26th June 2013
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
(குறள் 427: அறிவுடமை அதிகாரம்)
Transliteration:
aRivuDaiyAr
Ava dhaRivAr aRiviLAr
ahdhaRi
kallA dhavar
aRivuDaiyAr – People of learned wisdom
Avadh(u) aRivAr – are capable of knowing what is
about to come in life (and be prepared)
aRiviLAr – People that have no wisdom or learning
ahdh(u) – those happenings of future
aRikallAdhavar – have not ability to understand (the future
developments)
Yet another simple verse with a thought almost
apparent to everyone! People of wisdom that are learned and also have listened
to scholars speak, can discern the good from the bad and also know what is
about to come because of the current actions. Those who are not either learned
or have listened to words of erudite lack the ability for the above said.
“Wise
discern and are aware of repurcussion
Of actions and Fools fail to have that vision”
தமிழிலே:
அறிவுடையார் - கல்வி
கேள்விகளிலில் சிறந்து விளங்குபவர்கள்
ஆவதறிவார்
- பின் விளையக்கூடியவற்றை முன்பாகவே அறிபவர்கள் அல்லது நல்லவற்றை
அறிவிலார்
- கல்வி கேள்வியறிவில்லாதவர்கள்
அஃது - அவற்றை (பின் விளவுகளை)
அதாவது நல்லவை எவை என்பவற்றை
அறிகல்லாதவர்
- அறியமுடியாதவர்கள்
இக்குறள்
சொல்லும் கருத்து எளிமையானதும், எல்லோரும் அறிவதுமான ஒன்றுதான். கல்வி கேள்விகளினால்
அறிவுடமை பெற்றவர்கள் நல்லவை எவை, அல்லவை எவை என்பதும், ஒரு செயலின் பின் விளவுகளையும்
அறியக்கூடியத் திறமை இருக்கும். அவ்வாறு இல்லாத அறிவற்றவர்களுக்கு, நல்லவை, அல்லவை,
செயல்களினால் விளயக்கூடியவை என்கிற எண்ணங்களோ அல்லது ஆராயக்கூடியத் திறமையோ இராது,
இன்றெனது
குறள்(கள்):
அறிஞர் விளைவறிந்து ஆற்றுவார் ஆற்றார்
அறிவிலா மூடரென் றும்
aRinjar
viLaivaRindhu ARRuvAr ARRAr
aRivilA
mUDaren Rum
அறிவுடையோர் ஆற்றும் விளைவறிந்து ஆற்றார்
அறிவில் வறியரென்
றும்
aRivuDaiyOr
ARRum viLaivaRindhu ARRAr
aRivil
vaRiyaren Rum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam