நவம்பர் 27, 2013

குறளின் குரல் - 588

59: (Espionage - ஒற்றாடல்)

[It is imperative for a ruler to know who his enemies, friends and people of neutral stance are to govern effectively. An effective rule and ruler will have a highly skilled and trained division of spies that are effective in providing the vital information for rulers about the aforementioned categories of people. These operations of espionage are done elaborately at several layers with complex web structure to make it unpenetrable and efficient. Spies recruited and trained for such operations swear in for maintaining the secrecy, integrity and loyalty to their rule. This chapter discusses the operations of espionage as prevalent during vaLLuvar’s times. In todays’ context, espionage has extended to all aspects of a nation including the economic interests]

27th Nov 2013

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
                            (குறள் 581: ஒற்றாடல் அதிகாரம்)
                                                                                 
ஒற்றும் - தேர்ச்சி பெற்ற ஒற்றர் படையும்
உரைசான்ற நூலும் - நீதி நெறி வழி நடத்து சான்றோர் வகுத்த நூல்களும்
இவையிரண்டும் - ஆகிய இரண்டும்தான்
தெற்று என்க - பின்னிப் பிணைந்திருப்பன
மன்னவன் கண் - ஆள்வோரிடம்

இவ்வதிகாரத்தின் முதற்குறளில் ஆள்வோரோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டியனவாக நீதி நெறிவழி நடத்தக்கூடிய ஆன்றோ வகுத்த நூல்களும், அறிவும், ஆள்வோருக்கு நட்பு, பகை மற்றும் இரண்டுமில்லா நிலையில்லுள்ள பகைவரைப்பற்றி, பகைநாடுகளைப் பற்றி தகவல் தரக்கூடிய ஒற்றர்படையும் என்று ஒற்றாடலின் தேவையை உணர்த்துகிறார் வள்ளுவர்

ஒற்றுபணி புரிவோரைப் பரிபாடல்  “காரியக் கண்ணவர்” என்கிறது. “கடனறி காரியக் கண்ணவரோடு என்கிறது” ((19:22).

Transliteration:

Orrum uraisAnDra nUlum ivayiraNdum
theRRenga mannavan kaN

Orrum – a skilled espionage division of operatives
uraisAnDra nUlum – ethical rule book that guide the ruler
ivayiraNdum – these two
theRRenga – are intertwined (inseparably)
mannavan kaN – with an effective and efficient ruler

In this chapter vaLLuvar gives two important things to be managed and intertwined with a ruler. They are the codebook of ethical ruling as given by the wisemen as well as a skilled and trained team of espionage. Both are important to good and safe governance. A ruler must know about his friendly, enemy and neutral states to provide protections and prosperity to his citizens. In today’s context of highly commercialized and market driven economies, countries also have highly trained economic espionage operations and when it comes to such operations, ethics are out of the window normally.

 “Codebooks for ethical ruling and skilled team of espionage
 Are usually intertwined with an effective rules as advantage”


இன்றெனது குறள்:

ஆளுவோர்க்குக் கண்ணிரண்டும் ஆன்றோர்தம் நூல்வழியும்
நாளுமொற்றி காப்போரும் தான்

AluvORkkuk kaNNIraNDum AnROrtham nUlvazhiyum
nALumoRRi kAppORum thAn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...