ஆகஸ்ட் 29, 2012

குறளின் குரல் - 139

29th  Aug, 2012
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

                         (குறள் 130: அடக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
kadangkAththuk katRaDangal AtruvAn sevvi
aRampArkkum AtRin nuzhaindhu

kadang kAththuk – Controlling the rage and anger
katR(u)  - learning the right virtues to learn
aDangal AtruvAn  - one who is modest and self-restrained
sevvi – the right opportune moment
aRamp Arkkum  -even  the God of virtue will look for
AtRin nuzhaindhu -  to go and be with that person

Learning all the right things to learn, and not succumbing to the anger or desire is a unique combination of virtuous conduct. Though somebody is learned, it is often seen that there is a strain of anger some times in that person. About not getting angry, vaLLuvar has done an entire chapter. Anger is the root cause of all evils is what vaLLuvar says in a later chapter of “anger control” In the same chapter he says that anger is a “killer of who gets angered easily” (sinam ennum sErndAraik kolli).

One who is able to control the anger as well learned and being very poised, the God of virtue will wait for the right opportune moment to go and help them from strife.. The verse should be read as “aRam pArkkum sevvi” instead of the word order given in the verse. “sevvi” here means the opportune moment.

There is a saying in Tamil, “darumam thalai kAkkum” meaning, “the virtue will protect always”. This is what is meant in this verse also. That who tread in virtuous path will invariably be subjected to hardship is what we see in everyday life.  God of virtue will be with them, at the right moment to save them from the trouble. Similar to thought expressed by BharatiyAr “darumaththin vAzhvadhanai sUdhu kavvum, dharumam maRupaDi vellum”.  Those who have excellent virtuous conduct, may face hardship, but the virtue will never let them down at the end.

“Virtue awaits opportunity to help who treads virtuous life,
  Restrains anger, learned, and poised, during times of strife”

தமிழிலே:
கதங்காத்துக் – கடுங்கோபம் தனக்கு வாராது காத்து
கற்று – கற்கவேண்டிய அறவழிகளைக் கற்று
அடங்கல் ஆற்றுவான் – இக்குண நலன்களால் செருக்கு சற்றும் சேராது அடக்கத்துடன் இருப்பவரை
செவ்வி  - தக்க தருணம்
அறம்பார்க்கும் – அறக்கடவுளானது (தக்க தருணத்தைப்) பார்த்திருக்கும்
ஆற்றின் நுழைந்து – அத்தகு குணநலன்களைஉடையவரைத் தான் சென்று அடைவதற்கு.

கல்விபல கற்றுத் தேர்ந்தவர்க்கும், பண்பு நெறிகளுக்கு ஒவ்வாத ஆசை, கோபம் முதலியன இருக்கும். அவற்றுள் வெகுளாமை என்பதைப்பற்றிப் பேச ஒரு அதிகாரத்தையே செய்துள்ளார் வள்ளுவர்.  கோபம் யாரிடத்திலும் கொள்ளாமலிருத்தல் நல்லது, ஏனெனில் அதுவே எல்லா தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்னும் விதமாக, “மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்” என்று கூறுவார். அதுமட்டுமல்லாது, சினத்தை “சேர்ந்தாரைக்கொல்லி” என்று சொல்லி, அது, சினங்கொண்டவரையே இறுதியில் அழிக்கும் என்பார். “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்”

அத்தகையக் கோபமற்று, கற்கவேண்டியவற்றையும் கற்று, அடக்கமெனும் பண்பிலே வாழ்பவருக்கு, அதனால் ஏற்பட்டு விடக்கூடிய செருக்கினையும் அற்றவர்களைச் சென்று அடையக்கூடிய வழியையும், தருணத்தையும், அறக்கடவுள் பார்த்துக்கொண்டிருப்பான் என்று இக்குறளில் கூறுகிறார். “செவ்வி அறம் பார்க்கும்” என்று படிக்காமல், “அறம்பார்க்கும் செவ்வி (தருணம்)” என்று பொருள் கொள்ள வேண்டும்.

தருமம் தலை காக்கும் என்கிற வழக்கொன்று உண்டு. அதைப்போலத்தான் இது. அறக்கடவுள், இத்தகைய பண்பாளருக்கு உதவும் தருணங்களை ஆவலோடு எதிர் நோக்கும். பாரதியின் எழுத்திலே மலர்ந்த “தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்ற கருத்தின் உண்மையை உணர்த்தவே இது. பண்பு நலன் மிக்கவருக்கு வரும் சோதனைகளிலிருந்து, இறுதியில் அவர்களை மீட்டு தருமத்தை நிலை நாட்டுவதே அறக்கடவுளின் செயலாம்.

இன்றெனது குறள்:
கற்றும் அடங்கி வெகுளியிலார் தம்சிறப்பை
உற்றதென கொள்ளும் அறம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...