26th Nov 2013
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(குறள் 580: கண்ணோட்டம் அதிகாரம்)
பெயக் கண்டும் - இடக் கண்டும்
(நண்பர்களும் நலம் விரும்பிகளும்)
நஞ்சுண்டு அமைவர் - விடத்தையே மறுக்காமல் உண்பர்
நயத்தக்க - யாவரும் விரும்பத்தக்க
நாகரிகம் - உயர்ந்த கண்ணோட்டம், அருட்
பார்வையினைக்
வேண்டுபவர் - தம்மில் கொள்ள விழைபவர்.
நாகரிகம் என்ற சொல் கண்ணோட்டமாகிய
அருள் நோக்கினைக் குறிக்கிறது. எல்லோரும் விரும்பத்தக்க அக்கண்ணோட்டத்தை வேண்டுபவர்,
நண்பர்களும், நலம் விரும்பிகளும் நஞ்சையே கொடுத்தாலும் அதையும் உண்டு பின்பும் அவரோடு
முகஞ்சுளிக்காமல் பழகுவார்கள். (பின்னும் உயிரோடு இருந்தால்)
கலித்தொகைப் பாடலொன்று
பரத்தையைப் பிரிந்துவரும் தலைவனைக் கண்டு, அவனிடம் காமக்கிழத்தி கூறுவதாக இவ்வாறு கூறுகிறது
- “நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை கண்டும், நின்மொழி தேறும்
பெண்டிரும் ஏமுற்றார்”. நஞ்சானது தன்னை உண்டோருடைய உயிரைப் போக்கும் என்று அறிந்து
வைத்தும் அதனை உண்டாற் போல, நீ இரக்கமற்றவன், உன்னுடைய மனக்கருத்து சிறிது அருள்
இன்றி வருத்துதல் என்றறிந்தும் உன்னுடைய பொய்யான பேச்சினை உண்மையென்று கொள்ளும்
பரத்தையரும் பித்து ஏறினர், என்கிறது இவ்வரிகள்.
நற்றிணைப் பாடலொன்றும்
இக்குறள் கருத்துக்கு இயைந்து, ““முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர்
நனிநாகரிகர்” என்னும்.
படிக்க நன்றாயிருந்தாலும்,
இது பொதுவாகவோ, ஆள்வோருக்காகவோ சொல்லப்பட்டாலும், சற்றும் பொருந்துவதில்லை. குறிப்பாக
நல்லவர்போன்ற நம்பிக்கைத் துரோகிகளைய இனம் காணாமல் இருப்பதும், இனம் கண்டும் ஆள்வோர்
தமக்கருகில் வைத்துக்கொள்வதும் கூடாது; அதுவே ஆளுவோருக்கு ஏற்புடைய செயல்.
Transliteration:
peyakkaNDum nanjunDamaivar nayaththakka
nAgarigam vENDu bavar
peyak kaNDum – even when given by (so called friends or
well wishers)
nanjunD(u) amaivar – will consume poison without saying anything
nayaththakka – desirable quality of
nAgarigam – kindly and merciful eyes
vENDubavar – that that desire to be such refined beings
The word “nAgarigam”
in general is interpreted to be “fashionable”; but in this verse it
means being compassionate having kindly eyes. People of such likeable quality
of having kindly look, will consume even poison given by the “socalled” friends
and “well wishers” without questioning and still be kindly towards them.
Though seems like
an elevated thought to highlight the extent of compassionate look for others,
this does not fit a ruler whose responsibility is not about how good he or she
is, but how compassionate he or she towards his citizen.
But this seems to
be a sangam age thought as similar examples are given in the works of naRRiNai
and kaliththogai too.
“Those that desire kindly look towards
everyone,
Consume, if given by friendly kind, even
poison”
இன்றெனது குறள்:
நல்லருட் கண்ணோட்டம் உள்ளவர்கள் நண்பரே
கொல்நஞ் சிடினுங்கொள் வர்
nallaruT kaNNOTTam uLLavargal naNbarE
kolnanj chiDinungkoL var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam