செப்டம்பர் 13, 2013

குறளின் குரல் - 513


13th Sep 2013

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.                                   
                            (குறள் 506: தெரிந்து தெளிதல் அதிகாரம்)

Transliteration:
aRRAraith thERudhal Ombuga maRRavar
paRRilar nANAr pazhi

aRRAraith – Interpreted as those who don’t have kith and kin by most commentators
thERudhal – selecting them to work in a job
Ombuga – must be avoided
maRR(u) avar –(avar maRRu) -> they also have + other
paRRilar – no attachment towards anyone
nANAr pazhi – will not be shameful of blame

yAdhum UrE yAvarum kELir” are the golden words of sangam poet, “kaNiyan pUnkunRanAr” that are truly reflective of Tamil culture’s elevated thinking. As far as this verse is concerned, most commentators from Parilmelazhagar have interpreted the word, “aRRArai” as  “without kith and kin” and have based their commentary building on it. MaNakkuDavar would interpret that as “one without discipline of good traits”. ParidhiyAr would interpret it as “wealth, kith and kin, and education”.

Regardless of how vaLLuvar really meant it, a safe understanding of “people without good virtues” would be appropriate interpretation. Then what the verse says is, “avoid employing people without any kith and kind and without good virtuous traits. They have attachment to none in the word and hence would not feel shameful to blameful acts also”.

Another word “Ombudhal” used in this verse has diametrically opposite meanings, in Tamil dictionaries as well as literary use. It means both, practicing as well as avoiding. It is very likely one of them is wrong interpreatation and has stuck through ages. 

Though the general commentary goes alone the above lines of thought, we can interpret it differently too. People that have no relatives to bias must be selected for key jobs as they would not swayed in their decisions. Since they have no attachment they would not fear that others would blame their unbiased actions in situations that need tough measures.

aRRAr” is such a common word, with a general meaning of “persons that have none”. Since it does not come with any pre-tag, it could be attached to the chapter heading and the entire verse would mean along the lines of other interpretations.

“Avoid assigning a job to a person without any kith and kin
 As they’ve no shame for blame, and ‘ve attachment none.”

தமிழிலே:
அற்றாரைத் - உறவுகளும், சுற்றங்களும் இல்லாரை
தேறுதல் - அவரை ஓர் பணிக்கும் அமர்த்தலை
ஓம்புக - தவிர்க்க
மற்றவர் - அவர் + மற்று - அவர் உலகத்தில் வேறு
பற்றிலர் - பற்றுகளும் இல்லாதவர்
நாணார் பழி - வரும் பழிகளுக்கும் வெட்காதார்                                 

பொதுவாகவே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற கணியன் பூங்குன்றனாரின் பொன்னான சொற்களை கொண்டாடி உலகையே உறவாகவும், உலகினரை உறவினர்களாகவும் சொல்வது தமிழ் பண்பு. பரிமேலழகர் தொடங்கி அத்துணை உரையாசிரியர்களும் “அற்றாரை” என்ற சொல்லை “சுற்றம் அற்றவர்” என்றே கொண்டுள்ளனர். மணக்குடவர், “ஒழுக்கம் அற்றாரை” என்பார். பரிதியார் “பொருளும், கிளையும், கல்வியும்” அற்றாரை என்பார்.

எதுவாயினும், பொதுவாக நற்பண்புகள் ஏதும் அற்றாரை என்று கொள்வதே சரியாக இருக்கும். அவர்களைப் பணிகளில் அமர்த்துவதை தவிர்க்கவேண்டும்.  ஏனெனில் அவர் உலகத்தின் மேல் பற்றுகள் இல்லாதவர்கள்; அதனால் உலகோர் மீதும் பற்றிலாதவர்கள். பழி வரும் செயல்களைச் செய்யவும் அஞ்சமாட்டார்கள்.

 “ஓம்புதல்” என்ற சொல் கடைபிடித்தல், தவிர்த்தல் என ஒன்றுக்கொன்று எதிரான பொருள்களில் அகராதிகளில் கூறப்படுகிறது, இலக்கியங்களிலும் கையாளப்பட்டிருக்கிறது.

உரை இவ்வாறு சென்றாலும், மாற்றிப் பொருள் கொள்வதும் ஆளுவோரைப் பொருத்தவரை சரியாயிருக்கும். உலகில் உறவுகளின் பிணைப்புகளும், அவற்றால் வரும் நடுவுநிலை பிறழ்தல்களுக்கு ஆளாகாதவர்களுமாக கண்டு தேர்ந்து அவர்களை பணிகளுக்கு அமர்த்துக.  தவிரவும் அவர்கள் பற்றுகள் ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் அரசு நிமித்தமாக எடுக்கவேண்டிய முடிவுகளுக்காக மற்றவர்கள் அவரைப் பழிப்பார்களேயாயின், அதற்காகவும் வெட்குதலும், அஞ்சுதலும் செய்யமாட்டார்கள்.

பொதுவாக “அற்றாரை” என்றதால் அச்சொல்லை அதிகாரத்தலைப்பின் தொடர்பாகக் கொண்டு, “தெரிந்து தெளிதல் அற்றாரை” என்று கொண்டால், மற்ற உரைகளோடு பொருந்திவரும்.

இன்றெனது குறள்:

ஒட்டிவாழார் வெட்கார் பழிவரினும் கேளிரில்லார்
வெட்டிவாழ்வீர் அன்னார் தொடர்பு

oTTivAzhAr veTkAr pazhivarinum kELirillAr
veTTIvAzhvIr annAr thoDarbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...