ஆகஸ்ட் 28, 2012

குறளின் குரல் - 138


28th  Aug, 2012


தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
                          (குறள் 127:  அடக்கமுடைமை அதிகாரம்) 

Transliteration:
thIyinAr suTTapuN uLLARum ARAdhE
nAvinAR suTTa vaDu

thIyinAr – with fire
suTTa puN - when someone harms another intentionally or otherwise
uLLARum – though external abrasion marks (scar) may stay, the memory will forget that and heal
ARAdhE – but will not be the case (will remain as a scar)
nAvinAR  - with acrimonious tongue
suTTa  vaDu – somebody hurls hurts to another. Will stay for ever in the mind of affected!

This verse, is again oft-used one, whether the preached is practiced or not, people love to use this as example when they advice others, though most of them have not bothered to look inwards and honestly say, they have practiced the same. But, even the thought that this is a good practice is good enough, we should presume.

With vengeance, to destroy somebody’s mind, with a permanent scar (not as incurable wound), the caustic, cruel words, spoken by anyone to any other person that spew venom and flame, will stay as disgust, hatred in the affected person – Even the wound by the flame, accidental or intended may completely cure not only externally and in the memory also, though may leave the scar.

Hatred brews and breeds hatred. Hatefilled words of causting tongue, brew hatred and mutual aversion of extreme proportions. For the same reason, earlier the verse “yAkAvArAyinum nAkAkka” cautioned about using the tongue inappropriately. “nAladiyAr” and “aRaneRich chAram” have poem expressing a similar thought (Ref. K.V.Jaganathan’s Research Commentary), The beauty of these poems is that anyone can understand with reasonable understanding of Tamizh.

Scar of flames will wither and heal in time inside
That of words of acrimonious tongue will not fade

தீயினாற் – நெருப்பினால்
சுட்டபுண் – ஒருவர் மற்றொருவருக்கு கெட்ட எண்ணத்திலோ, அன்றி தவறுதலாகவோ ஏற்படுத்தும் புண்
உள்ளாறும் – காலப்போக்கில் வெளிப்புறத்தில் வடுவினை விட்டுச் சென்றாலும், உள்ளத்தில் மறக்கப்படும், மன்னிக்கப்படும்.
ஆறாதே – ஆனால், உள்ளத்தில் வெந்த புண்ணாக, ஆறது, இரணமாகவும், வலியாகவும், வெறுப்பாகவும், வன்மமாகவும் நின்று வளரும் தன்மையது
நாவினாற் – ஒருவர்தன்னுடைய நாக்கொண்டு (தீயசொற்களைப் பேசுதல்)
சுட்ட வடு - பிறருக்கு மனச்சிதைவை, நிலைத்த வடுவினை உண்டாக்குதல்

படிப்பது இராமயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற அளவில் நிரம்பப் பயன்படும் குறள் இது. எளிதாக எல்லோரும் எடுத்துக் கையாளும் குறள். ஆனால் எத்தனைப்பேர் இதை உள்ளத்திலுணர்ந்து நடைமுறையில் பயிலுகிறார்கள்? ஆனால், இப்படியிருந்தால் நல்லது என்ற அளவில் உணர்ந்திருந்தால் கூட மகிழ்ச்சிதான்!

மனதில் வன்மத்தோடு, ஒருவரை மனதளவில் சிதைத்து, மாறாத வடுவாக (ஆறாத புண்ணாக அல்ல) ஒருவர் பேசுகிற தீயினும் கொடிய, நெருப்பைக் கக்கும் தீமைதரும் சொற்கள், என்றும் உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பாக, வெறுப்பாக ஆகிவிடும், பாதிக்கப்பட்டவருக்கு. உண்மையான நெருப்பினால் வேண்டுமென்றோ, அல்லது தற்செயாலகவோ ஏற்படுத்தப்பட்ட தீக்காயம் கூட வெளி வடு தங்கினாலும், மனதிலே ஆறிவிடும் பாதிக்கப்பட்டவருக்கும்.  

வன்சொல் வன்மத்தையே வளர்க்கும்.  இது காரணம் பற்றியே, “யாகாவராயினும் நாகாக்க” என்று எச்சரிக்கையாக முன்னரே சொல்லப்பட்டது. நாலடியாரும், அறநெறிச்சாரமும் ஒத்தகருத்திலே பாடல்களைக் கொண்டுள்ளன. (நன்றி: கி.வா.ஜ. ஆய்வு உரை). இப்பாடல்கள் எளிதில் பொருள்கொள்ளாத்தக்க வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம் (அறநெறிச் சாரம் 100)

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து (நாலடியார் 63)

இன்றெனது குறள்:
தீச்சுடினும் ஆறுமப்புண் ஆறா வடுவாகும்
ஏச்சான பேச்சினா லே
thIchcuDinum ArumappuN ARA vaDuvAgum
EchchAna pEchchinAlE
தீச்சுடினும் ஆறுமப்புண் ஆறா வடுவாகும்
தீச்சொலால் பேசினா லோ
thIchcuDinum ArumappuN ARA vaDuvAgum
thIchcholAl pEsinAlO

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...