செப்டம்பர் 26, 2013

குறளின் குரல் - 526


26th Sep 2013

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
                             (குறள் 519: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transliteration:
vinaikkaN vinaiyuDaiyAn kENmaivE Raga
ninaippAnai nIngun thiru

vinaikkaN – in the work assigned
vinaiyuDaiyAn – skilled operator apt for the assigned work
kENmai – his friendship, relationship
vERaga ninaippAnai – if the administrator mistakes him listening to detractors
nIngum – will leave him
thiru – the wealth

Administrators or people of power who mistake a skilled worker and lose his friendship or relationship because of the envious word from detractors of selfish interests, will lose their wealth as they would find it difficult to relplace such skilled person and build relationship again; the time lost is also money.

The verse says to get a  work done, skill is important and more importantly a relationship with such  skilled workers to get things done successfully. People that listen to detractors to lose such a valuable relationship will only be so in everything they do, because they can’t stand by their own decision and hence will lose their wealth. After all the wealth is in the people that you keep with you, especially such skilled people.

“Wealth will be lost by those in power that heed to detractors
 as they fail in the relationship with skilled workers as a factor”

தமிழிலே:
வினைக்கண் - செய்யும் வினையிலே
வினையுடையான் - கருத்தூன்றி செய்யும் செயல் திறனுடையானுடைய
கேண்மை - நட்பினை, உறவினை
வேறாக நினைப்பானை - சொல்வார் பேச்சைக் கேட்டு தவறாக நினைக்கும் நிர்வாக மேலாண்மையருக்கு
நீங்கும் - அவர்களை விட்டு நீங்கிவிடும்
திரு - செல்வம்

செயல் திறனோடு தனக்கு அளிக்கப்பட்ட வேலையை செய்கின்றவனை அவன் மேல் அழுக்காறுகொண்டு புறம் கூறுவோரின் பேச்சைக்கேட்டு தவறாக நினைத்து நடக்கும் ஆளுவோரையும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவரையும், செல்வமானது நீங்கிவிடும்; ஏனெனில் அவ்வினையைச் செய்ய திறமையுள்ளவர்கள் வேறு கிடைப்பது கடினம்.

தவிரவும், பிறர் கூறும் அழுக்காறு காரணமாக தாம் நம்பி வேலைக்கு அமர்த்தியவரையே வேறாக நினைப்பவர்கள் எடுப்பார் கைப்பிள்ள நிர்வாகத்தினராக இருப்பதால், அவர்கள் ஆக்கம் தரும் செயலேது வெற்றிகரமாகச் செய்யமுடியாது, என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. சென்ற குறளின் கருத்தோடு ஆய்ந்தபின் நம்புதலை மீண்டும் வலியுறுத்தும் குறள்.

இன்றெனது குறள்:
செய்வினை செய்திறத்தார் நட்பினை ஐயுறுதல்
செய்யதிரு நொய்யும் அழிந்து

seivinai seithiraththAr naTpinai aiyuRuthal
seyyathiru noyyum azhindhu

செப்டம்பர் 25, 2013

குறளின் குரல் - 525


25th Sep 2013

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
                             (குறள் 518: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transliteration::
Vinaikkurimai nADiya pinRai avanai
athaRkuriya nAgach cheyal

Vinaikku – People of authority and power, to get their work done
urimai – suitable (right and capable)
nADiya pinRai – after finding such a person and entrusting him,
avanai – that person
athaRku uriyanAgach – empowering him with all that needs to get the job done
cheyal – must be done (empowering)

This verse is about empowering the suitable find to get a job done. It is not only enough to indentify the right person to do a job, but once found, must be empowered to go about the job based on his best judgement and executional style.  Empowering here means, furnishing with the requisite help financially and otherwise.

“After identifying the appropriate person to perform a work
To empower them fully, interference, an authority must shirk”

தமிழிலே:
வினைக்கு - அதிகாரத்தில் இருப்போர் தன் வினை செய்வதற்கு
உரிமை - உரியவனாக
நாடிய பின்றை - ஒருவனை ஆராய்ந்து கண்ட பின்னர்
அவனை - அவனை
அதற்கு உரியனாகச் - அவ்வினைக்கு முற்றிலும் செயலாக்கும் அதிகாரம் உள்ளவனாக
செயல்- ஆக்க வேண்டும்

இக்குறள் ஒருவரை ஒரு வேலை செய்யத் தேர்வு செய்வதோடு மட்டுமல்லாது, அதற்கு மேலும் அதிகாரத்தில் உள்ளோர் செய்ய வேண்டியது யாதென கூறுகிறது.  இவ்வேலைக்கு இவரே உரியர் என்று ஆராய்ந்து தேர்வு செய்துவிட்டு, அவர் வேலையை செய்து முடிக்கும் வரை ஆக்கவழி ஆலோசனைகள் வழங்குதலும், பொதுவாக கண்காணிப்பு மேற்பார்வையும் செய்யலாமே தவிர ஒவ்வொரு கட்டத்திலும் வேலைக்குக் குந்தகம் விளைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது. இதையே அடிக்கருத்தாக இக்குறள் சொல்லுகிறது.

இன்றெனது குறள்:
தேர்ந்தொருவன் செய்யவினை கண்டபின்னர் அவ்வினையில்
சீர்த்தியுறத் தேர்ந்தானைச் செய்

thErndhoruvan seyyavinai kaNDapinnar avvinaiyil
sIrththiyuRath thErndhAnaich chei

செப்டம்பர் 24, 2013

குறளின் குரல் - 524


24th Sep 2013

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
                             (குறள் 517: தெரிந்து வினையாடல் அதிகாரம்)
Transliteration:
idhanai idhanAl ivanmuDikkum enRAindhu
adhanai avankaN viDal

idhanai – this work
idhanAl – using this implement
ivanmuDikkum – this person will finish
enRAindhu – after such analysis and thinking
adhanai – that work
avankaN viDal – Assign to such a person of right abilities

Those that are in power must evaluate who will, with what implement, (how and what method), would complete a work and must entrust the work to such a person – says the verse. Though this has been said in the previous verses, the emphasis here is about the word, “idhanAl” which means both the method and the instruments/gadgets. The phrase “avar kaN viDal” also strogly yet subtly suggests “entrusting”, not interfering in the working methods of the chosen person. Beware that this verse does not say, “not supervising” at all. As far as the working ways for the assigned task, it should be left with the person who knows the job intimately. Nobody prevents a constructive intervention.

A pazhamozhi nAnURu poem, says the same, citing the feeding of salted food for a bull. There is nothing wrong with that, as that would prevent diseases for the bull to serve its master well. It says, because someone is relative or a friend, a job should not be entrusted. It must be entrusted with a person who knows the job well with adequate support. Afterall they would seek the guidance of knowledgeable. Even if they did not, still, the job would be done.

“This work will be done by this person, using this implement,
 Entrust after complete research to a person of skill and ment”

தமிழிலே:
இதனை - இவ் வினையை
இதனால் - இக்கருவி அல்லது வழிமுறையால்
இவன்முடிக்கும் - செய்ய இவனே தக்கவன்
என்றாய்ந்து - என்று ஒருவரைத் தேர்ந்து
அதனை - அச் செயலை
அவன்கண் விடல் - அவரிடத்தில் ஒப்படைத்து விடவேண்டும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரால், எச்செயலை, எவ்வாறு (எக்கருவி கொண்டு, எவ்வழி முறையால்) செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அறிந்து, அத்தகுதி உள்ளவர்களிடத்தில் அச்செயலைச் செய்து முடிக்கும் பொறுப்பினை விட்டுவிடவேண்டும். இதுவே இக்குறளின் கருத்து. முந்தைய குறள்களில் சொல்லப்பட்ட கருத்துதான் என்றாலும், “இதனால்” என்ற சொல் செய்யுங் கருவி, வழிமுறை ஆகிய இரண்டையும் ஒருங்கே குறிப்பதை உணரலாம். “அவர்கண் விடல்: என்றது ஆய்ந்து அறிந்தபின் அவர் செய்ய நம்பி ஒப்படைத்தலைக் குறிக்கும். இதில் நம்புதல் என்பது வேலையின் நேர்த்தியைப் பற்றி மட்டும்தான். செய்பவரைக் குறித்து அல்ல. முன்பு சொல்லப்பட்ட கருத்துக்கு முரணாகச் சொல்லப்படவில்லை.

பழமொழிப் பாடலொன்று,  இவ்வாறு செல்கிறது.

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளா னெனினும்
இழவன் றெருதுண்ட உப்பு.

நமக்கு உற்றான், உறவினை, அன்றி வேண்டாதவன் என்று எண்ணாமல் செய்யவேண்டிய செயலுக்கு உண்டான பொருளை (கருவி, செல்வம்), செயலுக்கு வேண்டிய கல்வியறிவு நிரம்பியவனிடத்தில் செயலை ஒப்படைத்துவிடுக. அவன் செயல் செய்தல் பொருட்டு மற்ற வல்லுனர்களிடம் கேட்காமல் போனாலும்  குற்றமில்லை; காரியத்தைக் கருத்தாக முடித்துவிடுவார். காளை உப்பு உண்டாலும் பயன் கொடாது போகாது இல்லையா. கொள்ளுக்கு உப்பிட்டுக் கொடுத்தால், காளை நோயின்றி தலைவனுக்கு வேலைசெய்யும் என்பதை இதில் கூறப்பட்டுள்ள பழமொழி கூறுகிறது.

இன்றெனது குறள்:

எவ்வினையை எவ்வழியால் யார்செய்கும் என்றாய்ந்து
அவ்வினையை அவ்வாற்றான் ஆற்று

evvinaiyai evvazhiyAl yArseigum enRAindhu
avvinaiyai avvARRAn ARRu

செப்டம்பர் 23, 2013

குறளின் குரல் - 523


23rd Sep 2013

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
                             (குறள் 516: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transliteration:
seivAnai nADi vinainADik kAlaththODu
eidha uNarndhu seyal

seivAnai nADi – Making sure that this person would be able to complete the work,
vinainADik – making sure that the work is worth pursuing and doing,
kAlaththODu eidha – Looking for the appropriate time to do the work
uNarndhu – understanding the above factors
seyal – must do the work

This verse expresses a thought similar to a verse in “Knowing the strength” chapter seen earlier.  The verse “vinai valiyum, than valiyum” talks about knowing the nature and complexity of a job, before venturing to do it, in addition to people that are competitors as well as supporting in the endeavor. 

The current verse talks about how to get a work done. One must ponder over who would be able to successfuly do the work, then if the work is worth doing in the first place and if it is, what would be the appropriate time to get the work done before doing the job.This verse is a preamble to the following verse which focuse more on the person who is entrusted the job.

“Know the person to do the work, ascertain the work is worth doing
 And do it at the opportune time, understanding the task awaiting”

தமிழிலே:
செய்வானை நாடி - இவன் இவ்வினையை செய்து முடிக்கத் தகுந்தவன் என்று ஆராய்ந்து
வினைநாடிக் - இச் செயல் செய்யத் தக்கவொன்று என்று ஆராய்ந்து
காலத்தோடு எய்த - செய்யும் காலத்தோடு அச்செயல் பொருந்துவதாக இருப்பதையும்
உணர்ந்து - உணர்ந்தே
செயல் - ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் பார்க்கப்பட்ட “வினை வலியும், தன் வலியும்.. “ என்ற குறளின் கருத்துக்கும் இயைந்து வருவதைப் பார்க்கலாம்.  ஒரு வினையின் தன்மை, அதை வெற்றிகரமாக செய்து முடிக்க தனக்கு இருக்க வேண்டிய ஆற்றல் இவற்றை நாடி ஒருவன் வினையிலே இறங்க வேண்டும். அவற்றோடு மாற்றாருடைய ஆற்றலும், தனக்குத் துணையாக இருப்பவரது ஆற்றலையும் சீர் தூக்கிச் செய்யவேண்டுமென்றது அக்குறள்.

இங்கு பிறரால் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எவ்வாறு செய்து முடிவிக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.  இவனால் இவ்வினை செய்து முடிக்கப்படும் என்று தெளிந்து, செய்யும் வினையும் செய்யப்படவேண்டியதென்று தெளிந்து, அதை செய்யத்தக்க காலத்தையும் கருதி, தகுந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும். அடுத்ததாக வரும் குறள் வினை செய்வோனைக் குறித்து முழுவதுமாகக் கூறும். அதனுடைய முன்னுறை கருத்து இங்கு வைக்கப்படுகிறது.

இன்றெனது குறள்:
ஆற்றுவோன் ஆற்றுவினை ஆற்றுநேரம் ஆய்ந்தொருவர்
ஆற்றுக ஆற்றும் வினை

ARRuvOn ARRuvinai ARRunEram Ayndhoruvar
ARRuga ARRum vinai

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...