செப்டம்பர் 12, 2013

குறளின் குரல் - 512


12th Sep 2013

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.                         
                         (குறள் 505: தெரிந்து தெளிதல் அதிகாரம்)

Transliteration:
Perumaikkum Enaich chirumaikkum thaththam
karumamE kaTTaLaik kal

Perumaikkum – A person’s glory, growth
Enaich chirumaikkum – and the fall or decline
Thaththam – what they do
karumamE – collectively their deeds
kaTTaLaik kal – become the touch stone (where the gold is found it is indeed so!)

A touchstone is used to findout the quality of precious metals like gold and silver. Likewise the acts of someone will serve as the touch stone for their greatness or meanness. Before selecting someone to be part of a team, person of authority must pay attention to the kinds of deeds, involvement, how they are done to understand the person, their greatness or lack of it, to include in the team.

In Kambaramayanam, Thaarai, diseased Vali’s wife asks Rama if what he did invalidates the thought expressed in this verse. She laments, “O Rama you have the bow that serves as a medicine to others sorrow; but you have engaged in a deed that does not befit a virtuous person. Perhaps the saying that the deeds of virtuous people serve as the touchstone of greatness has gone untrue!”

A verse in Thirumanthiram also says, deeds of a person serve as his friend and foe; what befalls in this and future births; make him the recipients of the results of his deeds; make his the master of his own based on his deeds – thus serve him as the touch stone for his life.

“Each one’s deeds serve as touchstone
 Of their greatness and decline known”

தமிழிலே:
பெருமைக்கும் - ஒருவர் அடையக்கூடிய பெருமைக்கு, பெற்றிமைக்கு, ஏற்றத்துக்கு
ஏனைச் சிறுமைக்கும் - மற்றும் அவர் அடையக்கூடிய சிறுமை அல்லது இழிவுக்கு
தத்தம் - அவரவர் செய்கின்ற
கருமமே - வினைகளே, செயல்களே
கட்டளைக் கல் - உரைக் கல்லாகிவிடும்                   

உரைகல் என்பது தங்கம் வெள்ளி போன்ற அரிய உலோகங்களை உரைத்துப் (தேய்த்து) பார்த்து, அவற்றின் தரத்தை அறிய உதவும் கல். ஒருவர் செய்கிற வினைகளே அவரின் தரத்தை உணர்த்துகிற உரைகல்லாகிவிடுவதைத்தான் இக்குறள் வழியாகச் சொல்லுகிறார். இதையும் ஒருவரை அறிவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகக் கொள்ளவேண்டும். ஒருவர் பொதுவாக ஈடுபடும் செயல்கள் என்ன, அவற்றில் அவர்களின் ஈடுபாடு என்ன, அவற்றை அவர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள் என்பதை கவனிக்கும்போது, அவர் கொள்ளப்போகும் பெருமை அல்லது சிறுமை புரிந்துவிடும்.

கம்பராமாயண வாலி வதைப்படலத்தில், வாலி இறந்ததும், அவனுடைய மனவி தாரை இராமனைப் பார்த்து கேட்பதாக வரும் பாடல் இது. அருமையான மருந்தாய் மற்றவர்க்கு துயரம் அகற்றும் வில்லினை உடைய இராமா எந்த ஒரு தருமவானுக்கும் பொருந்தாத செயலைச் செய்திருக்கிறாய். தருமம் பற்றி நிற்பவர்களுக்கு அவர்கள் செய்யும் செயல்களே உரைகல்லாக அமையும் என்பதெல்லாம் கட்டுரையாகச் சொல்லப்பட்டதோ என்று  கேட்கிறாள், இக்குறளின் கருத்தையே எதிரொலிக்கும் படியாக. - 'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்,
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,
கருமம் கட்டளை என்றல் கட்டதோ?’.  

திருமந்திரப்பாடல், “தானே தனக்கு பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும் தானே தனக்கு தலைவனும் ஆமே என்கிற திருமந்திரப்பாடல் ஒவ்வொருவரும் செய்கிற செயல்களுக்கும் அவர்களே உரைகல்லாகவும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறது.

இன்றெனது குறள்:

மக்கள்தம் ஏற்றிழிவுக் கன்னார் வினைகளே
தக்கவுரைக் கல்லாகி டும்

(ஏற்றிழிவுக் கன்னார் - ஏற்றம்+இழிவுக்கு அன்னார்)

makkaLtham ERRizhivuk kannAr vinaigaLE
thakkavuraik kallAkgi Dum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...