செப்டம்பர் 19, 2012

குறளின் குரல் - 160


அதிகாரம் 16: பொறையுடமை (Forbearance/Tolerance)
[This chapeter is about tolerance towards the people that act with high and mighty attitude due to their ignorance, stupidity, arrogance, enemity or other illfeelings]

19th September, 2012
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
                  (குறள் 151:  பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
agazhvAraith thAngum nilampOlath thammai
igazhvArp poRuththal thalai

agazhvAraith – Even those who dig (for their personal gains)
thAngum  - bear and hold them on it
nilampOlath – like the patience of the mother earth
thammai igazhvArp - those that insult us
poRuththal – tolerating them is
thalai – is a must.
  
Most often earth is cited as the very personification of patience, forebearance, as it bears the people that dig, plough, till, excavate, quarry, and mine day in and day out for their personal and selfish gains. This verse suggests that against all insults hurled a person should be patient and display tolerance towards the adversaries like how earth bears its adversaries and it is considered the true virtue too.

A verse in kaliththogai says, “Forebearance is that which bears the people that don’t praise”. Similar thoughts are expressed in nAlaDiyAr, and “pazhamozhi nAnUru”.

Kamban, to show “SItA’s” patience in high light, says compared to her patience, even the earth is not tolerant at all. This imagination is different and challenges the earth as the standard scale of patience.

“ The true virtue of patience is tolerating people that insult 
 Like the earth bearing people that dig selfishly to the hilt”

தமிழிலே:
அகழ்வாரைத் – தன்னை, தங்கள் சுயநலத்துக்காகத் தோண்டி, வெட்டுகிறவரை
தாங்கும் – பொறுத்துக்கொண்டு, அவரைத் தாங்குகிற
நிலம்போலத் – மண்மடந்தை, நிலமகள் போல
தம்மை இகழ்வார்ப் – – ஒருவர் தன்னை இகழ்ந்து, அவமதிப்பவரையும்
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
தலை – முதலாய அறப்பண்பாகும்

பொறுமைக்கு பூமாதேவியை எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கிலுள்ளது. “நிலத்தோரன்ன நலத்தகு பெரும்பொறை” என்கிறது பெருங்கதை. மனிதன் தன்னுடைய சுயநலத் தேவைகளுக்காக நிலத்தை அகழ்வதும், உழுவதும், வெட்டுவதும், தோண்டுவதும், சுரண்டுவதும், தொன்று தொட்டு நடந்துவருவது. உணவுக்காக, தாம் அணியும் அணிகலன்களுக்கான உலோக மற்றும் விலைமதிப்பற்ற கற்களுக்காக, தான் வசிக்கும் இருப்பிடங்களுக்காக என்று பலவித தேவைகளுக்காக இது நடைபெறுகிறது. இருந்தாலும் நிலமானது, தன்னை வெட்டுபவர்களைத் தாங்கிக்கொண்டு, அவர்கள் இவ்வுலகில் வாழ அடித்தளமாக இருக்கிறது. இதை பொறுமையின் வரையரையாகக் கொண்டால், அதேபோல, தம்மை இகழ்ந்து, அவமதிப்பவர்களையும், பொறுத்துக் கொள்ளுதலே ஒருவருக்கு அறப்பண்பாகும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.

கலித்தொகைப்பாடல், இக்குறளின் கருத்தையொட்டி, “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் என்கிறது”. நாலடியார், “தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்பதன்றி” என்கிறது.  பழமொழி நானூற்றுப் பாடல், “சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்” என்கிறது.

நிலத்தைப் பொறுமையின் வரையரையாகக் கொள்வோருள் சற்று வேறுபட்டு, சீதையின் பொறுமையை அதனோடு ஒப்பிட்டு, நிலம்கூட பொறுமையானது இல்லை என்று கூறலாம் என்கிறான் கம்பன் “நிலம் பொறை இலது என, நிமிர்ந்த கற்பினாள்”.  அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினும் பொறுமை உடையள் அந்நிலத்துத் தோன்றிய சீதை என்கிற கம்பனின் கற்பனை உவக்கத்தக்கது.

இன்றெனது குறள்:
தூற்றுவாரைப் தாம்பொறுத்தல் மண்மடந்தை தோண்டுவாரை
ஏற்றுதன்மேல் தாங்குதல் போல்

thUtRuvAraip thAmpoRuththal maNmaDandhai thOnDuvArai
eTruthanmEl thAngudhal pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...