செப்டம்பர் 20, 2013

குறளின் குரல் - 520


20th Sep 2013

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
                             (குறள் 513: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transiliteration:
anbaRivu thERRam avAvinmai innAngum
nanguDaiyAn kaTTE theLivu

anb(u) – love for the work and the people for whom the work is done
aRivu – sharp intellect to get the job done well
thERRam – resolve to get the job done against all odds
avAvinmai – desireless frame of mind
innAngum – the above four attributes
nang(u) – in right measure
uDaiyAnkaTTE – that who has them
theLivu – is the fit for the job!

This verse lists four attributes required of a person to be selected for any job.  They are:  love for the job done or for whom it is done; sharp intellect to get the job done; tenacity to get the job done, regardless of what obstacles may arise; desire free mind (doing the duty without expecting anything in return). Only persons with these attributes should be selected and trusted to do any work. When such persons are entrusted, there need not be any doubt that they job will be done.

“Love, Intellect, tenacity and desireless mindset
 the four attributes in a workmen needed to entrust”

தமிழிலே:
அன்(பு) - செய்யும் செயலில், எதற்காக, யாருக்காகச் செய்கிறோமோ அவற்றோடு/அவரிடம் நேயம்
அறிவு - கூர்த்த மதி (ஆராய்ந்து தெள்ளிய முடிவு எடுக்கும் அறிவு)
தேற்றம்  - நெஞ்சில் உரம் (எத்துணை இடையூறுகள் வந்தாலும் முடிக்கும் ஆற்றல்)
அவாவின்மை - பொருள்களில் பற்றும் விழைவும் இன்மை
இந்நான்கும் - ஆகிய இவை நான்கும்
நன்கு - நன்றாக
உடையான்கட்டே - உள்ளவர் கண்ணே
தெளிவு - பணிசெய்யும் திறனுண்டு

இக்குறள் ஒரு பணி செய்வதற்கான தகுந்தவரை தேர்வு செய்ய நான்கு பண்புகளை அடிப்படையாகச் சொல்கிறது. அவையாவன, செய்யும் செயலை எதற்காகச் செய்கிறோமோ, யாருக்காகச் செய்கிறோமோ, அதனிடம், அவரிடம் நேயம் இருக்கவேண்டும்.  செயலைச் செய்துமுடிக்க கூர்த்த மதியும் வேண்டும். செயலைச் செய்யுங்கால் எத்துணை இடையூறுகள் வந்தாலும் அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். தவிர செய்யும் செயலை பொருள்களின் மீது ஆசையினால் அல்லது விளையும் பலனைக் கருதிச் செய்யாமல் இருக்க வேண்டும். இந்நான்கும் அமைந்தார் கண்ணே செயலை முடிக்க ஒப்புவிக்கவேண்டும்.

இன்றெனது குறள்:

நேயமும் ஞானமும் நெஞ்சுரத்தோ டாசையின்மை
ஆயநாலும் உற்றார்கண் தேர்வு

nEyamum njAnamum nenjuraththO dAsaiyinmai
AyanAlum uRRArkaN thErvu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...