19th Sep 2013
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
(குறள் 512: தெரிந்து வினையாடல் அதிகாரம்)
Transliteration:
vAri perukki vaLampaDuhthu uRRavai
ArAyvAn seiga vinai
vAri perukki – finding ways to make wealth
vaLampaDuhthu – by using those ways, building wealth
uRRavai ArAyvAn – deeply looking and understanding into
obstacles in that course
seiga vinai – one who can remove those must do work
Who is capable of
doing any work? One who finds ways of building wealth, expanding those ways,
building wealth using those ways, finding and removing obstacles during the
course of doing the work, is the one who is capable of doing a work..
This we can
understand in the context of a company. To build wealth for a company is a
challenging, difficult task. A worker must find ways of sales opportunities and
build a sales pipe line and constanly work at it to expand and build on that
sales pipeline of prospective sales, clients.
The next daunting
and challenging task is in making a percentage of that a sales pipeline, a
reality, using the built-up sales pipeline.
In the course of
this process, there may be many onstacles. A watchful worker would continually
analyze these obstacles that come from different corners, (enemies, business
competition, sometimes friends and other conditions such as market movements,
economic climate etc.) and do the needful as and when a corrective action is
needed.
Only such capable
persons should undertake a challenging task to work on. Though the intensity of
the verse is not as explained here, it is to be surmised so.
“Expanding ways to build wealth, and building
wealth on such,
Resolving obstacles enroute – is the workman
desired much”
தமிழிலே:
வாரி பெருக்கி - பொருளாக்கும் வழிகளை தேடிப் பெருக்கி
வளம்படுத்து - அவற்றால் மேலும் செல்வ வளத்தை வளப்படுத்தி
உற்றவை ஆராய்வான் - ஆக்கும் வழியில் இருக்கும் இடையூறுகளை நன்காராய்ந்து
செய்க வினை - அவற்றை நீக்கி செய்ய வல்லவனே வினைகளைச் செய்யவேண்டும்
வினை செய்ய வல்லவன் யார்?
செல்வம் வரும் வழிகளை நன்கு ஆராய்ந்து அவற்றைப் விரிவாக்கிக்கொண்டு, அவற்றால் மேலும்
செல்வவளத்தை கூட்டி, அவ்வாறு செய்யும் போது வரும் இடையூறுகளை கண்டறிந்து களைய வல்லவர்களே
வினையாற்ற வேண்டும்.
செல்வம் வரும் வழிகளைக் காண்பது
ஒரு சவாலான செயல். இது ஒரு நிறுவனத்தில், எங்கெல்லாம்
நமது பொருள்களை விற்கலாம் என்று விற்பனை சாத்தியமுள்ள வாங்குபவர்கள் அல்லது வாங்குமிடங்களின்
வரிசையை உருவாக்கி வளர்ப்பது.
அவற்றைக் கொண்டு வருமானத்தைப்
பெருக்குவது, அந்த விற்பனை சாத்தியக்கூறுகளை கற்பனையாக இல்லாமல், உண்மை விற்பனைகளாக
ஆக்குவது.
இடையூறுகளாக எவை வருமோ அவற்றை
ஆராய்வது, ஒரு தொடரும் வேலைதான். இவை, போட்டியாளர்கள், நண்பர்கள், தெரிந்த அல்லது தெரியாத
வர்த்தகப் பகைவர்கள், வர்த்தக நிலவரம், இவற்றை எப்போதுமே ஆராய்வது. வினைகளாற்றுபவர்கள்
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வினையாற்ற வேண்டும்.
இன்றெனது குறள்:
பொருள்செய் வழிபோற்றி பொங்கவைத்து
பொன்ற
வருந்தடை நீக்கிச்செய் வீர்
poruLsei vazhipORRi
pongavaiththu ponRa
varunthaDai nIkkichey
vIr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam