22nd Sep 2013
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
(குறள் 515: தெரிந்து வினையாடல் அதிகாரம்)
Transliteration:
aRindhARRich seykiRpARku allAl vinaithAn
siRandhAnenRu EvaRpAR RanRu
aRindh(u) ARRich – knowing how to do, facing whatever
obstacles enroute
seykiRpARku allAl – but for those that can successfully do a
deed
vinaithAn- even the deed too
siRandhAnenRu – this person is our favorite and should be
hired because of it
EvaR pARRanRu – should allow to work on
This verse says,
even a work would not allow a person, regardless of who wants the job done, and
who is employed to get it done, if the person selected does not have the
intellect and the capability to get it done. The construction of this verse is
slightly confusing to many commentators, which is amply apparent reading them.
How would a “deed”
not allow somebody to “do” it? It is the nature and the complexity of the deed
that would prevent an unsuitable person to do it successfully regardless of how
favoritism has been applied in the process of selecting the person to do it. A
deed is not going to become simpler or difficult because of the person selected
to get it done, by someone.
The emphasis of the
verse is this: With the bias of favoritism, and not considering the complexity
of deed in hand, an employer should not employ somebody who is best known to
them, driven by the bias of favoritism. This would tatamount to assuring
failure of the intended result. Where the public interest lies this is even a
gross injustice, which is seen everyday in the circles of authority even today.
“Never entrust a deed to someone unless is
known for the intellect
To
perform, because he is best known to self; he might not be a fit”
தமிழிலே:
அறிந்து ஆற்றிச் - செய்யும் வினைக்கான வழிகளை அறிந்து, இடையூறுகளைக்
கடந்து,
செய்கிற்பாற்கு அல்லால் - அவற்றைச் செய்து நடத்துகிறவர்க்கு அல்லாமல்
வினைதான் - செய்யும் செயலே கூட
சிறந்தானென்று - இவன் நம்மைச் சேர்ந்தவன்,
என்று ஒருவர், தனக்கு வேண்டியவரை
ஏவற் பாற்றன்று - ஒரு வேலயிலே ஈடுபட அனுமதிக்காது.
இக்குறள் செய்கிறவர், பணியமர்த்துகிறவர் இவர்களையும் கடந்து, செய்யும் பணியேகூட,
வேண்டியவர் என்று திறமையில்லாத ஒருவரை தன்னைச் செய்ய அனுமதிக்காது என்கிறது. இக்குறளின்
அமைப்பு உரையாசிரியர்களைச் சிறிது குழப்பியிருப்பது தெரிகிறது.
ஒருவினை எப்படி, தன்னைச் செய்பவரை அனுமதிக்காது? அதை ஆற்றும் திறமை இல்லாதவராயிருந்தால்,
வினையின் தன்மை, இவர் தம்மைச் செய்யச் சொன்னவருக்கு மிகவும் வேண்டியவர் என்று தன்னை
எளிமையாக ஆக்கிக் கொள்ளப்போவதில்லை. வினையின் தன்மை அது உள்ளவாரே இருக்கும். பணியமர்த்துபவரின்
மனப்போக்குக்குக்கு ஏற்றவாறு, அவருக்குப் பிடித்தவர் தன்னைச் செய்கின்றாரே என்று, தன்னை
எளிமையாகவோ, அல்லது கடினமாகவோ ஆக்கிக்கொள்ளாது.
குறள் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான். பணியமர்த்துபவர், தான் சிறந்தவர் என்று
கருதும், தனக்கு வேண்டியவர் ஒருவரை பணியின் தன்மை கருதாது பணியமர்த்தகூடாது. அப்பணியின்
தன்மையினால் அமர்த்தப்பட்டவரால் அதைச் சரியாகச் செய்யமுடியாது. பொதுநலம் இருக்கும்
பணிகளில் இது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட. இதை இன்றும் அதிகாரத்தைக்
கையில் கொண்டவர்கள் இடத்தில் காணலாம்.
இன்றெனது குறள்:
தேர்ந்தோரைத் தேராமல் எவ்வினையும்
ஏவாதீர்
சேர்ந்தோனென் றெண்ணியொரு வர்க்கு
thErndhOraith
thErAmal evvinaiyum EvAdhIr
sErndhOnen
ReNNioru varkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam