29th June 2013
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
(குறள் 430: அறிவுடமை அதிகாரம்)
Transliteration:
aRivuDaiyAr ellA muDaiyAr aRivilAr
ennuDaiya rEnum ilar
aRivuDaiyAr – Wise people
ellAm uDaiyAr – have the fulfillment of everything, though
not wealthy
aRivilAr - Fools
enn uDaiyarEnum – Regardless of how much wealthy they are
ilar – have none and are considered poor
The last verse of this chapter makes a clear-cut distinction between the
wisemen and men of ignorance. Though not measured in terms of riches as
wealthy, wisemen have everything to their avail as their wisdom as the power to
accomplish anything; fools may be rich and wealthy, but highly lack in the
treasure of knowledge, without which, they may not even be able to safeguard
their riches. They are indeed considered impoverished in comparison.
nAlaDiyAr
says, not having finer sensitivity (a product of wisdom) is poverty; having that is huge wealth.
pazhamozhinAnUru says, just like a nude person can not be beautified by jewels,
mere wealth can not make a fool proud.
“People of wisdom, have
plenty of everything, though not by measure
Of wealth; fools, though
rich, are impoverished in knowledge treasure”
தமிழிலே:
அறிவுடையார் - அறிவுள்ளோர்க்கு
எல்லாம் உடையார் - எல்லாம் நிறைந்தவராகவே இருப்பர் (செல்வமேதும் இல்லை
எனினும்)
அறிவிலார் - அறிவற்றோர்
என் உடையரேனும் - எது இருந்தாலும்,
எவ்வளவு செல்வமிகுந்தவராயினும்
இலர் - ஒன்றுமே இல்லாத வறியவர்தாம்.
இவ்வதிகாரத்தின் இறுதி குறளில் அறிவுடையோருக்கும், அறிவிலிகளுக்குமான தெளிவான
வித்தியாசத்தைக் குறிப்பிட்டு நிறைவு செய்கிறார் வள்ளுவர். செல்வச் சிறப்பில்லாவிட்டாலும்,
அறிவுடையோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு, அவர்களது அறிவுடைமையே பெருந்துணையாகவும்,
செல்வமாகவும் இருந்து அவர்களை வாழ்விக்கும். அறிவில்லாதவர்களுக்கு, மூடர்களுக்கு, பெருஞ்செல்வமிருந்தும்
அவர்கள் வறியரே. அவர்கள் செல்வத்தைக்கூட கட்டிக்காக்கும் திறமையில்லாதவர்கள், அவர்கள்
செல்வத்தைத் தொலைக்கவும் செய்வர்.
நாலடியார் பாடலொன்று இதையே, “ நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்”
என்கிறது.. பழமொழிப் பாடலொன்று, இவ்வாறு கூறுகிறது.
“அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட(து) எவனாம்
- பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும்
இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்”
இதன் கருத்து, “ஆடையில்லானை
அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம்”
இன்றெனது குறள்(கள்):
இலரெனினும் உள்ளோர் அறிவுடையோர் பெற்றும்
இலரே அறிவிலி கள்
ilareninum uLLOr
aRivuDaiyOr peRRum
ilarE aRivili gaL
அறிவுடையோர்க் கில்லாமை இல்லை இருந்தும்
அறிவிலார்க் கேதுமில் லை
aRivuDaiyOrk killAmai illai irundhum
aRivilArk kEthumil lai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam