செப்டம்பர் 21, 2013

குறளின் குரல் - 521


21st Sep 2013

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
                             (குறள் 514: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transliteration:
enaivagaiyAn thERiyak kaNNum vinaivagaiyAn
vERAgum mAndhar palar

enaivagaiyAn – however much scrutiny is applied
thERiyak kaNNum – for suitability,  to hire a person for specific task
vinaivagaiyAn – when the person performs the duty
vERAgum – it would be not up to the expected level of calibre
mAndhar palar – for many people

However much carefully scrutinize people for a task, many a times, the performance of the selected would be far below than expected levels, for many. It is common. This observation is made with an intention to caution the people that hire. There are many façade operators that would fake their capabilities  (in current day context resume-hypers) and would show the best front to the potential employers. However careful, inevitably many among selected would be bad. Hence the people incharge of hiring should apply extra caution to minimize and reduce the number of such bad hires.

What the verse also implies is, people that employ should keep an alternative plans and course of action in getting people given the above reality. That would be a needed skill to get a task done successfully.

“Though tested completely to assign a task entrusting
Many may not function and miserably fail disappointing”

தமிழிலே:
எனைவகையான் - எவ்வாறு ஆராய்ந்து
தேறியக் கண்ணும் - ஒருவரை பணிக்கு ஏற்றவர் என்று தெளிந்தபின்னரும்
வினைவகையான் - அவர் பணியாற்றும் போது, செயற்பாட்டில்
வேறாகும் - தேர்வு செய்தபோது அளவில்லாமல், பணியிலே திறமைக் குறைவை காட்டுவர்
மாந்தர் பலர் - பலரும்

எத்துணை ஆராய்ந்து ஒருவரை குறிப்பிட்ட பணிக்குத் தேர்வு செய்தாலும், செயலாக்கத்திலே, பலருக்கும் அவர்கள் வேலை செய்யும் நேர்த்தி குறைசொல்லத் தக்க வகையிலேயே  இருக்கும். போலியான திறமையை வெளிக்காட்டி, பணிக்கு அமர வருவோர் பலரும் உள்ளனர். வேலைக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இவற்றையும் மனதில் கொள்ளவேண்டும். இதற்கு ஏற்றவாறு மாற்று திட்டத்தையும், பணி நிறைவேற்று முறையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே இக்குறளின் உள்ளுரைப் பொருளாக இருக்கமுடியும்.

இன்றெனது குறள்:
எத்தனைத்தான் ஆய்ந்துதேர்ந்தும் வேலையை ஏமாற்றும்
மெத்தனத்தில் செய்வோர் பலர்

eththanaiththAn AyndhythErndhum vElaiyai EmARRum
meththanaththil seivOr palar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...