செப்டம்பர் 11, 2013

குறளின் குரல் - 511

11th Sep 2013

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
                          (குறள் 504: தெரிந்து தெளிதல் அதிகாரம்)

Translitration:
guNam nADik kuRRamum nADi avaRRuL
migainADi mikka koLal

guNam nADik – knowing a persons good attributes
kuRRamum nADi – also understanding what his faults are
avaRRuL – among them
migai nADi – whichever ones seem to be more
mikka – based on that excess of good or bad attributes
koLal – select them to keep as friend or for work.

In general, it is rare to find people that are full of good virtues/traits or full of faults. Even if a person is full of good virtues, there must be some undesired traits or faults even in them. Likewise for people that are observably full of faults. There will always be some good aspects about them too. A ruler or a person that needs to work with people must weigh these about everyone and know which side of the traits are on the low side of the tilt and accordingly select the right person appropriate for the job.

If good traits are more, despite the minor faults one can hire them for the job in hand. The otherway around is also true. If bad traits are more, even if there are some good attributes, it is of no use to hire such people. Friendship with them, or appointing such people for a job can both be futile.

“Analyzing and weighing a person’s good and bad traits, attributes
The tilt of the scale must decide to select him as a friend, for deeds”

குணம்நாடிக் - ஒருவரின் மேலான சிறந்த குணங்களை அறிந்து
குற்றமும் நாடி - அவரிடம் உள்ளம் குற்றங்குறைகளையும் அறிந்து
அவற்றுள் - அவற்றுள்
மிகைநாடி - எவை மிகுந்து இருக்கின்றனவோ
மிக்க - அந்த மிகுதியாக இருப்பதற்கு ஏற்ப
கொளல் - அவர்களை தோழமைக்கோ, அல்லது வேலைகளுக்கோ கொள்வதைச் செய்யவேண்டும்

பொதுவாக நல்ல குணங்களே நிறைந்திருப்பவரும், அல்லது குற்றங்களே நிறைந்திருப்பவருமாகக் காண்பதறிது. எல்லோரிடத்திலும் இரண்டுமே கலந்துதான் இருக்கும். ஒருவரை வேலையில் சேர்த்துக்கொள்ளுமுன், அவருடைய நல்ல குணங்களைத் தேர்ந்து, அவர்களிடம் காணப்படும் குற்றங்குறைகளையும் நோக்கி, இவற்றுள் எவை மிக்கன என்று தேர்தல் வேண்டும்.

நற்குணங்கள் மிகையாக இருக்குமாயின் அவர்களை குற்றம் குறைகளை புறந்தள்ளி, வேலைக்கு அமர்த்துவது பயனுள்ளதாகும். குற்றங்கள் மிகையாக இருக்குமாயின் அவர்களை வேலைக்கு அமர்த்துவது பயனைத்தராது. தோழமை கொள்ளவும் இதுவே வழிமுறை. ஆராயாமல் கூடிய நட்போ, பணி நியமனமோ, இரண்டுமே பயனாகா! இன்று இரண்டு குறளாக எழுதியதும் தோழமை, செய்யும் செயலுக்கான தேர்வு இரண்டையும் மனதில் இருத்திதான்.

இன்றெனது குறள் (கள்)

ஆன்றபண்பும் ஆசறிந்து ஆங்கவற்றுள் ஆனமிகை
தோன்றுவழி தோழமை தேடு

ஆன்ற பண்பு - சிறந்த குணம்
ஆசு  - குற்றம், மாசு

AnRapaNbum AsaRindhu AngavaRRuL Anamigai
thOnRuvazhi thOzhamai thEDu

ஆன்றபண்பு ஆசறிந்து ஆங்கவற்றுள் ஆனமிகை
தோன்றுவழி தேர்ந்து எடு

AnRapaNbum AsaRindhu AngavaRRuL Anamigai
thOnRuvazhi thErndhu eDu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...