15th Sep 2013
தேரான்
பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
(குறள் 508: தெரிந்து தெளிதல் அதிகாரம்)
Transliteration:
thErAm piRanaith theLindhAn vazhimuRai
thIrA iDumbaith tharum
thErAm – not deeply researched about someone
piRanaith – that someone
theLindhAn – accepting that someone to work
vazhimuRai – ways of the person who does such things
thIrA - unending
iDumbaith – misery it will
tharum - cause
All commentators
have written a similar type of commentary, probably influenced by the first one
to appear, whatever it was, rather blindly. The phrase “thIrA iDumbaith tharum” means, “never ending misery and difficulties”. This begets a question “what?”. vaLLuvar answers that question
by the preceding word “vazimuRai” and
it obviously means, “the methods of the person” – that probably has done
something untenable. Most commentators
including Parimelazhagar have interpreted “vazhimuRai”
as “successive generations”; that does
not fit the word arrangement of the verse. Perhaps, instead of “tharum”, if the verse had the word, “uRum” it would make sense as written in
commentaries.
This is what the
verse means as the verse is read: “ A person (of authority) who does not think,
research and understand the persons that he wants to hire will suffer, because
of his own functioning ways, that would bring him endless misery or difficulty.
This is an acceptable and understandable reality. When somebody driven by the pride of
authority knowingly or unknowingly hires wrong fit for his work, his very
functioning style will set him in trouble, is certainly a buyable argument.
Perhaps a
different way of interpreting would go well with other commentators. As we have
seen in highly politicized environment, not bothering about meritocrazy when
somebody hires his own kith and kin for jobs that they are unfit for, then it
would bring unending misery because of his functioning ways of favoritism.
Also, indirectly such bad practices would not only bring misery to self, but to
the same persons that were favored also eventually.
“Ways of a person that trusts others without testing
would
bring him misery of life time, forever lasting”
தமிழிலே:
தேரான் - ஆராய்ந்து அறியாது
பிறனைத் - மற்றவரைத்
தெளிந்தான் - முடிவுசெய்தவனின் (தன்பணிக்கு அமர்த்த)
வழிமுறை - செயலாக்க முறைகள்
தீரா - முடிவிலாத
இடும்பை - துன்பத்தைத்
தரும் - தந்துவிடும்
இக்குறளுக்குப்
உரை எழுதிய எல்லோருமே முதலில் யார் எழுதியிருப்பார்களோ, அவரைப் பின்பற்றி குருட்டுத்தனமாக
எழுதியதாகத் தெரிகிறது, குறள் “தீரா இடும்பைத்
தரும்” என்று, அதாவது “முடிவில்லாத துன்பத்தைத்
தரும்” என்று முடிகிறது. உடன், “எது?”
என்னும் கேள்வியும் எழுகிறது. அதற்கு வள்ளுவரே “வழிமுறை” என்கிறார். இதை பொதுவாக ஒருவரின்
“செயலாற்று வகை” என்று கொள்ளுவதே பொருத்தம். பரிமேலழகர் உட்பட பெரும்பாலானோர், “ஒருவரின் வழித்தோன்றல்கள்” என்று பொருள் வர
உரைசெய்துள்ளனர். இது “தரும்” என்ற ஈற்றுச் சொல்லுக்கு பொருந்தாது. “உறும்” என்று வள்ளுவர் எழுதியிருந்தால் அவ்வாறு
கொள்ள வாய்ப்புண்டு.
இப்போது
குறளின்கருத்து சொல்வது இதுவாகத்தான் இருக்கமுடியும். “ஆராய்ந்து செயல்களாற்றாத மற்றவன் ஒருவனை தன்பணிக்கு அமர்த்த முடிவுசெய்தவனின்
செயலாற்றும் வழிமுறைகளே அவனுக்கு தீராத, முடிவிலாத துன்பத்தினைத் தரும். இது உண்மையிலேயே
நடக்கக்கூடியதும் கூட. ஆராயாது செயலாற்றுபவனை தேர்வு செய்பவனும் ஒன்று ஆராயாமல் செய்பவனாக
இருத்தல் வேண்டும்; அல்லது தன் ஆளுமையின் பெருமையினால் தவறென்று அறிந்தும் சிலரை தனக்கு
வேண்டியவர்களைப் பணியமர்த்தும் வழிமுறைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவ்வழிமுறைகளானது அவருக்கு முடிவில்லாத
துன்பந்தானே தரும்?
ஆனால்
இன்னும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்வோமானால், ஒருவர் அதிகாரச் செருகினால், தகுதிகளற்றும்
அவரது வழித்தோன்றல்களுக்குத்தானே (அது அவரது
வாரிசுகளோ, அடிவருடிகளோ) பணிவாய்ப்பினைக் கொடுப்பார்? அப்படிக்கொடுத்தால், அவ்வழித்தோன்றல்கள்
அவருக்கு தீராத துன்பத்தைத்தானே தரும்? இது அரசியல் உண்மையாக பார்ப்பதுதானே! எனவே துன்பம் வருவது வழித்தோன்றல்களால் என்கிற அளவில்
இப்படியும் கொள்ளலாம். அவ்வாறு செய்த்தலினால் முதலில் வழிமுறைகளால் தனக்குத் துன்பமும்,
பின் அவர்களுக்கே துன்பமும் வரச்செய்வதாகக் கொள்ளலாம்!
இன்றெனது குறள்:
ஆய்ந்து பணிக்கொருவர் கொள்ளார் செயல்களாலே
தோய்ந்துவருந் துன்பமே யாம்
Ayndhu paNukkoruvar koLLAr seyalgaLAlE
thOyndhuvarun thunbamE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam