செப்டம்பர் 20, 2012

குறளின் குரல் - 161


20th September, 2012

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
                  (குறள் 152: பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
poRuththal iRappinai endRum adhanai
maRaththal adhaninum nandRu

poRuththal – practicing forbearance, tolerance
iRappinai  - when there is an excess of swerving form virtuous conduct from someone
endRum – always (good)
adhanai – such excess of misconduct
maRaththal – forgetting them, without keeping them in mind, and nurturing ill feelings
adhaninum  -  even better than forbearance
nandRu -  is a good deed

This is good, but that’s better – is a thought expressed for another virtue of “thankfulness” earlier.  The verse “nandRi maRappadhu nandRanRu nandRalladhu andRe maRappadhu nandRu” is similar to the current verse – instead of “thankfulness”, it is said in the context of “forbearance”

When somebody swerves from virtuous conduct, tolerating such excess is a good trait to have, but to forget as such is even better, without harping on the excess and nurturing ill feelings and aversion because of that.

In general we can be forbearing and even be forgiving of other’s misdeeds, but not without pointing out the mistakes. Otherwise they may not even know that they were on the wrong side and and also understand that others know that they were wrong. In either case, there would likely be more wrong doings from the same person. Mistakes must be pointed out and opportunities be given for corrective behavior. When such opportunities are appropriately availed and the erring person self mends, we must forget his wrong doings altogether.

Earlier mistakes should never be the yardstick to assess somebody and paint the person with that taint when working with them again. This is what we must get as the essence from this verse. Without any new opportunities given and assurances obtained of corrective behavior, vain tolerance and forgetting are never advisable.

“Forbearance is good when others err on virtues
  Forgetting is even better virtue than to eschew”

தமிழிலே:
பொறுத்தல் – பொறுமையைக் கடைபிடித்தல்
இறப்பினை – பிறர் செய்யும் அற மீறலை, மிகுதியான தவறினை செய்யும் போது
என்றும் – எப்போதும் (நன்றாம்)
அதனை – அத்தகு அறமீறல்களை, வழுவல்களை
மறத்தல் - நினைவில் கொண்டு, அது நெஞ்சிலே கனன்று கோபமாக வளராமல், மறந்துவிடுதல்
அதனினும் – பொறுத்தலை விடவுமே
நன்று – நல்ல செய்கையாம்.

இது நல்லது, ஆனால் இதைவிட அது நல்லது என்ற பொருளிலே வள்ளுவர் செய்த குறள்களில் இது ஒன்று. உடனடியாக நினவுக்கு வருவது, “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று”. இக்குறளில் அதையே பொறுமையின் மீது ஏற்றிச்சொல்லுகிறார். 

பிறர்செய்யும் அறமீறலை, அவர்களின் செய்யும் மிகையான தவறுகளை பொறுத்துக்கொள்ளுதல் எப்போதுமே ஒரு நல்ல குணமாம். அதைவிட சிறந்தது, அத்தகு அறமீறல்களை, வழுவல்களை நினைந்து, மனதிலே வளர்த்து, அதன்காரணமாக காழ்ப்பு தோன்றாமலிருக்கும்படி, அவற்றை மறந்துவிடுதலேயாகும்.

பொதுவாக பிறர்செய்யும் தவறை மன்னிக்கலாம், பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் தவறைச் சுட்டிக்காட்டாமல் இருந்தால் சிலருக்குத் தாங்கள் செய்த தவறென்ன என்று தெரியாமலும் போகலாம், தவறே இல்லை என்கிற எண்ணமும் ஏற்படலாம். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு, தவறுகளைத் திருத்திக்கொள்ளுவதற்கு வாய்ப்புகள் தரப்படவேண்டும்.  அவ்வாய்ப்புகள் சரிவர பயன்படுத்தி ஒருவர் திருந்தியபின்னர், முன்னரவர் செய்த தவறுகள் மறக்கப்படவேண்டும்.

முன் செய்த தவற்றினை மனதில் கொண்டு ஒருவரை பின்னாளில் எடைபோடவும் கூடாது, அவரிடம் தரப்படும் செயல்களில் அச்சாயம் பூசி நோக்கக்கூடாது. அதைத்தான் இக்குறளிலிருந்து நாம் பெறும் கருத்தாக இருக்கவேண்டும். எவ்வித எதிருறுதியும், திருத்திக்கொள்ளுவதற்க்கான வாய்ப்பையும் தராமல், பெறாமல், வெற்றுப் பொறுமையும், மறத்தலும் மட்டுமே சரியானவையும் அல்ல.

இன்றெனது குறள்:
நன்றாம் பிறர்செய் அறமீறல் தான்பொறுத்தல்
நன்றதனின் முற்றுமறத் தல்

nandRam piRarsei aRamIRal thAnpoRuththal
nandRadhanin mutRumaRath thal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...