27th June 2013
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
(குறள் 428: அறிவுடமை அதிகாரம்)
Transliteration:
Anjuva dhanjAmai pEdhaimai anjuvadhu
Anjal aRivAr thozhil
Anjuvadh(u) – what needs to be
feared (blame, sin and destruction because of that)
anjAmai – not fearing that
pEdhaimai – is stupidity
anjuvadhu – To fear
Anjal – for that needs to be feared
aRivAr – wisemen’s
thozhil – job and duty
Everyone must live with the fear of
ill effects of blame, sin and must refrain from them hence. Such a stance is
wisdom. Living otherwise are foolishness and stupidity. Wisemen do fearing evil
as a duty. nAlaDiyAr says, one must gain wisdom and be self-contained or
self-restrained and must fear evil ill to make the world happy. (“aRivaRindhu
aDangi anjuvadhu anji uRuvadhu ulagu uvappach cheivadhu”). Those who do not fear evil are called “aRanili”
by kaliththogai.
Wisdom is fearing ills that need to feared and a duty
Fools feign fearlessness for ill out of sheer stupidity
தமிழிலே:
அஞ்சுவது - எவற்றிற்கு பயப்படவேண்டுமோ (பழி, பாவம், கேடு முதலியவற்றுக்கு)
அஞ்சாமை - அவற்றிற்கு பயப்படாமல் இருப்பது
பேதைமை - மடமை
அஞ்சுவது
- அவ்வாறு எவற்றுக்கு அஞ்ச வேண்டுமோ
அஞ்சல் - அவற்றுக்குப் பயப்படுதல்
அறிவார் - அறிவுடையார்
தொழில் - தாம் மேற்கொண்ட வேலையாகவே, காரியமாகவே கொண்டு கருத்தாகச் செய்வர்.
பழி, பாவம், அவற்றினால் வரும்
கேடு இவற்றுக்கு ஒவ்வொருவரும் அஞ்சியே வாழவேண்டும்; அதுவே அறிவுடைமையும் ஆகும். அவற்றுக்கு
அஞ்சாமல் வாழ்வது மடமை, பேதைமையாகும். அறிவுடையோர் தீயனவற்றுக்கு அஞ்சுவதைக் கடமையாகவே
செய்வர். நாலடியார், “அறிவதறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி உறுவது உலகு உவப்பச் செய்வது”
என்று கூறும். அறிவது அறிந்த அறிவுடையோருக்கே அதன் காரணமாக அடக்கமும், அஞ்ச வேண்டியவைகளுக்கு
அஞ்சுவதும் உறும்! அறம் பிறழ்ந்து அஞ்சவேண்டியவற்றுக்கு
அஞ்சாதவர்களை “அறனிலி” என்கிறது கலித்தொகைப் பாடல் வரி - “அஞ்சுவதஞ்சா அறனிலி”.
இன்றெனது
குறள்(கள்):
அறிவுடையோர் அஞ்சுதற்கு அஞ்சுவர் அஞ்சார்
அறிவிலாப் பேதைமை
யர்
aRivuDaiyOr anjudhaRku anjuvar anjAr
aRivilAp pEdhaimai yar
அறிவுடைமை அஞ்சுதற்கு
அஞ்சுதல் அற்றல்
அறிவற்ற பேதைமை யாம்
aRivuDaimai anjudhaRku anjudhal aRRal
aRivaRRa pEdhaimai yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam