செப்டம்பர் 14, 2013

குறளின் குரல் - 514


14th Sep 2013

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
                            (குறள் 507: தெரிந்து தெளிதல் அதிகாரம்)

Transliteration:
kAdhanmai kandhA aRivaRiyArth thERudhal
pEdhamai ellAndh tharum

kAdhanmai – the attachment of affection
kandhA – and the binding that begets because of it
aRivaRiyArth – those who don’t have the intellect of what needs to be known
thERudhal – to have them by side to work
pEdhamai – darkness of ignorance
ellAndh tharum - will beget more of that only

Because of the attachment of excessive affection to someone, ignoring their stark ignorance and keeping them close, to work for self will beget only permanent ignorance and the ensuing repurcussions to a person of power and authority. This is the summary of thought expressed in this verse.

The normal human tendency is to keep people that someone cares for, attached to close to them; but driven by that alone, if a person of power and authority keeps the people that they are attached to, especially knowing that they are utter ignorant of what is needed for their work, it would be invariably disastrous; It would also make them (person of power and authority) look ignorant and stupid too.

A poem from “pazhamozhi nAnURu” says, even Lord Vishnu, who has the victorious bird Garuda as his vehicle, will not do what is not proper, out of compassion or out of his duty of protecting if it would bring disaster. Hence intelligent people would not select people to do their work, because they are relatives or friends.

Fondness should not blind a person to keep ignorant
 Else blind and ignorant will he be forever, permanent”

தமிழிலே:
காதன்மை - அன்பாகிய பற்றுக்கோட்டால்
கந்தா - (வரும்) பிணைப்பால்
அறிவறியார்த் - அறியவேண்டியவற்றை அறியாத அறிவிலாரைத்
தேறுதல் - தம் பணிக்குத் துணையாக கொள்ளுதல்
பேதைமை - மேலும் மடமை, அறியாமையாகிய பல இருள்சேர் கேடுகள்
எல்லாந் தரும் - எல்லாவற்றையும் தரும்

ஒருவர் மேலிருக்கும் அன்பினால் பிணைக்கப்பட்டு, அவர் மடமையைப் பாராட்டாது, அவரை தம் பணிக்குத் துணையாகக் கொள்ளுதல் ஒருவரை என்றுமே மடமையாம் இருளில் ஆழ்த்தி வீழ்த்திவிடும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.

தம்மேல் அன்புடையாரை, தாம் அன்பு செலுத்துவோரை, அணுக்கமாகக் கொள்வதும் எல்லோருமே செய்வதுதான். ஆனால் தம்பணிக்குத் தேவையான அறிவேதும் இல்லாரை அன்பின் காரணமாக மட்டுமே தேர்தல், ஒருவரை அறியாமையாகிய இருளில்தான் என்றும் ஆழ்த்தும்.  பழமொழி நானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை

அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்

ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்

சீர்ந்தது செய்யாதா ரில்.

வெற்றிதரும் கருடன்மேல் ஏறி வரும் திருமால் முதலியோர்களும் சீரில்லாதனவற்றைச் செய்யார். ஆகவே, சுற்றத்தார், நண்பர் என்று அவர் செய்யும் செயல்கள் நல்லன என்று ஆராயாமல் கொள்ளார் அறிவுடையார்.

இன்றெனது குறள்:
அன்பின் பிணைப்பால் அறிவிலாரைச் சேர்த்திட
என்றும் இருளிலாழ்த் தும்

இருள்- அறிவின்மை

anbin piNaippAl aRivilArais sErndhida
enRum iruLilAzhth thum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...