நித்தம் பூசிப்பவள்; நின்றவள்பால் வலைப்பட்டு தாய் ஆதி மாயையை வீக்கும்
மனம் நமக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam