23rd Sep 2013
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
(குறள் 516: தெரிந்து வினையாடல் அதிகாரம்)
Transliteration:
seivAnai nADi vinainADik kAlaththODu
eidha uNarndhu seyal
seivAnai nADi – Making sure that this person would be able
to complete the work,
vinainADik – making sure that the work is worth pursuing and
doing,
kAlaththODu eidha – Looking for the appropriate time to
do the work
uNarndhu – understanding the above factors
seyal – must do the work
This verse expresses a thought similar to a verse in “Knowing the
strength” chapter seen earlier. The
verse “vinai valiyum, than valiyum” talks about knowing the nature and
complexity of a job, before venturing to do it, in addition to people that are
competitors as well as supporting in the endeavor.
The current verse talks about how to get a work done. One must ponder
over who would be able to successfuly do the work, then if the work is worth
doing in the first place and if it is, what would be the appropriate time to
get the work done before doing the job.This verse is a preamble to the
following verse which focuse more on the person who is entrusted the job.
“Know the person to do the work, ascertain the
work is worth doing
And do
it at the opportune time, understanding the task awaiting”
தமிழிலே:
செய்வானை நாடி - இவன் இவ்வினையை செய்து முடிக்கத் தகுந்தவன் என்று
ஆராய்ந்து
வினைநாடிக் - இச் செயல் செய்யத் தக்கவொன்று என்று ஆராய்ந்து
காலத்தோடு எய்த - செய்யும் காலத்தோடு அச்செயல் பொருந்துவதாக இருப்பதையும்
உணர்ந்து - உணர்ந்தே
செயல் - ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில்
பார்க்கப்பட்ட “வினை வலியும், தன் வலியும்.. “ என்ற குறளின் கருத்துக்கும் இயைந்து
வருவதைப் பார்க்கலாம். ஒரு வினையின் தன்மை,
அதை வெற்றிகரமாக செய்து முடிக்க தனக்கு இருக்க வேண்டிய ஆற்றல் இவற்றை நாடி ஒருவன் வினையிலே
இறங்க வேண்டும். அவற்றோடு மாற்றாருடைய ஆற்றலும், தனக்குத் துணையாக இருப்பவரது ஆற்றலையும்
சீர் தூக்கிச் செய்யவேண்டுமென்றது அக்குறள்.
இங்கு பிறரால் செய்து
முடிக்க வேண்டிய வேலைகளை எவ்வாறு செய்து முடிவிக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இவனால் இவ்வினை செய்து முடிக்கப்படும் என்று தெளிந்து,
செய்யும் வினையும் செய்யப்படவேண்டியதென்று தெளிந்து, அதை செய்யத்தக்க காலத்தையும் கருதி,
தகுந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும். அடுத்ததாக வரும் குறள் வினை செய்வோனைக்
குறித்து முழுவதுமாகக் கூறும். அதனுடைய முன்னுறை கருத்து இங்கு வைக்கப்படுகிறது.
இன்றெனது குறள்:
ஆற்றுவோன் ஆற்றுவினை ஆற்றுநேரம்
ஆய்ந்தொருவர்
ஆற்றுக ஆற்றும் வினை
ARRuvOn ARRuvinai ARRunEram Ayndhoruvar
ARRuga ARRum vinai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam