17th Sep 2013
தேரான்
தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
(குறள் 510: தெரிந்து தெளிதல் அதிகாரம்)
Transliteration:
thERan theLivum theLindhAnkaN aiyuravum
thIra iDumbaith tharum
thERan – not completely knowing by testing
theLivum – placing trust on someone
theLindhAnkaN
– after selecting someone for a work
aiyuravum – doubting (their ability, sincerity, integrity
etc.)
thIra – never ending
iDumbaith – misery and disaster
tharum – will bring
Without completely
knowing about a person, selecting him for a work and after selecting, doubting
somebody on capability and sincerity would end up an employer in endless
hardship and destruction. This is what the verse says.
This verse is a
continuation of thought from the previous verse. Last verse also insisted that
without knowing, testing somebody we should not select for a work. Once
selected, trust must be placed to get the work done. Here in this verse, vaLLuvar says, not doing
either as said in previous verse would only lead to never ending disaster, to
the person who does not do so.
Though inferable,
Parimelazhagar’s commentary makes is amply clear. After selecting someone,
doubting them on their integrity, ability would lead only the employed person
to lose confidence in the work as well as the employer to affect the work and
efficiency of function. Sometimes, it would end up making connections with
opponents to work against also. Either way, it is detrimental.
“ Not testing before selecting and doubting
after
Will
only bring an endless misery and disaster”
தமிழிலே:
தேரான் - ஒருவரைப் பற்றி நன்காராய்ந்து தெரிந்து கொள்ளாமல்
தெளிவும் - அவரை ஒரு பணிக்கு அமர்த்தலும்
தெளிந்தான்கண் - ஆராய்ந்து தெளிந்து, ஒருவரைப் பணிக்கு அமர்த்தியபின்
ஐயுறவும் - அவருடைய பணிசெய்யும் ஆற்றலில் ஐயம் கொள்ளுதலும்
தீரா - நீங்காத
இடும்பைத் - துன்பத்தையே
தரும் - கொண்டுவந்து சேர்க்கும்
ஒருவரைப்பற்றி
நன்காராய்ந்து அறியாது அவரை பணிக்குத் தேர்வு செய்தல், ஒருவரைத் தேர்ந்தெடுத்தபின் அவர் மீது ஐயம் கொள்ளுதல்
ஆகிய இரண்டுமே ஒருவரைத் அகலாத துன்பத்தில் கொண்டு சேர்த்துவிடும் என்பதே இக்குறள் சொல்லும்
கருத்து. “எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” என்று முன்னரே வள்ளுவர் சொல்லியிருக்கிறார். முன்னர்
இழுக்கு என்று சொல்லிய வள்ளுவர், இப்போது அவ்விழுக்கின் உச்சமாக முடிவிலாத் துன்பமே
வரும் என்றும் கூறுகிறார்.
ஆராயாமல்
தேர்வு செய்தல் கூடாது என்பது தெளிவே! “அளிந்தார்கண் ஆயினும் ஆராயானாகித் தெளிந்தான்
விரைந்து கெடும்” என்பது பழமொழி. தன்னிடத்தில் அன்பு கொண்டவராக இருந்தாலும், ஒருவரை
ஆராயமல் தேர்வு செய்தால் அது அழிதலுக்கான வழியே.
சென்ற
குறளில் ஆராயாமல் ஒருவரையும் தேர்வு செய்யக்கூடாது என்றும், ஆராய்ந்து தேர்ந்தெடுத்த
ஒருவரை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லிவிட்டு, இக்குறளில் அவ்வாறு நம்பாமல்
இருப்பது நீங்காத் துன்பத்தைத் தரும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? பரிமேலழகர்
உரை தெளிவாக்குகிறது.
ஒருவரைத்
தேர்ந்தபின் அவரிடம் ஐயம் கொண்டால், அவர் அதை அறிந்தால், செய்யும் திறனிருந்தாலும்,
வினையில் ஈடுபாடும் ஆர்வமும் குறையலாம், சிதையலாம். இதைப் பழமொழிப் பாடல் வரிகள் அழகாகக்
கூறுகின்றன. ““தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க”. தெளிவாக நண்பு பூண்ட ஒருவரையே பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால்,
நம்மையும் இவ்வாறே உரைப்பார் என்று கருதி, அவரை நம்பக்கூடாது என்கின்றன இவ்வரிகள்.
தவிரவும்
பகைவர்கள் இதை அறியும்போது, பிரித்தாளுக்கைக்கும் இது ஏதுவாக அமைந்துவிடும். தொடங்கிய
வினை துவளும், துன்பமே வந்துறும்.
இன்றெனது குறள்(கள்):
ஓராது ஏற்றலும் ஏற்றபின் ஐயமும்
தீராத துன்பம் தரும்
OrAdhu
ERRalum ERRapin aiyamum
thIrAdha
thunbam tharum
எண்ணாமல் ஏற்றலும் ஏற்றார்மேல் ஐயமும்
திண்ணமாய் துன்பே தரும்
eNNAmal ERRalum ERRArmEl aiayamum
thiNNamAi thunbE tharum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam