அதிகாரம் 14: ஓழுக்கமுடமை
(Right conduct)
30th Aug, 2012
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
(குறள் 131: ஒழுக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
Ozhukkam vizhuppam tharalAn ozhukkam
Uyirinum Ombapp paDum
Ozhukkam – Being a person of
righteous coduct
vizhuppam - the state of excellence, meritorious
(everyone is implied)
tharalAn - since it gives (excellence, merit)
ozhukkam – that righteous
conduct
Uyirinum – more than the life
OmbapppaDum -
should be practiced and preserved.
[This
chapter on “Right conduct”, according to earlier commentators is, living by the
code of conduct meant for each caste and the occupation. In general, right
conduct is designed for the common good of various sects, functions of the
society, without which the structure of society and its various occupations
will not properly function. Every function must have orderliness is the
underlying principle]
Today’s verse, the first of this chapter, puts
forth a general idea about the right conduct. Since the right conduct gives
everybody excellence and brings out merit to them, everyone must protect, more
than their own life.
Life is precious for everyone and every effort
possible is done to protect that. Since having the right conduct is more precious
than that, it should be protected better than one’s own life. There are other
works like “aRaneRichchAram” that have the same expressed.
Two alternate Tamil verses written emphasize the
thought in two different ways.The first one orders the right conduct and gives
reason as to why it must be practiced.
Second one gives the usefulness of right conduct and stresses the same
as an advice.
“Protect more than life, the right conduct
As it provides the
excellence and merit”
தமிழிலே:
ஒழுக்கம் - ஒழுக்கமுடைமையானது
விழுப்பந் – சிறப்பினைத் (எல்லோருக்கும் என்பது குறிப்பால்)
தரலான் – தரும் ஆகையால்
ஒழுக்கம் - அவ்வொழுக்கமுடமையானது
உயிரினும் – தன்னுடைய உயிரைவிடவும் கருத்தாகப்
ஓம்பப்படும் – பாதுக்காக்கப்பட வேண்டும்
[ஒழுக்கமுடைமை அதிகாரம், முந்தைய
உரையாசிரியர்களின் கருத்துப்படி, ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட குலம், மற்றும் தொழில்
சார்ந்த ஒழுங்கு நெறிகளின் படி வாழுதலைப் பற்றியது. ஒழுங்கு என்பது வகுக்கப்பட்ட
முறைமையைக் குறித்ததாகும். முறைமை தவறிய எந்தவொரு கட்டமைப்பும், சமூகமானாலுல்
தொழிலமைப்பானலும் சரிவர இயங்காது. சுருக்கமாக எவ்வொரு இயக்கத்திலும் ஒரு
முறைமையிருந்தால் சீராக இருக்கும்]
இன்றைய குறள் ஒழுக்கமுடைமை பற்றிய பொதுகருத்தை
முன்வைக்கிறது. ஒழுக்கமுடைமையில் ஒழுகுவோர் எல்லோருக்குமே அது, சிறப்பைத் தருவதாகும்.
அதனால் அது ஒவ்வொருவரும் தங்கள் உயிரைவிடவும் அரிதாகக் கருதிப் பாதுகாக்கவேண்டும்.
ஒவ்வொரு உயிருக்குமே, வாழவேண்டும் என்கிற துடிப்பும்,
அதற்காக தங்கள் உயிருக்கு ஊறு விளக்கும் செய்யாமலிருக்கும் முனைப்பும் உண்டு.
அம்முனைப்பை விட ஒழுக்கத்தைக்காக்கும் முனைப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்கிறது
இக்குறள்.
அறநெறிச்சாரம் இதே கருத்தை இவ்வாறு
வலியுறுத்துகிறது.
“தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தில் மிக்க உசாத்துணையும் - மான
மழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழும் திறம்”
இன்றைய குறளாக்கங்களில் இதே கருத்தை இருவிதமாகச்
சொல்லியுள்ளேன். முதல் குறள் ஒழுக்கம் காத்தலைக் கட்டளையாகவும், அதற்கான காரணமும்
சொல்லுகிறது. இரண்டாம் குறள் ஒழுக்கத்தின் பயனைச் சொல்லி, அதனால் அறிவுரையாக
அதனைக் காக்க வேண்டும் என்று சொல்கிறது.
இன்றெனது குறள்:
இன்னுயிர் போல்காக்க நல்லொழுக்கம் மேன்மைஇல்
இன்னுயிர்க் கஃதன்றி வேறு
Innuyir
pOlkAkka nallozhukkam mEnmai il
Innuyirk
kahdhanRi vERu
மேன்மை ஒழுக்கமாம் ஆதலதை இன்னுயிரின்
மேன்மையெனக் காத்தலே நன்று
mEnmai
ozhukkamAm Adaladhai innuyirin
mEnmaiyenak
kAththalE nandRu.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam