செப்டம்பர் 18, 2013

குறளின் குரல் - 518


52: (Testing and entrusting deeds - தெரிந்து வினையாடல்)

[After the chapter on testing and selecting appropriate personnel for any deed, in this chapter vaLLuvar discusses a similar, aligned subject. Not only it is important to select people testing their ability, loyalty, integrity, but it is important to know who to trust with what which. Before entrusting a job a person must be selected based on many how’s; how capable he or she is to evaluate the good and bad coming out of it; how they can expand the scope and do more; how dispassionate (nishkamya karma); how loving they are of the deed as well the person the deed will benefit; how knowledgeable; how resolute under hard conditions; how sensitive they are to the timing of the deed done and so many other factors.]

18th Sep 2013

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
                             (குறள் 511: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transliteration:
Nanmaiyum thImaiyum nADi nalampurindha
thanmaiyAn ALap paDum

Nanmaiyum – the good that may come out of (because of the work done)
thImaiyum – and likewise the bad that may come out
nADi – one must weigh and
nalampurindha – that which does the good ultimately (the deeds)
thanmaiyAn – by their nature
ALappaDum – will be done (by who? – those incharge of deeds)

A person of responsility, to get a job done successfully, will evaluate the good and bad that will result out of the undertaken deeds and do only the deeds that will bring forth good.

A pazhamozhi nAnUru poem has expressed a similar thought. A king must evaluate the good and bad in conformance with books on ethics; like two bulls jointly pull a cart without each going in its own path or direction, they must consult with the learned ministers to function properly.

A similar thought is expressed in Kamba Ramayanam, Mahendra parvatha episode where JamabhavAn (the bear minister of SugreevA) talks to Hanuman about his own strengths in these words. He says, that Hanuman can evaluate between good and bad, and do only good that can come out.  Also he is capable of doing the undertaken deeds, courageously and successfully.

“The good and bad that come out of deeds be considered;
 and those that yield ultimate good will be done, decided”

தமிழிலே:
நன்மையும் - விளையும் நல்லனவும் (செய்யும் வினைகளால்)
தீமையும் - தீமைகளையும்
நாடி - தேர்ந்து
நலம்புரிந்த - எவை நல்லவற்றைச் செய்யுமோ
தன்மையான் - அந்த தன்மையைக் கொண்டு
ஆளப்படும் - வினைகள் செய்யப்படும் (யாரால்? - வினைகளுக்கு பொறுப்பானவர்களால்)

செய்யும் வினைகளினால் விளையக்கூடிய நன்மை தீமைகள் ஆராய்ந்து, எவற்றால் நன்மை விளைவதுறுதியோ அவையே செய்யப்படும், ஆளுவோரால், அவ்வினைகளை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பில் இருப்பவர்களால்.

பழமொழி நானூற்றுப் பாடலொன்று இக்கருத்தை ஒட்டியது, இவ்வாறு செல்கிறது.

நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்

நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்

வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்

புல்லம் புறம்புல்லு மாறு.

நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து இரண்டு காளைகள் ஒன்றுகொன்று முரண்படாமல், ஒன்றாக சேர்ந்து ஒரு வண்டியை இழுப்பதைபோல, அரசனும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து செயலாற்றினால் செய்யும் வினைகள் செம்மையாகும் என்ற கருத்தைக் கூறுகிறது இப்பாடல்

கம்பராமாயணம் மகேந்திரப்படலப் பாடல் ஒன்று, ஜாம்பவான் அனுமனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.

நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர்; காரியம் நீரே துணிவுற்றீர்;
வெல்லவும் வல்லீர்;

நல்லனமட்டுமன்றித் தீயவற்றையும் நாடி, குற்றம் தீரும்வரையில் தீர்வு
கூறும் திறம் அனுமனிடம் உண்டு; தவிர செயலை செய்யும் துணிவும், வெற்றியுடன் முடிக்கும் வல்லமையும் உடையவன் அனுமன் என்று ஜாம்பவான் வாய்மொழியாக அனுமனிடம் வீரமும் விவேகமும் ஒருங்கே இருந்ததைச் சொல்லுகிறார் கம்பர்.

இன்றெனது குறள்:

நன்காய்ந்து நன்மையினை நல்குவினை நாடவேண்டும்
நன்மையும் தீமையும் தேர்ந்து

nangAindhu nanmaiyinal nalguvinai nADavENDum
nanmaiyum thImaiyum thErndhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...