ஆகஸ்ட் 31, 2012

குறளின் குரல் - 141


31st   Aug, 2012

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
                    (குறள் 132:  ஒழுக்கமுடைமை அதிகாரம்)

Transliteration:
parindhOmbi kAkka ozhukkam therindhOmbith
thErinum ahdhE thuNai

parindh(u) Ombi  - with care and understand  (as something to be closely guarded)
kAkka  - preserve, guard
ozhukkam – righteous conduct
therindhu Ombith – learn and understand completely the virtues
thErinum - Even for those who (learn understand the virtues)
ahdhE thuNai – only the righteous conduct is the protection.

Following the righteous conduct with care and without slipping is a must for everyone. It is all the more important for those who have learned all the virtuous codes of righteous conduct to follow them which will come as a big support for them.

In this verse, vaLLuvar underlines the importance of not just having the bookish knowledge of virtuous way of righteous conduct, practicing of the same is of utmost importance. There are people that are very learned of what virtue is or not. But, little would they practice the righteous ways in their own lives. This has been written for them as stern reminder

 “Practice and preserve the righteous conduct with care
  Even those who are learned of the same must not spare”

தமிழிலே:
பரிந்து ஓம்பிக் – மிக்க அக்கறையுடன், அறிந்துகொண்டு
காக்க – காக்கவேண்டும், பழக்கத்தில் கொண்டுவரவேண்டும்
ஒழுக்கம் - ஒழுக்க நெறிகளை!
தெரிந்து ஓம்பித் - கற்கவேண்டிய நெறிகளைக் கற்று,
தேரினும் - இதன் பயன் இதுவென்று உணர்ந்தவர்க்கும்
அஃதே துணை – ஒழுக்க நெறி நிற்றலே உற்ற துணையாம்

ஒருவர் ஒழுக்க நெறிகளை, மிகவும் அக்கறையுடன், குலையாமல் கடைபிடித்து பாதுகாத்து வாழவேண்டும். மிகவும் கற்றுத் தேர்ந்து, ஒழுக்கநெறிகளை அறிந்து, அவற்றால் வரும் இம்மை மறுமைப் பயன்களைத் தெரிந்து அறிந்தார்க்கும், அவ்வறிவின் பயனைவிட, நடைமுறையில் கடைபிடித்தலே உற்ற துணயாகும்.

குறள் ஒழுக்கநெறி வழுவாமையின் கட்டாயத்தைச் சொல்லி, ஏட்டறிவுமட்டுமில்லாமல், கடைபிடிக்கும் உறுதியும் வேண்டுமென்று வலியுறுத்துவதே இக்குறள். சிலர் அற நெறிகளை நன்றாக அறிந்துகொண்டு பிறருக்கு அறிவுறுத்துவர். ஆனால் தம் வாழ்க்கையில் கடைபிடிக்க மாட்டார்கள்.  அவர்களுக்காக எழுதப்பட்ட குறளிது.

இன்றெனது குறள்:
வழுக்கா தொழுகுக நல்லொழுக்கம் – கற்று
ஒழுகினும் நற்றுணை அஃது

ஆகஸ்ட் 30, 2012

குறளின் குரல் - 140


அதிகாரம் 14: ஓழுக்கமுடமை (Right conduct)

30th Aug, 2012

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
                   (குறள் 131: ஒழுக்கமுடைமை அதிகாரம்)

Transliteration:
Ozhukkam vizhuppam tharalAn ozhukkam
Uyirinum Ombapp paDum

Ozhukkam – Being a person of righteous coduct
vizhuppam  - the state of excellence, meritorious (everyone is implied)
tharalAn -  since it gives (excellence, merit)
ozhukkam – that righteous conduct
Uyirinum – more than the life
OmbapppaDum - should be practiced and preserved.

[This chapter on “Right conduct”, according to earlier commentators is, living by the code of conduct meant for each caste and the occupation. In general, right conduct is designed for the common good of various sects, functions of the society, without which the structure of society and its various occupations will not properly function. Every function must have orderliness is the underlying principle]

Today’s verse, the first of this chapter, puts forth a general idea about the right conduct. Since the right conduct gives everybody excellence and brings out merit to them, everyone must protect, more than their own life.

Life is precious for everyone and every effort possible is done to protect that. Since having the right conduct is more precious than that, it should be protected better than one’s own life. There are other works like “aRaneRichchAram” that have the same expressed.

Two alternate Tamil verses written emphasize the thought in two different ways.The first one orders the right conduct and gives reason as to why it must be practiced.  Second one gives the usefulness of right conduct and stresses the same as an advice.

“Protect more than life, the right conduct
  As it provides the excellence and merit”

தமிழிலே:
ஒழுக்கம் - ஒழுக்கமுடைமையானது
விழுப்பந் – சிறப்பினைத் (எல்லோருக்கும் என்பது குறிப்பால்)
தரலான் – தரும் ஆகையால்
ஒழுக்கம் - அவ்வொழுக்கமுடமையானது
உயிரினும் – தன்னுடைய உயிரைவிடவும் கருத்தாகப்
ஓம்பப்படும் – பாதுக்காக்கப்பட வேண்டும்

[ஒழுக்கமுடைமை அதிகாரம், முந்தைய உரையாசிரியர்களின் கருத்துப்படி, ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட குலம், மற்றும் தொழில் சார்ந்த ஒழுங்கு நெறிகளின் படி வாழுதலைப் பற்றியது. ஒழுங்கு என்பது வகுக்கப்பட்ட முறைமையைக் குறித்ததாகும். முறைமை தவறிய எந்தவொரு கட்டமைப்பும், சமூகமானாலுல் தொழிலமைப்பானலும் சரிவர இயங்காது. சுருக்கமாக எவ்வொரு இயக்கத்திலும் ஒரு முறைமையிருந்தால் சீராக இருக்கும்]

இன்றைய குறள் ஒழுக்கமுடைமை பற்றிய பொதுகருத்தை முன்வைக்கிறது. ஒழுக்கமுடைமையில் ஒழுகுவோர் எல்லோருக்குமே அது, சிறப்பைத் தருவதாகும். அதனால் அது ஒவ்வொருவரும் தங்கள் உயிரைவிடவும் அரிதாகக் கருதிப் பாதுகாக்கவேண்டும்.

ஒவ்வொரு உயிருக்குமே, வாழவேண்டும் என்கிற துடிப்பும், அதற்காக தங்கள் உயிருக்கு ஊறு விளக்கும் செய்யாமலிருக்கும் முனைப்பும் உண்டு. அம்முனைப்பை விட ஒழுக்கத்தைக்காக்கும் முனைப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்கிறது இக்குறள்.

அறநெறிச்சாரம் இதே கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறது.
“தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தில் மிக்க உசாத்துணையும் - மான
மழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழும் திறம்”

இன்றைய குறளாக்கங்களில் இதே கருத்தை இருவிதமாகச் சொல்லியுள்ளேன். முதல் குறள் ஒழுக்கம் காத்தலைக் கட்டளையாகவும், அதற்கான காரணமும் சொல்லுகிறது. இரண்டாம் குறள் ஒழுக்கத்தின் பயனைச் சொல்லி, அதனால் அறிவுரையாக அதனைக் காக்க வேண்டும் என்று சொல்கிறது.

இன்றெனது குறள்:

இன்னுயிர் போல்காக்க நல்லொழுக்கம் மேன்மைஇல்
இன்னுயிர்க் கஃதன்றி வேறு
Innuyir pOlkAkka nallozhukkam mEnmai il
Innuyirk kahdhanRi vERu

மேன்மை ஒழுக்கமாம் ஆதலதை இன்னுயிரின்
மேன்மையெனக் காத்தலே நன்று
mEnmai ozhukkamAm  Adaladhai innuyirin
mEnmaiyenak kAththalE nandRu.

ஆகஸ்ட் 29, 2012

குறளின் குரல் - 139

29th  Aug, 2012
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

                         (குறள் 130: அடக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
kadangkAththuk katRaDangal AtruvAn sevvi
aRampArkkum AtRin nuzhaindhu

kadang kAththuk – Controlling the rage and anger
katR(u)  - learning the right virtues to learn
aDangal AtruvAn  - one who is modest and self-restrained
sevvi – the right opportune moment
aRamp Arkkum  -even  the God of virtue will look for
AtRin nuzhaindhu -  to go and be with that person

Learning all the right things to learn, and not succumbing to the anger or desire is a unique combination of virtuous conduct. Though somebody is learned, it is often seen that there is a strain of anger some times in that person. About not getting angry, vaLLuvar has done an entire chapter. Anger is the root cause of all evils is what vaLLuvar says in a later chapter of “anger control” In the same chapter he says that anger is a “killer of who gets angered easily” (sinam ennum sErndAraik kolli).

One who is able to control the anger as well learned and being very poised, the God of virtue will wait for the right opportune moment to go and help them from strife.. The verse should be read as “aRam pArkkum sevvi” instead of the word order given in the verse. “sevvi” here means the opportune moment.

There is a saying in Tamil, “darumam thalai kAkkum” meaning, “the virtue will protect always”. This is what is meant in this verse also. That who tread in virtuous path will invariably be subjected to hardship is what we see in everyday life.  God of virtue will be with them, at the right moment to save them from the trouble. Similar to thought expressed by BharatiyAr “darumaththin vAzhvadhanai sUdhu kavvum, dharumam maRupaDi vellum”.  Those who have excellent virtuous conduct, may face hardship, but the virtue will never let them down at the end.

“Virtue awaits opportunity to help who treads virtuous life,
  Restrains anger, learned, and poised, during times of strife”

தமிழிலே:
கதங்காத்துக் – கடுங்கோபம் தனக்கு வாராது காத்து
கற்று – கற்கவேண்டிய அறவழிகளைக் கற்று
அடங்கல் ஆற்றுவான் – இக்குண நலன்களால் செருக்கு சற்றும் சேராது அடக்கத்துடன் இருப்பவரை
செவ்வி  - தக்க தருணம்
அறம்பார்க்கும் – அறக்கடவுளானது (தக்க தருணத்தைப்) பார்த்திருக்கும்
ஆற்றின் நுழைந்து – அத்தகு குணநலன்களைஉடையவரைத் தான் சென்று அடைவதற்கு.

கல்விபல கற்றுத் தேர்ந்தவர்க்கும், பண்பு நெறிகளுக்கு ஒவ்வாத ஆசை, கோபம் முதலியன இருக்கும். அவற்றுள் வெகுளாமை என்பதைப்பற்றிப் பேச ஒரு அதிகாரத்தையே செய்துள்ளார் வள்ளுவர்.  கோபம் யாரிடத்திலும் கொள்ளாமலிருத்தல் நல்லது, ஏனெனில் அதுவே எல்லா தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்னும் விதமாக, “மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்” என்று கூறுவார். அதுமட்டுமல்லாது, சினத்தை “சேர்ந்தாரைக்கொல்லி” என்று சொல்லி, அது, சினங்கொண்டவரையே இறுதியில் அழிக்கும் என்பார். “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்”

அத்தகையக் கோபமற்று, கற்கவேண்டியவற்றையும் கற்று, அடக்கமெனும் பண்பிலே வாழ்பவருக்கு, அதனால் ஏற்பட்டு விடக்கூடிய செருக்கினையும் அற்றவர்களைச் சென்று அடையக்கூடிய வழியையும், தருணத்தையும், அறக்கடவுள் பார்த்துக்கொண்டிருப்பான் என்று இக்குறளில் கூறுகிறார். “செவ்வி அறம் பார்க்கும்” என்று படிக்காமல், “அறம்பார்க்கும் செவ்வி (தருணம்)” என்று பொருள் கொள்ள வேண்டும்.

தருமம் தலை காக்கும் என்கிற வழக்கொன்று உண்டு. அதைப்போலத்தான் இது. அறக்கடவுள், இத்தகைய பண்பாளருக்கு உதவும் தருணங்களை ஆவலோடு எதிர் நோக்கும். பாரதியின் எழுத்திலே மலர்ந்த “தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்ற கருத்தின் உண்மையை உணர்த்தவே இது. பண்பு நலன் மிக்கவருக்கு வரும் சோதனைகளிலிருந்து, இறுதியில் அவர்களை மீட்டு தருமத்தை நிலை நாட்டுவதே அறக்கடவுளின் செயலாம்.

இன்றெனது குறள்:
கற்றும் அடங்கி வெகுளியிலார் தம்சிறப்பை
உற்றதென கொள்ளும் அறம்

ஆகஸ்ட் 28, 2012

குறளின் குரல் - 138


28th  Aug, 2012


தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
                          (குறள் 127:  அடக்கமுடைமை அதிகாரம்) 

Transliteration:
thIyinAr suTTapuN uLLARum ARAdhE
nAvinAR suTTa vaDu

thIyinAr – with fire
suTTa puN - when someone harms another intentionally or otherwise
uLLARum – though external abrasion marks (scar) may stay, the memory will forget that and heal
ARAdhE – but will not be the case (will remain as a scar)
nAvinAR  - with acrimonious tongue
suTTa  vaDu – somebody hurls hurts to another. Will stay for ever in the mind of affected!

This verse, is again oft-used one, whether the preached is practiced or not, people love to use this as example when they advice others, though most of them have not bothered to look inwards and honestly say, they have practiced the same. But, even the thought that this is a good practice is good enough, we should presume.

With vengeance, to destroy somebody’s mind, with a permanent scar (not as incurable wound), the caustic, cruel words, spoken by anyone to any other person that spew venom and flame, will stay as disgust, hatred in the affected person – Even the wound by the flame, accidental or intended may completely cure not only externally and in the memory also, though may leave the scar.

Hatred brews and breeds hatred. Hatefilled words of causting tongue, brew hatred and mutual aversion of extreme proportions. For the same reason, earlier the verse “yAkAvArAyinum nAkAkka” cautioned about using the tongue inappropriately. “nAladiyAr” and “aRaneRich chAram” have poem expressing a similar thought (Ref. K.V.Jaganathan’s Research Commentary), The beauty of these poems is that anyone can understand with reasonable understanding of Tamizh.

Scar of flames will wither and heal in time inside
That of words of acrimonious tongue will not fade

தீயினாற் – நெருப்பினால்
சுட்டபுண் – ஒருவர் மற்றொருவருக்கு கெட்ட எண்ணத்திலோ, அன்றி தவறுதலாகவோ ஏற்படுத்தும் புண்
உள்ளாறும் – காலப்போக்கில் வெளிப்புறத்தில் வடுவினை விட்டுச் சென்றாலும், உள்ளத்தில் மறக்கப்படும், மன்னிக்கப்படும்.
ஆறாதே – ஆனால், உள்ளத்தில் வெந்த புண்ணாக, ஆறது, இரணமாகவும், வலியாகவும், வெறுப்பாகவும், வன்மமாகவும் நின்று வளரும் தன்மையது
நாவினாற் – ஒருவர்தன்னுடைய நாக்கொண்டு (தீயசொற்களைப் பேசுதல்)
சுட்ட வடு - பிறருக்கு மனச்சிதைவை, நிலைத்த வடுவினை உண்டாக்குதல்

படிப்பது இராமயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற அளவில் நிரம்பப் பயன்படும் குறள் இது. எளிதாக எல்லோரும் எடுத்துக் கையாளும் குறள். ஆனால் எத்தனைப்பேர் இதை உள்ளத்திலுணர்ந்து நடைமுறையில் பயிலுகிறார்கள்? ஆனால், இப்படியிருந்தால் நல்லது என்ற அளவில் உணர்ந்திருந்தால் கூட மகிழ்ச்சிதான்!

மனதில் வன்மத்தோடு, ஒருவரை மனதளவில் சிதைத்து, மாறாத வடுவாக (ஆறாத புண்ணாக அல்ல) ஒருவர் பேசுகிற தீயினும் கொடிய, நெருப்பைக் கக்கும் தீமைதரும் சொற்கள், என்றும் உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பாக, வெறுப்பாக ஆகிவிடும், பாதிக்கப்பட்டவருக்கு. உண்மையான நெருப்பினால் வேண்டுமென்றோ, அல்லது தற்செயாலகவோ ஏற்படுத்தப்பட்ட தீக்காயம் கூட வெளி வடு தங்கினாலும், மனதிலே ஆறிவிடும் பாதிக்கப்பட்டவருக்கும்.  

வன்சொல் வன்மத்தையே வளர்க்கும்.  இது காரணம் பற்றியே, “யாகாவராயினும் நாகாக்க” என்று எச்சரிக்கையாக முன்னரே சொல்லப்பட்டது. நாலடியாரும், அறநெறிச்சாரமும் ஒத்தகருத்திலே பாடல்களைக் கொண்டுள்ளன. (நன்றி: கி.வா.ஜ. ஆய்வு உரை). இப்பாடல்கள் எளிதில் பொருள்கொள்ளாத்தக்க வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம் (அறநெறிச் சாரம் 100)

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து (நாலடியார் 63)

இன்றெனது குறள்:
தீச்சுடினும் ஆறுமப்புண் ஆறா வடுவாகும்
ஏச்சான பேச்சினா லே
thIchcuDinum ArumappuN ARA vaDuvAgum
EchchAna pEchchinAlE
தீச்சுடினும் ஆறுமப்புண் ஆறா வடுவாகும்
தீச்சொலால் பேசினா லோ
thIchcuDinum ArumappuN ARA vaDuvAgum
thIchcholAl pEsinAlO

ஆகஸ்ட் 26, 2012

குறளின் குரல் - 137


26th  Aug, 2012

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
                          (குறள் 127:  அடக்கமுடைமை அதிகாரம்) 

Transliteration:
yAkAvArAyinum – Even if none other faculty is  restrained
nAkAkka – one must certainly keep their tongue in control
kAvAkkAl – if not done,
sOgAppar – that will cause them misery
sollizhukkuppattu – because of the inappropriate speech of theirs

This verse is one of the most used verses as a quote. Among the five senses, tongue is just not an organ of taste of food, but tasteful words too. For other sensory organs, there is no way of expressing the happiness or sadness or other emotions, other than the reactions of the organs as a chemical reaction. But the tongue can express in words every emotion.

By saying good things it can bring happiness all around or by saying otherwise, it can bring harm to others as well to the the person of acidic tongue.

Knowing what, where, why, how to say anything that too in a way it is of use to others is an art. Without such restraint, what use is it to have a tongue? Tamil is a unique language, where we have celebrated a person as for his gift of language and the purpose for which it was used by calling him “ThirunAvukkarasar”.  This it self is a thought not to be found in any other world language. The saint poet even shows his blessings as a rightful pride by saying “my tongue is blessed to utter the word namasivaya. Who can be better than I?

This verse says: One must not say anything that is unfit to be said, and that cause, knowingly or unknowingly harm to others. They will only reap the pains of that “sow” hence utmost restraint must be applied to the tongue.

Restraint the tongue, even if others aren’t, is imperative
Else, face respurcussions of pain and grief, distressive.

தமிழிலே:
யாகாவாராயினும் – எப்புலனை அடக்காவிட்டாலும்
நாகாக்க – ஒருவர் தன்னுடைய நாவையாவது அடக்கிக்கொள்ளவேண்டும் (பேச்சுக்காகி வந்தது)
காவாக்கால் – அப்படி அடக்காவிட்டால்
சோகாப்பர் – துன்பமுற்று, சோகத்தை அடைவர்
சொல்லிழுக்குப் பட்டு- தம்முடைய தவறான, குற்றமுள்ள பேச்சினால்

மிகவும் அதிகமாக பேச்சுவழக்கிலே ஆளப்படுக்கிற குறள்களில் ஒன்று. ஐம்புலன்களின்களிலே “நா” என்பது சுவையறிந்து உண்பதற்கான உறுப்பு மட்டுமில்லை. பேச்சிலும் சுவையைக் கூட்டி பிறருக்கு இன்பத்தை தரக்கூடியது. மற்ற உறுப்புகளுக்கில்லாத சிறப்பு கூடிய உறுப்பு. மற்ற புலன்களால் அறியக்கூடிய இன்பமும் துன்பமும் இத்தகையது என்பதைச் சொல்லக்கூடிய உறுப்பு. நல்லன சொல்லி பிறர்க்கு நலனும், அல்லன சொல்லி அதனால் பிறருக்கும், முடிவிலே தனக்குமே துன்பத்தைத் தரக்கூடிய வல்லமை உடைய உறுப்பு.

சொல்லும் சொல்லறிந்து, பொருளறிந்து, சுவையறிந்து, பயனறிந்து சொல்லாமல் போனால், சொற்களைச் சொல்லும் நாவுக்கு என்ன பயன்? நாவால் நற்றமிழில் நாளும் பாடியவரை திருநாவுக்கரசர் என்று வேறெந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்புப் பெயரால் அழைத்துள்ளோம். வேறெந்த உறுப்புக்கும் இல்லாத சிறப்பு இது, வேறெந்த மொழியும் கொள்ளாத சிந்தனையிது.

நாவுக்கரசர் தன் நா செய்த நல்வினையாலே தனக்கு சிவாயநம என ஓதக்கிடைத்தது என்று பெருமிதமே கொள்கிறார். “நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே  ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற்றேன்எனை ஒப்பவரார்”

சொல்லத்தகாதவற்றையும், பிறருக்கும் அறிந்து அறியாமலும் துன்பத்தை விளைவிக்கும் சொற்களை சொல்கிறவர்கள் அதனால் பின்விளையும் துன்பங்களுக்கு சோகத்தினை அடைவர். அதனால் ஒருவர் தன்நாவை பயனில சொல்லாமல் காப்பாற்ற வேண்டும்.

இன்றெனது குறள்:
நாவடக்கம் கொள்ளார்க்கு தம்சொல்லால் தாமிழிவு -
காவதன்றோ ஆயின் அழகு?

ஆகஸ்ட் 25, 2012

குறளின் குரல் - 136


25th  Aug, 2012

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

            (குறள் 126:  அடக்கமுடைமை அதிகாரம்) 

Transliteration: orumaiyuL AmaipOl aindhaDangal AtRin
ezhumaiyum EmAp puDaiththu
orumaiyuL – in the one birth (meaning the current birth)
AmaipOl – like a tortoise (it can withdraw its entire into its shell when danger sensed)
aindhaDangal – if all five senses are contained when there is a threat to steer them away from virtue
AtRin – if (a person) does
Ezhumaiyum – in all ensuing seven births
EmAppu - glorious life,
uDaiththu - – will prevail for the person

Tortoise, when it senses an imminent danger, automatically withdraws his head and four legs (five external organs outside its shell) into its shell and this instinctive protection and preservation of self is what vaLLuvar alludes in this verse. In this birth, if someone is able to contatin the five sensory organs driven by five senses (KarmendriyAs through GyanendriyAs), when a danger is there to veer them away to non-virtuous path and ways, then the person will have glorious life assured in the subsequent seven births.

There may be a question as to why a tortoise is there as a comparison when containment of senses is compared and the same could have been done with saints and renounced people as they also have successfully conquered senses.

The only possible explanation for such a question is to understand that when self preservation is possible for a tortoise, without the sixth sense of seeing good or bad, it is all the more an incentive for humanbeings to have better controls of their senses.

Control of five senses, as would tortoise draw into shell,
In one birth assures glory in ensuing seven births- it will.

தமிழிலே:
ஒருமையுள் – ஒரு பிறப்பில்
ஆமைபோல் – தனக்கு தீங்கு வரும் போது ஆமையைப் போல தன்னுடைய தலை, நான்கு கால்களையும் தன் கூட்டிலேயே அடக்கிக்கொள்வது போல
ஐந்தடக்கல் – தன்னுடைய ஐம்புலன்களையும் அவற்றுக்குப் புறம்பான தூண்டுதல்கள் வரும்போது அடக்கி
ஆற்றின் – ஒழுகினால்
எழுமையும் – ஏழ் பிறப்பிலும்
ஏமாப்பு- சிறப்பினைத்
உடைத்து – கொண்டதாகும்

ஆமையானது தனக்கு ஆபத்துவரும் என்று உணர்ந்த கணமே தன்னுடைய தலை, மற்றும் நான்கு கால்களை தன்னுடைய கூட்டுக்குள் இழுத்துக்கொண்டு, அடங்கிவிடும். அதேபோன்று மனிதர்களும், இப்பிறவியில் தங்களுடைய ஐம்புலப்பொறிகளுக்கு ஊறு விளைவிக்கும் தீமைகளை உணர்ந்தவுடன் அவற்றை தவறான பாதையில் செல்லாமால் அடக்கி வாழ்வார்களேயானால், அவர்களுக்கு ஏழு பிறப்பிலும் அது சிறப்பினை சேர்ப்பதாக இருக்கும்.

புலனடக்கம் பற்றிய குறளில், ஏன் புலனவா அறுத்த புனிதர்களோடு ஒப்பிடாமல், ஆமையோடு ஐயறிவு ஆமையாலேயே தனக்கு வரும் தீங்கை உணர்முடியுமானால், ஆறறிவு மனிதர்களுக்கு இது எளிதானது என்பதை உணர்த்தவே ஆமையை எடுத்துக்காட்டாகச் சொன்னது.

இன்றெனது குறள்:
கூட்டடங்கும் ஆமையினைப் போல்புலன்கள் தாமடங்கில்
கூட்டிவரும் ஏழ்பிறப்பும் சீர்

ஆகஸ்ட் 24, 2012

எல்லாம் இன்பமயம்…


எல்லாம் இன்பமயம்…

இன்றும் காலை நேரத்தில் மீண்டும் ஸூப்பர் ஸிங்கர் நிகழ்ச்சியின் இல்லை நெகிழ்ச்சியின் தொடர்ச்சி. கௌதம், சுகன்யா, ப்ரகதி என்று மும்முனைபோட்டி, யார் “க்ளாசிகல்” (என்ன செய்வது “செவ்விசை”, சொன்னால் தங்கிலீஷுக்குப் பழகிவிட்ட யாருக்கும் புரிவதில்லை) சுற்றில் கிரீடம் சூட்டிக்கொள்ளப் போகிறவர் என்கிற எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தது நிகழ்ச்சி.

ப்ரகதியின் “எல்லாம் இன்பமயம்”, விஜய் டீ.வி.அரங்கத்தையே இனிமை மயக்கமாக ஆக்கிவிட்டது. திரு. ராஜ்குமார் பாரதி சொன்னது போல இது இருவர் பாடிய பாடல் - மறைந்த திருமதி எம்.எல்.வி அவர்களும் பி.லீலா அவர்களும் பாடியது. மூச்சுவிட இடைவெளி இல்லாமலிருந்தும், குரலில் அநாயாசமாக வேறுபாடுகளைக் காட்டி, மிகவும் பிரமாதப்படுத்திவிட்டார் ப்ரகதி.

சுதா அவர்களின் பாராட்டுச் சொற்கள் உள்ளத்தில் பொங்கிவந்த உவகையை ஏந்தி வந்தவை. வாய்ப்பிருந்தால், ப்ரகதி, ராதா-ஜெயலக்ஷ்மி பாடிய ‘மனமே முருகனின் மயில்வாகனமும்” பாடவேண்டும். அதுவும் ஒரு சோதனைப்பாடல்.

திருமதி சரோஜா சொன்னது போல, ஒரு நல்லபாடலை முதல் நாள் தந்துவிட்டு, மறுநாள், வார்த்தைகள் அழகாக இருந்தாலும், இந்த சுற்றுக்கு ஏற்றது என்று சொல்லமுடியாத பாடலை கௌதம் எடுத்துக்கொண்டது சரியில்லைதான். ஆனால், இதற்கு ஒரு வழிகாட்டுதல் இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது.

திரு உன்னிக்ருஷ்ணன் சொன்னதுபோல, பாடலைப் பொருத்த அளவில், எப்படி உணர்வுபூர்வமாகப்பாடவேண்டுமோ, அப்படியே பாடினார் கௌதம்.. இருந்தாலும்…ப்ச்!

சுகன்யா மிகவும் எதிர்பார்க்கவைப்பார் பொதுவாக. மிகவும் கடினமான பாடல்களை, தலைக்குமேலே கத்தியை வைத்துக்கொண்டு சவாரி செய்வது போலே கடினமான உருட்டல்களையெல்லாம் அநாயாசமாக செய்துவிடுவார். எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு போட்டியாளர்.

இவர்பாடிய “ஏழுசுவரங்களைப்” பற்றியே சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவ்வளவு “க்ளாசிகல் வட்டார வழக்குபடி”, “ஓஸ்தியா” பாடினார். அதே போல் இன்றும் நன்றாகவே பாடினார் இருந்தாலும், என்னசெய்வது? கொஞ்சம் மாற்றுக் குறைவுதான். இன்று “ப்ரகதியின் நாள்!”

இறுதிப்பட்டமும் பரிசும் யாருக்குக்கிடைத்தாலும், இக்குழந்தைகள் எல்லோருமே ஸூப்பர் இசைக்கலைஞர்கள்தான்..

அங்கிருந்த இசை நடுவர்கள் சொல்லாமல் சொன்னது, நல்ல இசைக்கலைஞருக்கு நல்ல இரசிப்புத்தன்மை வேண்டும் என்பதை. அவர்களும் இக்குழந்தைகளோடு சேர்ந்து இசையை நுணுக்கமாக இரசித்ததே ஒரழகு. நேற்று திரு ராஜேஷ் வைத்தியா, கௌதமின் பாடலுக்கு, ஒரு சிலவிநாடிகள், தன்னை இழந்து கலங்கியது ஒரு இரசிக்கத்தக்க நெகிழ்ச்சி என்றால், அதை காமிராவில் பதியவைத்தது கவிதைத்தனமானது.

பாவனா சுற்றுக்கேற்றமாதிரி செவ்விய மொழியிலே தொகுத்து வழங்கினார். மாகாபா (என்ன பேருப்பா இது? பாத்துக்கப்பா! யாராவது மாவுக்கு கால்வாங்கி விடப்போகிறார்கள்!) மட்டும் அவருடைய இயல்பான பேச்சு வழக்கிலே பேசியது சற்று பொருத்தமாக இல்லை. சுற்றுக்கேற்ற மாதிரி அவர்களின் தொகுத்தளிப்பும் இருந்தால்தானே ஸூப்பர்?

அப்பா, அந்த “அஸால்ட்” என்கிற வார்த்தை இந்த நிகழ்ச்சியிலும் வந்துவிட்டது. நித்யஸ்ரீ அவர்கள் ரொம்ப அஸால்டாக சொல்லிவிட்டார்கள் (அவர்கள் சொன்ன பொருளிலேயே!) கொஞ்சம் அகராதியப் புரட்டுங்கப்பா! (கொடுமையாக திடீரென்று தாக்குவதுதான் “அஸால்ட்”). அதேபோல் இந்த “ஜானர்” என்கிற வார்த்தை நிரம்ப அடிபடுகிறது. Genre என்று எழுத்துக்கூட்டப்படும் இச்சொல், ஒரு ஃப்ரெஞ்ச் வேர்ச்சொல். zhahn-ruh  என்று உச்சரிக்கவேண்டும். கொஞ்சம் சொல்லுங்கப்பா யாராவது!

திங்களன்று ஒருவரின் போட்டிப்பயணம் முடியும் கடினமான நாள்..! யாராக இருக்கலாம் என்று ஒரு யூகமிருந்தாலும், பார்ப்போம்!

குறளின் குரல் - 135


24thAug, 2012

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
                         (குறள் 125: அடக்கமுடைமை அதிகாரம்)

Transliteration:
ellArkkum nandRAm paNidhal avaruLLum
selvarkkE selvam thagaiththu

ellArkkum – in general for everyone
nandRAm – a good trait and virtue to have
paNidhal  - is being polite, and self-restrained
avaruLLum – Though good for everyone, especially for
selvarkkE  - those who are wealthy
selvam – considered a better wealth
thagaiththu – qualified for that state (to be considered a better wealth)

Being polite and humble is devoid of self-bloatedness and arrogance that is born out of money, power or glory. If being submissive is added to that virtue, it adds beauty to the beauty; it is the best of the best wealth to possess.

Though this virtue is required for everyone, there is no wonder in people of nothing in general being submissive and polite to serve their gains; but it definitely adds beauty to the wealthy that have everything. We have already seen in the “affable speak” chapter that humility is the most precious jewel that one can wear.

Later in the chapters on “Honor and Character”, the following verses will also talk about humility. The verse in the “Honor” chapter will say, humility is more important when a person grows big in stature (perukkatthu vEnDum paNivu -  பெருக்கத்து வேண்டும் பணிவு).  The chapter on “Character” will say the people of character can change the minds of the enemy army with their humility (பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை – paNidhal adhu chAndRor mAtRArai mAtRum paDai).

Humility is a must have for the entire humanity
But for rich, is none richer than this as a priority

தமிழிலே:
எல்லார்க்கும் – பொதுவாக யாவர்க்குமே
நன்றாம் – நல்ல குணநலனாம்
பணிதல் – பணிவுடனும் அடக்கத்துடனும் இருத்தல்
அவருள்ளும் – எல்லோரும் என்றாலும், குறிப்பாக
செல்வர்க்கே – செல்வந்தர்களுக்கு (அதனால் வரும் பெருமிதமும், ஆணவமும் இன்றி அமையும்போது)
செல்வம் – மற்ற செல்வங்களை விட சிறந்த செல்வமாகக் கருதப்படும்
தகைத்து – தகுதி உடையது.

அடக்கம் என்பது பணம் மற்றும் பதவி, புகழ் இவற்றின் காரணமாக தற்பெருமையும் ஆணவமும் இன்றி அமைதல். அதோடு பணிவு சேர்ந்துகொண்டால் அது அழகுக்கு அழகு சேர்க்கும் அணிபோன்றது, செல்வத்துள் சிறந்த செல்வாமாகும் தன்மையது.

பொதுவாக எல்லோருக்குமே இருக்கவேண்டிய பண்பானாலும், ஒன்றுமே இல்லாதவர்கள் பணிவோடு இருப்பதற்கும், எல்லாம் நிறைந்து இருப்பவர்கள் பணிவோடு இருத்தலுக்கும் வேற்றுமையுண்டு.

முன்னரே கண்ட இனியவை கூறல் அதிகாரத்தில் (குறள் 95) வரும் கீழ்காணும் குறளில் பணிவுடமை அணியாகச் சொல்லப் பட்டிருப்பதைக் காணலாம்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்க
அணியல்ல மற்றுப் பிற.

பின்னர் வரும் குடியியலில் மானம் அதிகாரத்திலும் (குறள் 963), “பெருக்கத்து வேண்டும் பணிவு” என்பார்.  குடியியலிலேயே சான்றாண்மை அதிகாரத்தில் (குறள்: 985) உள்ள குறளில் (ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.)பணிதல் என்பது சான்றோர் தம் பகைவரை, பகைமையிலிருந்து மாற்றும் கருவி என்பார். இன்றும் இரண்டு குறள்கள்

இன்றெனது குறள்(கள்):
பணிவெனும் பண்புடமை யாவர்க்கும் நன்று.
அணியுமாம் செல்வருக் கோ
paNivenum paNbudamai yAvarkkum nandRu
aNiyumAm selvaruk kO

பணிதல் அணியாம் எவர்க்குமாயின் செல்வர்
அணிதகப் பேரணியு மாம்
paNidhal aNiyAm evarkkumAyin selvar
aNithaga pEraNiyu mAm

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...