செப்டம்பர் 10, 2013

குறளின் குரல் - 510


10th Sep 2013

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
                             (குறள் 503: தெரிந்து தெளிதல் அதிகாரம்)

Transliteration:
ariyakaRRum AsaRRAr kaNNum theriyungAl
inmai aridhE veLiRu

ariyakaRRu – learning and acquiring rare knowledge
AsaRRAr kaNNum – even if they have no blesmishes (at least outwardly)
theriyungAl – if carefully observed
inmai – devoid
aridhE – is rare
veLiRu – blemish, stupidity, whiteness (spotless)

Even if someone has learned and acquired the rarest of rare knowledge, and that too without blemishes (apparent and obvious), if carefully scrutinized, even in them there will be some blemish and it is rare to find one without – thus says this verse. There is nothing like spotless white. Even if it is full moon, there can be found, spots. Poets have used this metaphor of spotless moon profusely for ages. vaLLuvar has used a similar thought, to denote a stupidity even in people that are learned.

When the creation of omniscient has blemishes, is there any reason why humans would not have blemished however much learned they are. The point is that a ruler must be aware of this reality and still work with the best picks around the blemished. This is also the definition of understanding with clarity of people that one works with.

“Though learned with the rarest knowledge and without blemishes, difficult
 it is rare to find a person absolutely without any spot of stupidity and fault”

தமிழிலே:
அரியகற்று - கற்பதற்கு அரியனவற்றை கற்று
ஆசற்றார் கண்ணும் - மாசற்றாரிடத்தும்
தெரியுங்கால் - நுணுகி நோக்கினால்
இன்மை - இல்லாமை
அரிதே - என்பது அரிது, கடினம்தான்
வெளிறு - குற்றமும், அறியாமையும் (வெண்மை)

அரிய நூல்கள் பலவும் கற்று, மாசற்ற குணநலன்கள் உள்ளவராயினும் (வெளிப்படையாக)  நுணுகிப் பார்க்கையில் அவரிடத்தும் அறியாமையாகிய குற்றம் இல்லாமலிருத்தல் அரிதாம் - இதுவே இக்குறள் சொல்லும் கருத்து.  அதாவது முழுவதும் வெண்மையானதொன்றும் எங்குமில்லை. முழுமதியாயினும் குறையொன்று இருப்பது எத்தனைக் கவிஞர்களுக்கு உவமையாகப் பயன்பட்டிருக்கிறது, இங்கும் நிறைமதியில் குறை இருப்பதை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இங்கு சொல்லப்பட்ட “மதி” மடமையற்ற கற்றுணர்ந்த மதியுடைமை.

இது தெரிந்தவொன்றுதானே, அகண்டத்தில் குறையில்லாவொன்று உண்டா? இறைவன் படைத்தவற்றுள்ளும் எத்தனக் குறைகள்? குறைகள் என்பன ஒவ்வொரு களத்திலும், அமைப்பிலும், மனிதரிலும், மனிதர் அமைக்கும் கருவிகளிலும் உண்டு. பயனாக்கிக் கொள்வோர்க்கு, பண்பட்டவையே தேவையாயினும், ஒவ்வொன்றிலுல் உள்ள குற்றமும் அறிந்திருத்தல் மிகவும் தேவை. இதுவும் தெரிந்து தெளிதலுக்கு உண்டான இலக்கணம்தான். இதைத்தான் இக்குறள் சொல்கிறது உட்பொருளாய்.

இன்றெனது குறள்:

கற்றாய்ந்து மாசற்றும் காணுங்கால் முற்றிலுமாய்
குற்றமிலார் சற்றும் அரிது

kaRRAindhu mAsaRRum kANungAl muRRilumAi
kuRRamilAr saRRum aridhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...