ஜூன் 25, 2013

குறளின் குரல் - 433


25th June 2013
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
                                  (குறள் 426: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:
Evva dhuraivadhu ulagam ulagaththoDu
Avva dhuraiva dhaRivu

Evvadh(u) - how
uraivadhu – it dwells
ulagam – this world
ulagaththoDu – with the world
Avvadh(u) – in such ways
Uraivadh(u) – dwelling is
aRivu – wisdom

Though the verse is ordinary sounding, Parimelazhagar interprets it applied to the ruler. A ruler must not have rules for himself other than what are applicable to rest of the world. One must observe the world and understand the proper ways of living with the others in the world as if working in a team and live so too, which is wisdom. This verse also sounds like the popular adage, “Be in Rome as Romans are”

“ Wisdom is to dwell as
  The rest of world does”
  
தமிழிலே:
எவ்வது - எவ்வாறு
உறைவது  - இயங்குகிறதோ
உலகம் - உலகம் (உலகின் உயர்ந்தோர் வழி நின்று)
உலகத்தோடு - உலக்கத்தோடு பொருந்திய
அவ்வது - அவ்வழிகளில்
உறைவது - இயங்கி இருப்பதே
அறிவு - அறிவுடமை

இக்குறள் அறிவுடமையாகச் சொல்வது, ஒரு எளிய கருத்தை. உலகத்தோடு ஒட்டி வாழுதலே அறிவுடமை என்பதுதான் அது. பரிமேலழகர், இக்குறளில் சொல்லப்படாத ஒன்றை தானாக ஏற்றிச் சொல்லி இதை ஒரு ஆளுவோருக்கு இருக்கவேண்டிய ஒன்றாகக் கூறுகின்றார். “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். உலகம் உயர்ந்தோர் வழிகளாக ஏற்றுக் கொண்டவற்றையே பின்பற்றி வாழுவதே அறிவுடமை என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. இது எல்லோருக்குமே பொருந்துவதாகக் கொள்ளவேண்டும்.

இன்றெனது குறள்:

உலகில் உயர்ந்தோர் வழிசென் றொழுகி
இலங்கு தலேநல் அறிவு.

Ulagil uyarndhOr vazhichen rOzhugi
Ilangu dhalEnal aRivu

2 கருத்துகள்:

  1. திருக்குறளை எளிய முறையில் இரு மொழில் அறிய நல்லதோர் வலைத்தளத்தை தேடினேன். தங்கள் வலைப்பதிவை இன்று கண்டேன். பெரிதும் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன்.

    தங்களின் வலைப்பதிவு கருத்தூறும் ஆக்கம்.

    மிகவும் எளிமையாகவும் விரிவாகவும் ஏழு சொற்களாக பிரித்து பொருளை இரு மொழியில் விளக்கி கூறி இருப்பது அருமை. தங்கள் செயல் தெய்வப் புலவர் திருவள்ளுவரில் தொண்டர் செயலாகவே கருதுகிறேன்.

    தங்கள் தொண்டு மேலும் தொடர விழைகிறேன்.

    என் தமிழில் ஏதேனும் சொல் பொருள் குற்றம் இருப்பின் தயவு கூர்ந்து பொறுத்துக்கொள்ளும்மாறு வேண்டுகிறேன்.

    நன்றி
    பெ. செல்வகணபதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் செல்வகணபதி:

      ஏதோ விளையாட்டுப்போக்காக தொடங்கிய ஒரு பயணம், இன்று வரை இனிதாகப் போய்கொண்டிருக்கிறது. இறைவன் அருள் இருந்தால், இதை குறைவர நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் கருத்துக்களை நீங்கள் நிச்சயமாகத் தெரிவிக்கலாம்!. நன்றி!

      அஷோக் சுப்ரமணியம் (ashoksubra@gmail.com)

      நீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...