16th Sep 2013
தேறற்க
யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
(குறள் 509: தெரிந்து தெளிதல் அதிகாரம்)
Transliteration:
thERaRka yAraiyum thErAdhu thErndhapin
thERuga thERum poruL
thERaRka – Don’t trust
yAraiyum - anyone
thErAdhu – without investigating fully
thErndhapin- after investigating and making sure about the
person
thERuga – trust
thERum – the trusted
poruL - object
This verse says: Never
trust anyone without fully testing. Only fully tested, never keep doubting the
tested. It is a little confusing because the testing has been said on people
that will be trusted for a job, but the trust has been said for the subject. If we interprest the subject as the trusted
subject, it could either be either people or the object of trust. This is
generally in vogue too. This confusion will not be there in the next verse as
that verse clearly talks about doubting the trusted one briging misery..
“Never trust anyone unless fully tested
Once tested, trust the subject entrusted”
தமிழிலே:
தேறற்க - தெளிவுறல் வேண்டா
யாரையும் - யாராயினும்
தேராது - அவரைப் பற்றி ஆய்ந்தறியாது
தேர்ந்தபின் - ஆய்ந்தறிந்தபின்
தேறுக - நம்புக
தேறும் பொருள் - தெளிவுற்ற பொருளை
யாராயினும் அவரை ஆராயாது தெளிவுற
வேண்டாம், ஆய்ந்தறிந்தபின் ஆய்ந்தபொருளில் ஐயம் கொள்ளவும் வேண்டாம், என்பதே இக்குறளின்
கருத்தாகும். தெளிவுறுதல் மனிதர்களைப்பற்றியும்,
ஐயம் கொள்ளாதிருப்பதைப் பொருளின் மேலும் ஏற்றிச் சொல்வது சற்று குழப்பமாக இருந்தாலும்,
நம்பும் பொருள் என்பதை, நாm நம்புகிற கருத்து என்று கொண்டால், காணும் பொருள், மனிதர்கள்
எல்லாவற்றின் மேலும் ஏற்றிச்சொல்வது வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். இந்த குறளுக்கான குழப்பத்தை
அடுத்த குறள் தெளிவிக்கும். நம்புக என்று இக்குறள்
வலியுறுத்துகிறது. நம்பாமை துன்பம் தரும் என்று அடுத்த குறள் சொல்லுகிறது.
இன்றெனது குறள்:
ஒவ்வாதீர் ஓரா தொருவரை ஓர்ந்தபின்
ஒவ்வுக ஒட்பமென்று ஓர்ந்து
ovvAdhIr oRA dhoruvarai Orndhapin
ovvuga oTpamenRu Orndhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam