எல்லாம் இன்பமயம்…
இன்றும்
காலை நேரத்தில் மீண்டும் ஸூப்பர் ஸிங்கர் நிகழ்ச்சியின் இல்லை நெகிழ்ச்சியின் தொடர்ச்சி.
கௌதம், சுகன்யா, ப்ரகதி என்று மும்முனைபோட்டி, யார் “க்ளாசிகல்” (என்ன செய்வது “செவ்விசை”,
சொன்னால் தங்கிலீஷுக்குப் பழகிவிட்ட யாருக்கும் புரிவதில்லை) சுற்றில் கிரீடம் சூட்டிக்கொள்ளப்
போகிறவர் என்கிற எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தது நிகழ்ச்சி.
ப்ரகதியின்
“எல்லாம் இன்பமயம்”, விஜய் டீ.வி.அரங்கத்தையே இனிமை மயக்கமாக ஆக்கிவிட்டது. திரு. ராஜ்குமார்
பாரதி சொன்னது போல இது இருவர் பாடிய பாடல் - மறைந்த திருமதி எம்.எல்.வி அவர்களும் பி.லீலா
அவர்களும் பாடியது. மூச்சுவிட இடைவெளி இல்லாமலிருந்தும், குரலில் அநாயாசமாக வேறுபாடுகளைக்
காட்டி, மிகவும் பிரமாதப்படுத்திவிட்டார் ப்ரகதி.
சுதா
அவர்களின் பாராட்டுச் சொற்கள் உள்ளத்தில் பொங்கிவந்த உவகையை ஏந்தி வந்தவை. வாய்ப்பிருந்தால்,
ப்ரகதி, ராதா-ஜெயலக்ஷ்மி பாடிய ‘மனமே முருகனின் மயில்வாகனமும்” பாடவேண்டும். அதுவும்
ஒரு சோதனைப்பாடல்.
திருமதி
சரோஜா சொன்னது போல, ஒரு நல்லபாடலை முதல் நாள் தந்துவிட்டு, மறுநாள், வார்த்தைகள் அழகாக
இருந்தாலும், இந்த சுற்றுக்கு ஏற்றது என்று சொல்லமுடியாத பாடலை கௌதம் எடுத்துக்கொண்டது
சரியில்லைதான். ஆனால், இதற்கு ஒரு வழிகாட்டுதல் இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது.
திரு
உன்னிக்ருஷ்ணன் சொன்னதுபோல, பாடலைப் பொருத்த அளவில், எப்படி உணர்வுபூர்வமாகப்பாடவேண்டுமோ,
அப்படியே பாடினார் கௌதம்.. இருந்தாலும்…ப்ச்!
சுகன்யா
மிகவும் எதிர்பார்க்கவைப்பார் பொதுவாக. மிகவும் கடினமான பாடல்களை, தலைக்குமேலே கத்தியை
வைத்துக்கொண்டு சவாரி செய்வது போலே கடினமான உருட்டல்களையெல்லாம் அநாயாசமாக செய்துவிடுவார்.
எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு போட்டியாளர்.
இவர்பாடிய
“ஏழுசுவரங்களைப்” பற்றியே சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவ்வளவு “க்ளாசிகல் வட்டார
வழக்குபடி”, “ஓஸ்தியா” பாடினார். அதே போல் இன்றும் நன்றாகவே பாடினார் இருந்தாலும்,
என்னசெய்வது? கொஞ்சம் மாற்றுக் குறைவுதான். இன்று “ப்ரகதியின் நாள்!”
இறுதிப்பட்டமும்
பரிசும் யாருக்குக்கிடைத்தாலும், இக்குழந்தைகள் எல்லோருமே ஸூப்பர் இசைக்கலைஞர்கள்தான்..
அங்கிருந்த
இசை நடுவர்கள் சொல்லாமல் சொன்னது, நல்ல இசைக்கலைஞருக்கு நல்ல இரசிப்புத்தன்மை வேண்டும்
என்பதை. அவர்களும் இக்குழந்தைகளோடு சேர்ந்து இசையை நுணுக்கமாக இரசித்ததே ஒரழகு. நேற்று
திரு ராஜேஷ் வைத்தியா, கௌதமின் பாடலுக்கு, ஒரு சிலவிநாடிகள், தன்னை இழந்து கலங்கியது
ஒரு இரசிக்கத்தக்க நெகிழ்ச்சி என்றால், அதை காமிராவில் பதியவைத்தது கவிதைத்தனமானது.
பாவனா
சுற்றுக்கேற்றமாதிரி செவ்விய மொழியிலே தொகுத்து வழங்கினார். மாகாபா (என்ன பேருப்பா
இது? பாத்துக்கப்பா! யாராவது மாவுக்கு கால்வாங்கி விடப்போகிறார்கள்!) மட்டும் அவருடைய
இயல்பான பேச்சு வழக்கிலே பேசியது சற்று பொருத்தமாக இல்லை. சுற்றுக்கேற்ற மாதிரி அவர்களின்
தொகுத்தளிப்பும் இருந்தால்தானே ஸூப்பர்?
அப்பா,
அந்த “அஸால்ட்” என்கிற வார்த்தை இந்த நிகழ்ச்சியிலும் வந்துவிட்டது. நித்யஸ்ரீ அவர்கள்
ரொம்ப அஸால்டாக சொல்லிவிட்டார்கள் (அவர்கள் சொன்ன பொருளிலேயே!) கொஞ்சம் அகராதியப் புரட்டுங்கப்பா!
(கொடுமையாக திடீரென்று தாக்குவதுதான் “அஸால்ட்”). அதேபோல் இந்த “ஜானர்” என்கிற வார்த்தை
நிரம்ப அடிபடுகிறது. Genre என்று எழுத்துக்கூட்டப்படும் இச்சொல், ஒரு ஃப்ரெஞ்ச்
வேர்ச்சொல். zhahn-ruh என்று உச்சரிக்கவேண்டும். கொஞ்சம் சொல்லுங்கப்பா
யாராவது!
திங்களன்று
ஒருவரின் போட்டிப்பயணம் முடியும் கடினமான நாள்..! யாராக இருக்கலாம் என்று ஒரு யூகமிருந்தாலும்,
பார்ப்போம்!
correct assessment
பதிலளிநீக்கு